உள்ளடக்கத்துக்குச் செல்

உலக பக்கவாத நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக பக்கவாத நாள்
வகைசமயச் சார்பற்றது
முக்கியத்துவம்பக்கவாத விழிப்புணர்வு
நாள்அக்டோபர் 29
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை2006
மூலம் தொடங்கப்பட்டதுஉலக பக்கவாத நிறுவனம்

உலக பக்கவாத நாள் (World Stroke Day) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29 ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது.[1] பக்கவாதத்தின் தீவிர தன்மையையும் அதிக விகிதங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டுவதும் அந்த நிலையின் தடுப்பு மற்றும் சிகிச்சை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் உயிர் பிழைத்தவர்களுக்கு சிறந்த கவனிப்பு மற்றும் ஆதரவை உறுதி செய்வதும் உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படுவதன் நோக்கங்களாகும். உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் இந்த நாளில் பக்கவாதம் குறித்த கல்வி, சோதனை மற்றும் பக்கவாதத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை வலியுறுத்தும் நிகழ்வுகளை நடத்துகின்றன. 2006 ஆம் ஆண்டு உலக பக்கவாத அமைப்பு மூலம் வருடாந்திர நிகழ்வு தொடங்கப்பட்டது. உலக பக்கவாதம் நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் பக்கவாதத்தை [2] ஒரு பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. உலக பக்கவாத நாளன்று பக்கவாதம் தொடர்பான முன்னேற்றங்களை ஆதரிப்பதற்கும், தொடர்ந்து முன்னேறுவதற்குமான ஆலோசனை, கொள்கை மற்றும் பரப்புரை என ஆண்டு முழுவதும் உலக பக்கவாத நிறுவனம் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிறது.

உலக பக்கவாத பிரச்சாரத்தின் நல்லெண்ணத் தூதுவர்களாக இந்திய துடுப்பாட்ட வீரர் சுனில் கவாசுகர், [3] முன்னாள் எகிப்து அழகி தாலியா எல் பெகெரி [4] மற்றும் சைக்கிள் ஓட்டுநர் ஆல்பர்டோ காண்டடோர் ஆகியோர் செயல்படுகின்றனர்.[5]

கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் 'பக்கவாதம்' தாக்குகிறது. இந்தியர்கள் மரணிப்பதற்கான ஐந்தாவது முக்கிய காரணமாக பக்கவாதம் மாறியுள்ளது என தமிழக அரசின் ஓமந்தூரார் அரசு பல்நோனோக்கு மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி கூறுகிறார்.[6]

பக்கவாதம்

[தொகு]

பக்கவாத நோய் மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. இரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைதான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஓர் ஆபத்தான நோய் பக்கவாதமாகும்.[7][8]

மூளையின் ஒரு பகுதிக்கு இரத்தம் மிகவும் குறைவாக செல்லும் போது பக்க வாதம் என்ற மருத்துவ அவசரநிலை உருவாகிறது. மூளைத் திசுக்கள் சிதைவடைகின்றன. ஒருவரின் தோற்றம், பேச்சு, பார்வை மற்றும் உடல் செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.

உலக அளவில் மரணமும் ஊனமும் ஏற்பட பக்கவாதம் ஒரு முக்கிய காரணம். பக்கவாதம் எந்த வயதினரையும் பாதிக்கும். இதனால் பாதிக்கப்பட்டுப் பிழைத்தவர், குடும்பம், நண்பர்கள், பணியிடத்தார் மற்றும் சமூகம் என்ற அனைத்துத் தரப்பினரும் பாதிப்படைவார்.

பக்க வாத அறிகுறிகளை அறிந்து உடனடியாக மருத்துவ உதவி செய்தால் விளைவுகளைக் குறைக்கலாம்.

பொதுவான அறிகுறிகளை F.A.S.T என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு நினைவில் வைக்கலாம்:

F என்பது முகத்தைக் (face) குறிக்கும். நோயாளியை சிரிக்கச் சொல்லவும். முகத்தின் ஒரு பகுதி தொய்வு அடைந்திருக்கிறதா என்று பார்க்கவும்.
A என்பது புயத்தைக் (arms) குறிக்கிறது. நோயாளியிடம் இரு கரத்தையும் உயர்த்தச் சொல்லவும். ஒரு புயம் வெளிப்புறமாக சாய்கிறதா என்று நோக்கவும்.
S என்பது பேச்சைக் (speech) குறிக்கிறது. ஒரு எளிய சொற்றொடரைச் சொல்லுமாறு நோயாளியைக் கேட்கவும். பேச்சு குழறுகிறதா என்று கவனிக்கவும்.
T என்பது மருத்துவ ஊர்தியை அழைக்க வேண்டிய நேரத்தைக் (time) குறிக்கிறது. மேற்கண்ட அறிகுறிகளைக் கண்டால் உடனே 102 ஐ அழைக்கவும்.[9]

