உலக மிதிவண்டி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ECF campaign graphic for World Bicycle Day on 3 June 2021.jpg
Desmounting OtPiPlay.jpg
Copenhagen cycle chic.jpg
The Vice President, Shri M. Venkaiah Naidu interacting with the students participating in the Bicycle Rally, on the occasion of World Bicycle Day 2018, in New Delhi.JPG
Place Saint-Augustin, Paris December 2014 001.jpg
Bikecultureincopenhagen.jpg

உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது.[1] உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது.[2]

வரலாறு[தொகு]

அமெரிக்காவைச் சேர்ந்த லெசுச்செக் சிபிலிசுக்கி என்ற பேராசிரியர் தனது சமூகவியல் மாணவர்களுடன் இணைந்து உலக மிதிவண்டி நாளை ஐக்கிய நாடுகள் மூலம் பிரகடனப்படுத்த பரப்புரை செய்தார். இம்முயற்சிக்கு துருக்மெனிஸ்தான் உட்பட 56 நாடுகள் ஆதரவளிக்க முன்வந்தன.[3][2][4] மிதிவண்டி மனித இனத்திற்குச் சொந்தமானதென்றும் சமூகத்திற்கு சேவையாற்றும் ஒரு சாதனம் என்பதே இப்பரப்புரையின் முக்கிய செய்தியாகும்.[5]

சிறப்பு[தொகு]

உலக மிதிவண்டி நாள் இனம், மதம், பாலினம், வயது, பாலியல் சார்பு, அல்லது வேறு எந்த குணவியலையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களாலும் அனுபவிக்கும் உலகளாவிய விடுமுறை நாள் ஆகும்.[2] உலக மிதிவண்டி நாள் தற்போது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "World Bicycle Day, 3 June". www.un.org (ஆங்கிலம்). 2018-11-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 A.Res.72.272 World Bicycle Day, United Nations Resolution
  3. Senarath, Yohan (2018-05-01). "World Bicycle Day: Meet the man who made it happen" (in en). Transport for Development. https://blogs.worldbank.org/transport/world-bicycle-day-meet-man-who-made-it-happen?CID=TAI_TT_Transport_EN_EXT. 
  4. Staff. "MC Professor and Students Win UN Support for World Bicycle Day".
  5. "MC Today - World Bicycle Day".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மிதிவண்டி_நாள்&oldid=3525354" இருந்து மீள்விக்கப்பட்டது