உலக பார்வையளவியல் மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலக பார்வையளவியல் மன்றம் (World Council of Optometry) என்பது பன்னாட்டு அளவில் கண் பராமரிப்பு வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இயங்கும் உறுப்பினர் அமைப்பு ஆகும்.[1] இம்மன்றம் உலக சுகாதார அமைப்புடன் அதிகாரப்பூர்வமான உறவைக் கொண்டுள்ளது.[1] இத்தகைய உறவைக் கொண்டுள்ள முதல் மற்றும் ஒரே ஒளியியல் அமைப்பு உலக பார்வையளவியல் மன்றம் மட்டுமே என்பது இதன் சிறப்பாகும். 40 எண்ணிக்கைக்கும் மேற்பட்டுள்ள நாடுகளின் 75 உறுப்பு அமைப்புகளிலிருந்து 250000 பார்வையளவியலாளர்கள் இம்மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.[2] உலக பார்வையளவியல் மன்றம் உலக அளவிலான பார்வையளவியல் தொடர்பான கூட்டங்களை திட்டமிட்டு நடத்துகிறது.[3]

2015 ஆம் ஆண்டு உலக பார்வையளவியல் மன்றம் அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்திலுள்ள செயிண்ட் இலூயிசு நகரத்தை தலைமை இடமாகக் கொண்ட அமெரிக்க பார்வையளவியல் சங்கத்திற்கு இடம்பெயர்ந்தது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The World Council of Optometry (WCO)". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  2. "World Council of Optometry". International Agency for the Prevention of Blindness. Archived from the original on 19 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "World Congress of Optometry". World Council of Optometry. Archived from the original on 24 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  4. "World Council of Optometry Relocating to American Optometric Association Headquarters in St. Louis". American Optometric Association. 20 May 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.

புற இணைப்புகள்[தொகு]