உலக நீர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய நாடுகள் பொது அவை
71 % - Н2O

உலக நீர் நாள் (World Day for Water அல்லது World Water Day), ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானத்துக்கு இணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

1992 ஆம் ஆண்டில் பிரேசிலில் ரியோ டி ஜனெய்ரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டின் செயல் திட்டத்தின்படி 1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது. நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும் நிர்வாகத்தையும் மேம்படுத்தி நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும். அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து மக்களிடையே அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

2003 இல் 58வது ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானம் ஒன்றின் படி 2005 முதல் 2015 வரையான காலப்பகுதி "பத்தாண்டுகளுக்கு உயிர் வாழ்வதற்கு நீர்" எனும் அனைத்துலக செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது. 2005ம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.

நீர்த் திட்டம் குறித்து ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக மட்டத்தில் நீர் வளப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர் நாளில் முன்னெடுப்பதும் ஐநா நிறுவனத்தின் திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி 2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள் யுனெஸ்கோவினால் "நீரும் கலாசாரமும்" (Water and Culture) என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. 2007 இல், "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" ('Coping with Water Scarcity') என்ற தொனிப்பொருளில் FAO அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.

கருப்பொருள்கள்[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் நினைவில் கொள்ளப்படுகின்றது.[1]

 • 2022 – நிலத்தடி நீர், கண்ணுக்குத் தெரியாததைக் காணச் செய்தல்
 • 2021 - தண்ணீரை மதிப்பிடுதல்
 • 2020 - நீர் மற்றும் காலநிலை மாற்றம்
 • 2019 - யாரையும் (நீரிண்றி) விட்டுவிடாதீர்கள்
 • 2018 - இயற்கைக்காக தண்ணீர்
 • 2017 - ஏன் நீரினை வீணாக்க கூடாது?
 • 2016 - சிறந்த நீர், சிறந்த தொழில்கள் [2]
 • 2015 - நீரும், நிலையான மேம்பாடும்[3]
 • 2014 - நீரும் ஆற்றலும்[4]
 • 2013 - நீர் நிறுவனம்[5]
 • 2012 - தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு
 • 2011 - நகரங்களுக்கு தண்ணீர்- நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்
 • 2010 - தரமான நீர்
 • 2009 - தண்ணீர் மற்றும் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளல்
 • 2008 - சுகாதாரத்திற்கான ஆண்டு
 • 2007 - தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல்
 • 2006 - நீரும் பண்பாடும்

நோக்கம்[தொகு]

நீர்வளத்தைக் காப்பதும், அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நாளின் நோக்கமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

 1. "நீர் நாளின் கருப்பொருட்கள்". 2015-05-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 2. http://www.un.org/en/events/waterday/
 3. "நீரும், நிலையான மேம்பாடும்". United Nations. ஏப்ரல் 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 4. "நீரும் ஆற்றலும்". UN. ஏப்ரல் 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 5. "நீர் நிறுவனம்". UN. 2015-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஏப்ரல் 29, 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_நீர்_நாள்&oldid=3680965" இருந்து மீள்விக்கப்பட்டது