வரலாறு

[தொகு]

பக்கவாதம் உலகளவில் பரவலான ஒரு நோயாக தொடர்ந்து இருந்து வருகிறது . தற்போது இயலாமைக்கான மிகப்பெரிய காரணமாகவும், உலகளவில் இறப்புக்கான இரண்டாவது பெரிய காரணமாகவும் பக்கவாதம் உள்ளது. 2016 ஆம் ஆண்டில் மட்டும் இறப்பு மற்றும் இயலாமையால் இழந்த 116 மில்லியன் மக்களுக்கு பக்கவாதம் காரணமாக இருந்தது. பக்கவாதத்தின் தனிப்பட்ட வாழ்நாள் ஆபத்து தற்போது 4 இல் 1 ஆகும். மேலும் 5.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படவும் வாய்ப்பு உண்டு.[10] விழிப்புணர்வு நாளை உருவாக்கும் யோசனை 1990 ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய பக்கவாத அமைப்பின் முன்முயற்சியால் தொடங்கியது. நிதி வரம்புகள் காரணமாக இந்த முயற்சி ஐரோப்பாவில் மட்டுமே இருந்தது. ஐரோப்பிய பக்கவாத அமைப்பு இந்தத் திட்டத்தைத் தொடர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் மே [11] 10 ஆம் நாள் அன்று அதன் விழிப்புணர்வு நாளை கொண்டாடுகிறது.

அக்டோபர் 29 அன்று உலக பக்கவாத நாள் அனுசரிக்கப்படும் என்று உலக பக்கவாத நிறுவனம் 2004 ஆம் ஆண்டு கனடாவின் வான்கூவரில் நடந்த உலக பக்கவாத காங்கிரசில் நிறுவியது. [12] மருத்துவர் விளாடிமிர் அச்சின்சுகியின் வழிகாட்டுதலின் கீழ், [13] பணிக்குழு உருவாக்கப்பட்டது. அக்டோபர் 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலக பக்கவாதம் பிரகடனத்துடன் இணைக்கப்பட்டது. அதே நேரத்தில், பன்னாட்டு பக்கவாத சங்கமும் உலக பக்கவாத கூட்டமைப்பும் ஒன்றிணைந்து உலக பக்கவாத அமைப்பை உருவாக்கின. உலக பக்கவாத தினத்தின் நிர்வாகத்தை இந்த அமைப்பு எடுத்துக் கொண்டது.[14]

2009 ஆம் ஆண்டில், உலக பக்கவாத நிறுவனத்தின் தலைமையானது இந்த ஒற்றை விழிப்புணர்வு நாளை மையமாகக் கொண்டு, பக்கவாதம் கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சையில் உள்ள முக்கிய பிரச்சனைகள் பற்றிய பொது விழிப்புணர்வை மேலும் நீட்டிக்கும் அணுகுமுறையாக உருவாக்க ஆண்டு முழுவதுமான பிரச்சாரத்திற்குத் திட்டமிட்டு மாறியது. பக்கவாதத் தடுப்பு, சிகிச்சை ஆகியவற்றில் உள்ள முக்கிய பிரச்சனைகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக கருப்பொருள்களுடன் பிரச்சாரத்திற்குத் திட்டமிடப்பட்டது. பரணிடப்பட்டது 2010-10-28 at the வந்தவழி இயந்திரம் தொடர்ந்து எதிர்கால பிரச்சாரங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

கடந்த கால பிரச்சாரங்கள்

[தொகு]

2007 பக்கவாதம் குணப்படுத்தக்கூடியது

[தொகு]

2007 ஆம் ஆண்டு உலக பக்கவாத நாளின் கவனம் "பக்கவாதம் என்பது சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு நோய் என்றும் அது ஒரு தடுக்கக்கூடிய பேரழிவு என்றும் உயர் இரத்த அழுத்தம் இதன் மிகப் பொதுவான சிகிச்சையளிக்கக்கூடிய ஒரு காரணியாகும்." என்பதையும் மையமாகக் கொண்டிருந்தது.

2008 ஆம் ஆண்டின் உலக பக்கவாத நாள் அனுசரிப்பின் கருப்பொருள் "சிறிய பக்கவாதம், பெரிய பிரச்சனை" என்பதாகும். [13]

2009 பக்கவாதம் - நான் என்ன செய்ய முடியும்?

