உலக மனநல நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.[1] இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.[2][3] ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.[4]

கருப்பொருட்கள்[தொகு]

1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.

ஆண்டு கருப்பொருள்
2017 பணியிடங்களில் மனநலம்
2016 உளவியல் முதலுதவி
2015 மனநலத்தில் கண்ணியம்
2014 மனப்பித்துடன் வாழ்தல்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jenkins, Rachel; Lynne Friedli; Andrew McCulloch; Camilla Parker (2002). Developing a National Mental Health Policy. Psychology Press. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84169-295-6.
  2. Watson, Robert W. (2006). White House Studies Compendium, Volume 5. Nova Science Publishers. p. 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-60021-542-4.
  3. "World Mental Health Day". Mental Health in Family Medicine 7 (1): 59–60. 2010. 
  4. Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015 பரணிடப்பட்டது 2017-03-04 at the வந்தவழி இயந்திரம் Retrieved 15 October 2015

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மனநல_நாள்&oldid=3849001" இலிருந்து மீள்விக்கப்பட்டது