உலக பிரெய்லி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பிரெய்லி நாள் (World Braille Day) ஒவ்வோர் ஆண்டும் சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று பன்னாட்டு அளவில் அனுசரிக்கப்படுகிறது. பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடு உடையோர் ஆகியவர்கள் மனித உரிமைகளை முழுமையாக உணர்ந்து கொள்ள உதவும் தகவல் தொடர்பு சாதனமான பிரெய்லியின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை இந்நாள் கொண்டாடுகிறது.[1][2] நிகழ்விற்கான தேதி 2018 ஆம் ஆண்டு ஒரு பிரகடனத்தின் மூலம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெய்லி எழுத்து முறையை உருவாக்கிய இலூயிசு பிரெய்லின் பிறந்த நாளையும் இது குறிக்கிறது.[3][4] முதல் உலக பிரெய்லி தினம் 2019 ஆம் ஆண்டு சனவர் மாதம் 4 ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டது.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பிரெய்லி_நாள்&oldid=3438804" இருந்து மீள்விக்கப்பட்டது