[தொகு]

2009 ஆம் ஆண்டில் உலக பக்கவாத நிறுவனம் இந்த நாளை ஆண்டு முழுவதிற்குமான அணுகுமுறையாக நிறுவியது. இப்பிரச்சாரம் உலகளவில் பக்கவாதத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான முயற்சிகளைத் தக்கவைக்கும் நோக்கம் கொண்டது. "பக்கவாதத்திற்கு நான் என்ன செய்ய முடியும்?" என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது, பக்கவாதத்திற்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதை ஆராயும்படி தனிநபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இந்த கருப்பொருள் தொடர்பான செய்தியை உருவாக்கும் போட்டி முன்னெடுக்கப்பட்டது.[12] 2009 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளராக இலங்கை தேசிய பக்கவாத சங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட்டது. தொடர்ச்சியான ஊடக மாநாடுகள், விளம்பரப் பொருட்கள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.[15]

உலக பக்கவாத நாள் நடவடிக்கைகளில் சுமார் பதினெட்டு நாடுகள் பங்கேற்றன. [16] அவற்றுள் இலங்கை மற்றும் ஆத்திரேலியா நாடுகளில் பக்கவாத பாதுகாப்பு விருதுகளை உருவாக்கின. [17] சவுதி அரேபியா, ஒரு வார பொதுக் கல்வி நடவடிக்கைகளை ஏற்பாடு செய்தது, [18] பிரேசில், சுகாதார வல்லுநர்கள் பொது சதுக்கத்தில் பக்கவாத கல்விப் பொருட்களை விநியோகித்தனர். [19] மேலும் 2009 ஆம் ஆண்டில், மங்கோலிய பக்கவாத சங்கம் அந் நாட்டில் அதிகரித்து வரும் பக்கவாதத்திற்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு [20] உலக பக்கவாத நிறுவனத்துடன் இணைந்தது.

2010 - 6 இல் 1

[தொகு]

2010 ஆம் ஆண்டில்"6 இல் 1" என்ற கருப்பொருளுடன் பரணிடப்பட்டது 2010-10-28 at the வந்தவழி இயந்திரம் அந்த நேரத்தில், பக்கவாதத்தின் வாழ்நாள் ஆபத்து 6 இல் 1 ஆக இருந்தது என்பதை வலியுறுத்துவதற்காக தொடங்கப்பட்டது. பக்கவாதம் எவருக்கும் , எந்த வயதினருக்கும் ஏற்படலாம் என்பதையும், பக்கவாதம் பற்றி மேலும் அறியவும், பக்கவாதம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரம் அமைந்தது. [21] இந்த விரிவான பிரச்சாரத்தில் நாற்பத்தெட்டு நாடுகள் பங்கேற்றன. [16] இந்திய பக்கவாத சங்கம் இருநூறு பக்கவாத மையங்களை பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள மையங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான முடிவை அறிவித்தது.[22] அமெரிக்காவில் அமெரிக்க இதய சங்க அமைப்பு உலக பக்கவாத நிறுவனத்துடன் இணைந்து ஒரு நிகழ்நேர சுகாதார மதிப்பீட்டை உருவாக்கியது.

2011 6 இல் 1

[தொகு]

2011 ஆம் ஆண்டு உலக பக்கவாத நாள் உலக பக்கவாத பிரச்சாரம் ஆண்டு முழுவதுமான பிரச்சாரத்தின் முதல் ஆண்டை நிறைவு செய்தது. உலக பக்கவாதம் நாள் 2011 உலகம் முழுவதிலுமிருந்து 2,000 பேருக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் மாபெரும் வெற்றி பெற்றது. பல மொழிகளில் 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நிகழ்நேர வெளியீடுகளின் அங்கீகாரம் பெற்றது. உலக பக்கவாத நாள் 2011 அனுசரிப்பு 2010 ஆம் ஆண்டைக்காட்டிலும் ஒரு படி உயர்ந்தது. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அதிகரித்த பங்கேற்பு இருந்தது. உலக பக்கவாதம் நாள் 2011, ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துகீசியம், அரபு, சீனம் மற்றும் பல மொழி ஊடகங்களில் அதிக வரவேற்பைப் பெற்றது. உடல்நலம், வணிகம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளிலும் பன்னாட்டு எரால்டு திரிபியூன் போன்ற வெளியீடுகளிலும் இந்த நாள் அங்கீகாரம் பெற்றது. பிரேசிலில் சுகாதார அமைச்சர் அன்றைய தினத்தை அங்கீகரிக்கும் வகையில் ஒரு வீடியோவை உருவாக்கியதால் உலக பக்கவாத நாள் சிறப்பு கவனம் பெற்றது. [23] கூடுதலாக, பிரேசிலிய கால்பந்து மன்றங்களான சியாரா மற்றும் புளு வீரர்கள் சட்டைகளை அணிந்துகொண்டு, பக்கவாத விழிப்புணர்வுக்கு ஆதரவாக சனாதிபதி வர்காசு கலந்துகொண்ட போட்டியில் அடையாளங்களை ஏந்திச் சென்றனர். [24] [25] உலக பக்கவாதம் நாள் 2011 சமூக வளைதளங்களில்[26] [27] உலகளாவிய பங்களிப்பை பெற்றது.

