உலக மக்கள்தொகை தினம் 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலக மக்கள்தொகை கடந்த 30 ஆண்டுகளில் 50% அதிகரித்துள்ளது.1987 ம்ஆண்டு ஜூலை 11 ம்தேதி உலக மக்கள்தொகை 500 கோடியை எட்டியது.அதன் பிறகு ஆண்டுதோறும் ஜூலை 11ம்தேதியை "உலக மக்கள்தொகை தினமாக" கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக மக்கள்தொகை தினம் 2017[தொகு]

2017 ஜூலை 11 ம் தேதி 31 வது உலக மக்கள் தொகை தினமாக கடைபிடிக்கப்பட்டது.1987 பிறகு 30 ஆண்டுகளில் 50% அதிகரித்து தற்பொழுது 750 கோடியை எட்டியுள்ளது.உலகளவில் மக்கள்தொகை பெருக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியா 2வது இடம்[தொகு]

உலகளவில் 138 கோடி மக்கள்தொகையுடன் சீனா முதல் இடத்திலும்,131 கொடியுடன் இந்தியா 2 வது இடத்திலும் உள்ளன.

இந்திய மக்கள்தொகை[தொகு]

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 20 கொடியாக இந்திய மக்கள்தொகை இருந்தது.

 • 1950 ல்-37.6 கோடி
 • 1960 -44.96 கோடி
 • 1970 -55.39 கோடி
 • 1980 -69.72 கோடி
 • 1990 -87.06 கோடி
 • 1999 -100 கோடி
 • 2000 -105 கோடி

2017 ல்131 கொடியாக உயர்ந்துள்ளது.கடந்த 110 ஆண்டுகளில் 110 கோடி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டு மக்கள்தொகை[தொகு]

தமிழக மக்கள்தொகை 1951-ல்3.01கோடியாகவும்,

 • 1961-3.3 கோடி
 • 1971-4.1 கோடி
 • 1981-4.8 கோடி
 • 1991-5.5 கோடி
 • 2001-6.24 கோடி
 • 2011-7.21 கோடி
 • 2017-7.90 கொடியாகவும் உயர்ந்து உள்ளது., தமிழ் நாடு இந்திய மக்கள் தொகையில் 6%மும்,உலக மக்கள்தொகையில் 1.05% உள்ளது.குறிப்பாக இந்திய மக்கள்தொகை எண்ணிக்கையில் தமிழகம் 6 வது இடத்தில் உள்ளது.

உலக மக்கள்தொகை[தொகு]

1804 ம்ஆண்டில் 100 கொடியாகவும்,123 ஆண்டுகளுக்குப் பிறகு(1927)200 கொடியாகவும் உயர்ந்தது.

 • 1960 ல்-300 கோடி
 • 1974 -400 கோடி
 • 1987 -500 கோடி
 • 1999 -600 கோடி
 • 2011 -700 கோடி
 • 2017-750 கொடியாகவும் உலக மக்கள்தொகை அதகரித்து உள்ளது.எதிர்காலத்தில் 2024ல்-800 கோடியாகவும்,2100ல்-1120 கோடியாக உயரலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பார்வை நூல்[தொகு]

தி இந்து(தமிழ்),இராதகிருஷ்ணன்,ஜூலை-11,2017