உலகப் புகைப்பட நாள்
| உலக புகைப்பட நாள் World Photography Day | |
|---|---|
1839 ஆம் ஆண்டு தாகுரியோவகை புகைப்படக்கருவி | |
| பிற பெயர்(கள்) | உலக புகைப்பட நாள் |
| கடைப்பிடிப்போர் | உலகம் முழுவதும் |
| வகை | மதச்சார்பற்றது. |
| நாள் | 19 ஆகத்து |
| நிகழ்வு | ஒவ்வோர் ஆண்டும் |
உலக புகைப்பட நாள் (World photograph day)[1] புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
வரலாறு
[தொகு]20ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றை மாற்றியுள்ளன. உதாரணமாக, சீனவீரர்களின் ராணுவ பீரங்கியை எதிர்த்து நின்ற டேங்க் மேன், வியட்நாம் போரை நிறுத்த காரணமாக இருந்த சிறுமியின் புகைப்படம், 1994ம் ஆண்டு, சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்த குழந்தையின் போட்டோ ஆகியவற்றை சொல்லலாம்.
19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ் இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி , பிரான்ஸ் நாட்டு அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை ""ப்ரீ டூ தி வேர்ல்டு என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.
முதல் புகைப்படம்
[தொகு]1826 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்தது. இதன் பின், 1839ஆம் ஆண்டு லூயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலை, அருகில் உள்ள தெருவைப் புகைப்படமாக எடுத்தார். தனிநபர் எடுத்த முதல் புகைப்படம் இது.
புகைப்பட விருதுகள்
[தொகு]சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
கருப்பொருள்கள்
[தொகு]உலக புகைப்பட நாள் என்பது அனைத்து வகையான புகைப்படக் கலைகளின் உலகளாவிய கொண்டாட்டமாகும், ஆனால் ஒவ்வொரு ஆண்டும், நாம் கவனம் செலுத்த ஒரு விருப்பமான கருப்பொருளை கொண்டுள்ளோம்.
- 2022 உலக புகைப்பட நாளின் கருப்பொருள் "வில்லை மூலம் தொற்றுநோய் முடக்கம்" ("Pandemic Lockdown through the lens").[5]
- 2021 உலக புகைப்பட நாளான ஆகத்து 19 அன்று, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பாட்டியாலாவில் முல்தானி மால் மோடி கல்லூரியில் ஒரு புகைப்பட கண்காட்சி மற்றும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வு நான்கு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டது: ‘பிரதிபலிப்பு ஒளிப்படவியல்’ (Reflective Photography), ‘பாரம்பரிய ஒளிப்படவியல்’ (Heritage Photography), ‘பூ ஒளிப்படவியல்’ (Flower Photography) மற்றும் ‘படைப்பு ஒளிப்படவியல்’ (Creative Photography) ஆகியவையாகும்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Calendar, National Day. "WORLD PHOTOGRAPHY DAY - August 19". National Day Calendar.
- ↑ "World Photography Day 2025 Theme". www.worldphotographyday.com (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-19.
- ↑ "World Photography Day 2024 Theme". rps.org (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-19.
- ↑ "The theme of World Photography Day 2023". yourstory.com (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-19.
- ↑ "The theme of World Photography Day 2022". economictimes.indiatimes.com (ஆங்கிலம்) - ©2025. Retrieved 2025-08-19.
- ↑ "Exhibition on World Photography Day". modicollege.com (ஆங்கிலம்) - August 19, 2021. Retrieved 2025-08-19.
வெளி இணைப்புகள்
[தொகு]- உலகப் புகைப்பட நாள் பரணிடப்பட்டது 2011-08-24 at the வந்தவழி இயந்திரம்