2012 - ஏனென்றால் நான் கவலைப்படுகிறேன்

[தொகு]

2012 ஆம் ஆண்டு உலக பக்கவாத நாள் "ஏனென்றால் நான் கவலைப்படுகிறேன்" என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டது. இப்பிரச்சாரம் ஆறு பக்கவாத சவால்களுக்கு உறுதியளிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டது:

 • உங்கள் தனிப்பட்ட ஆபத்து காரணிகளை அறிந்து கொள்ளுங்கள்: உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உயர் இரத்த கொழுப்பு.
 • உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும், தொடர்ந்து உடற்பயிற்சியும் செய்யுங்கள்.
 • ஆரோக்கியமான நிலையில் இருக்கவும் இரத்த அழுத்தத்தை குறைவாக வைத்திருக்கவும் பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த உப்பு கொண்ட ஆரோக்கியமான உணவைப் பராமரியுங்கள்.
 • மது அருந்துவதை கட்டுப்படுத்துங்கள்.
 • சிகரெட் புகைப்பதை தவிர்க்கவும். நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தால் உடனடியாக நிறுத்த உதவியை நாடுங்கள்.
 • பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
 • 1ஆவது பரிசு: நரம்பியல் துறை, பல்கலைக்கழக மருத்துவமனை, மான்டேரி, நியூவோ லியோன், நகர்ப்புற மற்றும் கிராமப்புற பக்கவாதப் பிரச்சாரத்துடன்.
 • 2ஆவது பரிசு: பிரேசிலிய நரம்பியல் சங்கம்/பிரேசிலிய பக்கவாத சங்கம் மற்றும் பிரேசிலிய சுகாதார அமைச்சகம்.
 • 3ஆவது. பரிசு: மங்கோலியன் பக்கவாத சங்கம்.

2013 - ஏனென்றால் நான் கவலைப்படுகிறேன்

[தொகு]

2013 ஆம் ஆண்டின் உலக பக்கவாத பிரச்சாரத்தின் முக்கிய கருப்பொருள் "ஏனென்றால் நான் கவலைப்படுகிறேன்" என்ற முழக்கமே மீண்டும் பயன்படுத்தப்பட்டது [28] பிரச்சாரம் நோயைப் பற்றி நிலவும் தவறான தகவல்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. பண்பாட்டுப் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைவரும் சரியான புரிதலுடன் பொறுப்பேற்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. பக்கவாதம் குறித்த முந்தைய தவறான புரிதல்களை சரிசெய்வதற்கும் ஆபத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது உயிர் பிழைத்தவர்கள் பற்றி மேலும் அறிந்துகொள்வது போன்றவற்றைப் பற்றி சிந்திக்கவும் ஒவ்வொருவரையும் இது ஊக்குவித்தது. பக்கவாத சமூகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே வழித்தடங்களாக இருக்கும் பராமரிப்பாளர்களின் பங்களிப்புகளையும், சரியான தகவலைப் பரப்புவதற்கான ஒரு முக்கியமான பாதையையும் இது கொண்டாடியது. [29] பிரச்சாரம் உலகெங்கிலும் உள்ள உள்ளூர் அமைப்புகளுடன் விரிவான ஒத்துழைப்பை உருவாக்கியது மற்றும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டில் வெற்றிகரமான ஊடகப் பரவலையும் பெற்றது.

