உள்ளடக்கத்துக்குச் செல்

உலக பேரழிவு குறைப்புத் தினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பேரழிவு குறைப்புத் தினம் என்பது அக்டோபர் 13 அன்று கொண்டாடப்படுகிறது.[1]

உலகளாவிய ரீதியில் நோக்குமிடத்து காலத்துக்குக்காலம் ஏதோவொரு வகையில் மனிதகுலத்துக்கு பேரழிவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இப்பேரழிவுகளை பல கோணங்களில் இனங்காட்டலாம். மனிதனால் மனிதனுக்கு செய்யப்படும் செயற்பாடுகள். குறிப்பாக மனிதனால் உருவாக்கப்பட்ட ஆயுதங்களினால் ஏற்படக்கூடிய அழிவுகள். யுத்த அழிவுகளை இங்கு கோடிட்டுக்காட்டலாம். மனிதனால் உருவாக்கப்பட்ட அணுகுண்டு உட்பட நவீன ரககுண்டுகள் நொடிப்பொழுதில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பழிகொள்ளத்தக்கவை. செயற்கைக் காரணிகளைத் தவிர இயற்கைக் காரணிகளாலும் உலகளாவிய ரீதியில் பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

வரலாற்றுக்காலம் முதல் இயற்கைக் காரணிகள் ஏற்படுத்திய அழிவுகள் குறிப்பிடப்பட்டாலும் கூட, நவீன காலத்தில் உலகளாவிய ரீதியிலான சனப்பெருக்கமானது இத்தகைய இயற்கை அழிவுகளினால் பல்லாயிரக்கணக்கான உயிர்களை உடனடியாக காவு கொள்வதினால் அவற்றின் விளைவுகள் முன்னைய காலங்களைவிட இக்காலத்தில் விசாலமாகத் தென்படுகின்றது.

இயற்கைக் காரணிகளால் ஏற்படக்கூடிய பேரழிவுகள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை அல்லது பல பிரதேசங்களை அல்லது பல நாடுகளை ஒரே நேரத்தில் தாக்கக் கூடியதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். இப்படிப்பட்ட நிலையில் இயற்கை அழிவினை எம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியாதுவிடினும்கூட, இயற்கை அழிவுகளிலிருந்து ஓரளவேனும் பாதுகாப்பினை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தும் அது குறித்த நடவடிக்கைகளை நாம் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக ஆண்டுதோறும் உலகப் பேரழிவுத் தடுப்புதினம் அக்டோபர் 13ம் தேதி கடைபிடிக்கப்படுகிரது.

இயற்கையை வெல்ல முடியாவிடினும்கூட, இயற்கையால் ஏற்படக்கூடிய அழிவுகளிலிருந்து ஓரளவாவது பாதுகாப்பைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இத்தினத்தின் குறிக்கோளாகவுள்ளது. 2009ம் ஆண்டுக்கான உலக பேரழிவுக் குறைப்புத் தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் அவை இத்தகைய பேரழிவுகளால் ஏற்படக்கூடிய மக்களுக்கு வைத்திய வசதிகள் செய்து கொடுப்பதை விசேட அடிப்படையாகக் கொண்டு நிகழ்ச்சித்திட்டங்களை வகுத்திருந்தன.

மேற்கோள்கள்[தொகு]