சுவீடன் முதல் மங்கோலியா வரை 70 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நாடுகளிலும், உருது முதல் பிளெமிசு வரை 23 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மொழிகளிலும் இந்த பிரச்சாரம் காணப்பட்டது. 700 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட செய்தித்தாள் கட்டுரைகள் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி ஒளிபரப்புகளில் பிரச்சாரம் இடம்பெற்றது. பக்கவாத விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மலேசியாவின் தேசிய பக்கவாத சங்கம் கோலாலம்பூரில் "நம்பிக்கை நடையை" நடத்தியது. உலக பக்கவாத இயக்கம் மெக்சிகோ 2013" என்ற திட்டத்தின் முன்முயற்சி தொடங்கியது. மெக்சிக நரம்பியல் அகாடமி , (AMN), மெக்சிக பெருமூளை இரத்தக் குழாய்கள் சங்கம், தேசிய சுகாதார அதிகாரிகள் சங்கம் மற்றும் மெக்சிகோவில் இருந்த 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மருத்துவ சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் உதவியுடன் இம்முன்னெடுப்பு உருவாக்கப்பட்டது. நைசீரியாவில் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் ஆரோக்கிய பேச்சு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெருவில், அணிவகுப்பு நடத்தப்பட்டது. அமெரிக்காவில், அமெரிக்க இதய சங்கம் பக்கவாத தடுப்புக்கான ஐபோன் செயலியை அறிமுகப்படுத்தியது. இலங்கையில், பிளேம் என்ற இசைக் குழு உலக பக்கவாத நாளை கொண்டாடும் வகையில் ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தியது. சுவீடனில், பக்கவாதம் தொடர்பான அறிவை ஊக்குவிக்கும் சுவீடிய நகைச்சுவை நடிகருடன் ஒரு தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பப்பட்டது.

2014 - நான் ஒரு பெண்

[தொகு]

2014 ஆம் ஆண்டின் உலக பக்கவாத நாள் பிரச்சாரத்தின் கவனம் பெண்களுக்கு பக்கவாதத்தின் குறிப்பிட்ட தாக்கம், அவர்களின் குறிப்பிட்ட பக்கவாத ஆபத்து காரணிகள் மற்றும் கவனிப்பு பொறுப்புகளின் சமநிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பிரச்சாரத்தின் கருப்பொருள் 'நான் பெண். உலகளவில், ஆண்களை விட பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியது. 10 இல் 6 பேருக்கு பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்புகள் பெண்களில் ஏற்படுகின்றன. பெரும்பாலும் வயதான பெண்களுக்கு அதிக எண்ணிக்கையில் இது நிகழ்கிறது. பெண்களுக்கு மிகவும் பொதுவான பல முக்கியமான ஆபத்து காரணிகளும் உள்ளன. வயதான பெண்களில் ஊற்றறை இதயநாரிழைக் குலைவு, நீரிழிவு, மனச்சோர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை இதில் அடங்கும். நாளப்பைசார்ந்த சிலந்தி வலையுருச்சவ்வு இரத்தக்கசிவும் பெருமூளை சிரை இரத்த உறைவும் போன்ற சில பக்கவாத துணை வகைகள் பெண்களில் மிகவும் பொதுவானவையாகும். கர்பகால வலிப்பு, கர்ப்பம் தொடர்பான உயர் இரத்த அழுத்தக் கோளாறுகள் மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்றவை பாலின- குறிப்பிட்ட ஆபத்து காரணிகளில் அடங்கும். சில சந்தர்ப்பங்களில் இயக்குநீர் மருந்துகள் பொருத்தமானவையாக இருக்கும். பெண்கள் ஆண்களை விட மோசமான பக்கவாத விளைவுகளைக் கொண்டுள்ளனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தேவையான தரமான கவனிப்பு கிடைக்காது என்பதற்கு சில சான்றுகள் உள்ளன. பராமரிப்பின் சுமை முக்கியமாக பெண்கள் மீது விழுகிறது. பெண் பராமரிப்பாளர்கள் தங்களுக்கு மன ஆரோக்கியம் மற்றும் மனச்சோர்வின் குறிப்பிடத்தக்க விகிதங்கள் குறைவதாக தெரிவிக்கின்றனர். உலகெங்கிலும் உள்ள உலக பக்கவாத நாள் செயல்பாடுகளில் இந்த கருப்பொருள்கள் வலியுறுத்தப்படுகின்றன.

2015 - நான் ஒரு பெண்

[தொகு]

2015 ஆம் ஆண்டிலும் உலக பக்கவாதம் பிரச்சாரம் பெண்கள் மீது கவனம் செலுத்தியது. ஆண்டு முழுவதும் பக்கவாத நோய் பிரச்சாரமானது. பக்கவாதத்திற்கு எதிரான போராட்டத்தைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வைத் தீவிரப்படுத்துவதை நோக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பக்கவாத அறிவை வழங்குதல் பிரச்சாரத்தின் மையமானது. பன்னாட்டு பார்வையாளர்களிடம் பெண்களைப் பற்றிய விவாதத்தை மேம்படுத்தியது. 2015 ஆம் ஆண்டில் 190 நாடுகளில் இருந்து 141 நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டன. உலக பக்கவாத நாள் தொடர்பான கட்டுரைகளை நிகழ்நேரத்தில் படிக்க 12.9 பில்லியன் வாய்ப்புகளை உருவாக்கியது.

2015 ஆம் ஆண்டில் உலக பக்கவாத நிறுவனத்தின் பிரச்சாரக் குழு கிளாசுகோவில் உலக பக்கவாத பிரச்சார உத்தி பட்டறையை நடத்தியது. பிரச்சாரத்திற்கான மூன்று ஆண்டு முன்னோக்கிய திட்டத்தையும் உருவாக்கியது. உறுப்பினர்கள் ஆலோசனைகளில் கூடுதல் ஆதரவை வழங்குவதற்கும், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலக பக்கவாத நாள் கருப்பொருளுக்குப் பதிலாக வருடாந்திரத்திற்கு மாற்றுவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்த பிரச்சாரமானது, அங்கீகாரம், சிகிச்சை, தடுப்பு மற்றும் பக்கவாதத்திற்குப் பிந்தைய வாழ்க்கை ஆகியவற்றை உள்ளடக்கிய பராமரிப்பு தொடர்ச்சியின் வெவ்வேறு பகுதியில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டது.

2016 - உண்மைகளை எதிர்கொள்ளுங்கள்: பக்கவாதத்திற்கு சிகிச்சை உண்டு.

[தொகு]

2016 ஆம் ஆண்டு உலக பக்கவாத நாள் பக்கவாதம் தவிர்க்க முடியாத பேரழிவு என்ற பொதுக் கண்ணோட்டத்தை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அறிகுறி அங்கீகாரம் மற்றும் சிறப்பு பக்கவாத சிகிச்சைக்கான அணுகல் ஆகியவற்றின் பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் பக்கவாதம் ஒரு சிக்கலான மருத்துவப் பிரச்சினை என்றாலும், அதன் தாக்கத்தை கணிசமாகக் குறைக்க வழிகள் உள்ளன என்று பிரச்சாரத்தை அங்கீகரித்தது. பக்கவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொருவரும் - தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், சுகாதார வல்லுநர்கள் மற்றும் அரசாங்கங்கள் இணைய வேண்டும் என்று பிரச்சாரம் அழைப்பு விடுத்தது. உலகெங்கிலும் பக்கவாத சிகிச்சை மையங்கள் பராமரிப்பின் மேம்பட்ட தரத்தை ஆதரிப்பதற்கும் இயக்குவதற்கும் உருவாக்கப்பட்டது. உலகளாவிய பக்கவாத சேவைகள் வழிகாட்டுதல் மற்றும் செயல் திட்டத்தை பரப்புவதில் பிரச்சார கவனமும் இணைக்கப்பட்டுள்ளது. [30]

2017 - உங்கள் காரணம் என்ன?

[தொகு]

2017 ஆம் ஆண்டில், உலக பக்கவாதம் பிரச்சாரம் பக்கவாதத்தைத் தடுப்பதில் மீண்டும் கவனம் செலுத்தியது. 2017 ஆம் ஆண்டின் பக்கவாத இயக்கம் ஆய்வின் ஆராய்ச்சித் தரவுகளால் இயக்கப்பட்டது. இம்முன்னெடுப்பு பக்கவாதத்திற்கான முக்கிய உலகளாவிய ஆபத்து காரணிகளையும் உலகம் முழுவதும் அவற்றின் பரவலையும் அடையாளம் கண்டுள்ளது. [31] 90% பக்கவாதம் 10 முக்கிய ஆபத்து காரணிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் பக்கவாதத்தைத் தடுக்க நாம் அனைவரும் செய்யக்கூடிய ஒன்று உள்ளது என்றும் பிரச்சாரம் எடுத்துக்காட்டியது. உலக பக்கவாத நாளன்று உலக பக்கவாத நிறுவன உறுப்பினர்கள், பங்குதாரர்கள் மற்றும் பக்கவாத பங்குதாரர்கள் சமூகம் போன்றவற்றை பக்கவாத அபாயம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும், தனிப்பட்ட மற்றும் மக்கள் மட்டத்தில் பக்கவாதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் தங்களால் முடிந்ததைச் செய்யவும் ஒன்று திரட்டியது. பக்கவாதத்தால் தப்பியவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் சமூக ஊடகங்கள், உலக பக்கவாத நிறுவன வலைப்பதிவுகள் மற்றும் நிகழ்வுகளில் தங்கள் பக்கவாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அணிதிரட்டப்பட்டனர். அவர்களின் வாழ்க்கையில் பக்கவாதத்தின் தாக்கத்தை எடுத்துரைத்து,. பக்கவாதத்திலிருந்து மீள்வதை விட பக்கவாதத்தைத் தடுப்பது எளிது என்பதும் வலியுறுத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டு பிரச்சாரமானது 62 நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட 208 நிகழ்வுகள், 10,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட ஆவணப் பதிவிறக்கங்கள் (சிற்றேடு, சுவரொட்டி, விளக்கப்படம், வலைப் பேனர், செய்தி வெளியீடு) போன்ற செயல்களை பதிவு செய்தது. உலக பக்கவாதம் நாளில் 110,000 முகநூல் பதிவுகள் மேற்ற்கொள்ளப்பட்டு அனைத்து உலக பக்கவாத நிறுவன சாதனைகளையும் முறியடித்தது. சமூகவலைதள பிரச்சார காணோளிகள் 20,000 பார்வைகள் பெற்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட பிரச்சார வலைப்பதிவு தளத்தில் உயிர் பிழைத்தவர் மற்றும் பராமரிப்பாளர் வலைப்பதிவுகளின் 7,500 பதிவுகளை உருவாக்கியது. [32]

2018 - பக்கவாதத்திற்குப் பிறகும் மீண்டு வரலாம்

[தொகு]

2018 ஆம் ஆண்டில் பக்கவாதத்திற்குப் பிறகான வாழ்க்கையுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் இப்பிரச்சாரம் கவனம் செலுத்தியது. . 2016 ஆம் ஆண்டின் உலகளாவிய நோய் சுமையின் தரவுகளுக்கும் கவனம் செலுத்தப்பட்டது. உலகளாவிய பக்கவாதத்தின் பரவலானது (பக்கவாதத்துடன் வாழும் மக்கள்) இப்போது 80 மில்லியனாக உள்ளது மற்றும் பக்கவாதம் மட்டுமே 116 மில்லியன் பேருக்கு மரணம் மற்றும் இயலாமைக்கு காரணமாக இருந்தது. [33] நோயாளி மற்றும் பராமரிப்பாளர் சாட்சியங்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ள உலகம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்டன. மின் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது மற்றும் மாண்ட்ரீலில் நடந்த உலக பக்கவாத காங்கிரசின் போது இவை காட்சிப்படுத்தப்பட்டன.

எல்லை

[தொகு]

உலக பக்கவாத நாளுக்கு அப்பால், உலக பக்கவாத பிரச்சாரம் உலகளவில் செயல்பாடு மற்றும் கொள்கை ஆதாரங்களுக்கான ஆதாரமாக தொடர்ந்து செயல்படுகிறது. பன்னாட்டு மட்டத்தில் ஆராய்ச்சி மற்றும் தகவல்தொடர்புகளின் முன்னேற்றங்கள் மூலம், பக்கவாதத்தை உலகளாவிய அச்சுறுத்தலாக மாற்றுவதற்கான வாதத்தை ஊக்குவிக்க முயற்சிக்கிறது. பொதுவான ஆபத்து காரணிகளை நிவர்த்தி செய்வதற்கான கூட்டாண்மை முயற்சிகளில் தேசிய சுகாதார இயக்கத்தின் ஈடுபாட்டை உலக பக்கவாத நிறுவனம் ஆதரித்துள்ளது.

உலக பக்கவாத பிரச்சாரம் 2013 பற்றிய கூடுதல் புதுப்பிப்புகளை முகநூலில் இங்கே காணலாம்: Facebook: http://www.facebook.com/worldstrokecampaign Twitter:

உலக பக்கவாத பிரச்சாரக் குழு

[தொகு]

உலக பக்கவாத பிரச்சாரக் குழு பின்வரும் நிபுணர்களைக் கொண்டுள்ளது:

 • சீலா மார்ட்டின்சு, துணைத் தலைவர் உலக பக்கவாத நிறுவனம்
 • தெய்த்ரே தா சில்வா, சிங்கப்பூர் பக்கவாத சங்கம், உலக பக்கவாத நிறுவன வாரிய உறுப்பினர்
 • போ நோர்விங்கு, உடனடி முன்னாள் தலைவர், பேராசிரியர், மருத்துவ நரம்பியல் துறை, லண்டு பல்கலைக்கழகம், சுவீடன்.
 • பேட்ரிசு லிண்ட்சே, இயக்குனர், இதயம் மற்றும் பக்கவாதம் அறக்கட்டளை, கனடா
 • சரோன் மெகோவன், தலைமை நிர்வாக அதிகாரி பக்கவாத அறக்கட்டளை, ஆத்திரேலியா
 • ராபர்ட் மிகுலிக், மசாரிக் பல்கலைக்கழகம், செக்கோசுலோவாக்கியா https://www.muni.cz/en/people/38765-robert-mikulik

மேற்கோள்கள்

[தொகு]
 1. About World Stroke Day 2011 பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம், Kenes International
 2. World Stroke Organization declares public health emergency on World Stroke Day பரணிடப்பட்டது 2010-11-25 at the வந்தவழி இயந்திரம், Medical News Today
 3. Rani Mukherji to spread awareness about stroke, Glamsham Editorial.
 4. El-Biheri, willgood ambassador, Al-Masry Al-Youm English Edition.
 5. Alberto Contador joins the World Stroke Campaign பரணிடப்பட்டது 2011-09-03 at the வந்தவழி இயந்திரம், Alberto Contador Sitio Oficial.
 6. "கருவில் இருக்கும் குழந்தையை கூட பக்கவாதம் பாதிக்குமா?". BBC News தமிழ். 2022-10-29. பார்க்கப்பட்ட நாள் 2022-10-30.
 7. "பக்கவாதம் ஆபத்தை சொல்லும் உலக ப‌க்கவாத ‌தினம் இன்று". ஆனந்த விகடன். https://www.vikatan.com/news/miscellaneous/106232-world-stroke-day-today. பார்த்த நாள்: 30 October 2022. 
 8. "உலக பக்கவாத தினம்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/world-stroke-day-761538. பார்த்த நாள்: 30 October 2022. 
 9. "உலகப் பக்கவாதத் தினம் 2018" இம் மூலத்தில் இருந்து 29 ஆகஸ்ட் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220829232110/https://ta.nhp.gov.in/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2018_pg. பார்த்த நாள்: 30 October 2022. 
 10. "WSO Global Stroke Factsheet 2019" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
 11. Kaste, Markku. "Every Day is a World Stroke Day" Stroke 41 (2010):2449-2450.
 12. 12.0 12.1 Kaste, Markku and Bo Norrving. "From the World Stroke Day to the World Stroke Campaign: one in six: act now!" International Journal of Stroke 5 no 5 (2010): 342-343.
 13. 13.0 13.1 World Stroke Day 2008 பரணிடப்பட்டது 2012-03-07 at the வந்தவழி இயந்திரம், World Stroke Organization.
 14. History பரணிடப்பட்டது 2011-10-04 at the வந்தவழி இயந்திரம், Kenes International.
 15. 2009 Awards பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம், Kenes International.
 16. 16.0 16.1 World Stroke Day Around the World பரணிடப்பட்டது 2013-12-24 at the வந்தவழி இயந்திரம், World Stroke Campaign.
 17. 2009 strokesafe awards பரணிடப்பட்டது 2012-04-30 at the வந்தவழி இயந்திரம், National Stroke Foundation - Australia.
 18. SAGAS Archive பரணிடப்பட்டது 2013-11-11 at the வந்தவழி இயந்திரம், Saudi Advisory Group Against Stroke.
 19. World Stroke Day பரணிடப்பட்டது 2012-03-07 at the வந்தவழி இயந்திரம், Neurologica Norte Mineira.
 20. Mongolian Stroke Association பரணிடப்பட்டது 2013-10-10 at the வந்தவழி இயந்திரம், Mongolian Stroke Association.
 21. About the World Stroke Campaign பரணிடப்பட்டது 2019-06-16 at the வந்தவழி இயந்திரம், Kenes International.
 22. Indian Stroke Association Plans to Endorse 200 ISA Centres பரணிடப்பட்டது 2012-03-15 at the வந்தவழி இயந்திரம், Express Healthcare.
 23. "Brazilian Minister of Health". World Stroke Campaign.
 24. "Jogadores de Ceará e Flu aderiram ao Dia Mundial de Combate ao AVC". Globo.com.
 25. "Jogadores de Ceará e Flu aderiram ao Dia Mundial de Combate ao AVC". globoesporte.com.
 26. "Twitter World Stroke Campaign". World Stroke Campaign.
 27. "Facebook World Stroke Campaign". World Stroke Campaign.
 28. About the World Stroke Campaign 2013 பரணிடப்பட்டது 2013-12-04 at the வந்தவழி இயந்திரம், Kenes International.
 29. Campaign Objectives and Rationale பரணிடப்பட்டது 2013-10-25 at the வந்தவழி இயந்திரம், Kenes International.
 30. https://world-stroke.org/2016-12-19-10-55-24/stroke-guideline-development-or-adaptationwww. [தொடர்பிழந்த இணைப்பு]
 31. [1] [தொடர்பிழந்த இணைப்பு]
 32. "International Journal of Stroke : Thank You for World Stroke Day 2017". 2 November 2017.
 33. https://www.world-stroke.org/images/WSO_Global_Stroke_Fact_Sheet_final.pdf [தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_பக்கவாத_நாள்&oldid=3724297" இலிருந்து மீள்விக்கப்பட்டது