உலக நினைவுப் பதிவேடுத் திட்டம்
யுனெஸ்கோவின் உலக நினைவுப் பதிவேடுத் திட்டம் (Memory of the World Programme) என்பது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஆவண மரபுகளை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் ஒரு சர்வதேச முயற்சியாகும். மனிதக் குலத்தின் ஆவண மரபுகளை கூட்டு மறதி, புறக்கணிப்பு, காலப்போக்கில் சிதைதல், வேண்டுமென்றே அழியவிடுதல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். உலகெங்கிலும் உள்ள மதிப்புமிக்க காப்பக சேகரிப்புகள், நூலக சேகரிப்புகள், தனியார் சேகரிப்புகளைப் பாதுகாக்கவும், அந்தப் பொருட்களுக்கான அணுகல், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் இத்ததிட்டம் அழைப்பு விடுக்கிறது.[1][2][3]
உலக நினைவுப் பதிவேட்டுத் திட்டம் துவக்கப்பட்டதைத் தொடர்ந்து, யுனெஸ்கோ உலக நினைவப் பதிவேட்டுத் திட்டமும், தன்னாட்சிப் பெற்ற தேசிய மற்றும் பிராந்திய பதிவேடுகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றன. அவை பெரிய பிராந்திய அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆவண பாரம்பரியத்தில் கவனம் செலுத்துகின்றன, ஆனால் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.[4]

உலக நினைவுப் பதிவேட்டுத் திட்டம்
[தொகு]உலக நினைவுப் பதிவேடு என்பது கையெழுத்துப்படிகள், வாய்மொழி மரபுகள், ஒலி-காட்சிப் பொருட்கள், நூலகம், காப்பக சேகரிப்புகள் போன்ற உலகளாவில் முக்கியத்துவம் வாய்ந்த சிறந்த ஆவண மரபுகளைக் கொண்ட பட்டியலாகும். இது பன்னாட்டு ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்ட ஆவண பாரம்பரியப் பட்டியலாகும். இதற்கான தேர்வு அளவு கோள்களாக "உலக முக்கியத்துவம் மற்றும் சிறந்த உலகளாவிய விழுமியம்" என்பவை உள்ளன. இந்த மரபுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்தப் பதிவேட்டுத் திட்டத்திற்கு நிபுணர்களை அழைப்பதன் மூலம் அதன் பாதுகாப்பு, எண்ணியல் மயமாக்கல், பரப்புதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. [3] பதிவேட்டில் அடையாளப்படுத்தப்பட்ட பொருட்களைப் பற்றிய தகவல்களை பரந்த அளவில் அணுகுவதற்கும் பரப்புவதற்கும் இந்த திட்டம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. [3]
பன்னாட்டுப் பதிவேட்டில் முதன் முதலில் 1997 இல் ஆவணங்கள் அடையாளப்படுத்தப்பட்டன. [1] [3] [6] பதிவேட்டில் உள்ள பல்வேறு பண்புகளில் நாட்டார் இசைப் பதிவுகள்; பண்டைய மொழிகள் மற்றும் ஒலிப்பு ; சமய மற்றும் சமயச்சார்பற்ற பழைய கையெழுத்துப் பிரதிகளின் எச்சங்கள்; இலக்கியத்தில் புகழ்பெற்ற ஜாம்பவான்களின் கூட்டு வாழ்நாள் படைப்புகள்; அறிவியல் மற்றும் இசை; மைல்கல் திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களின் பிரதிகள்; உலகின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை ஆவணப்படுத்தும் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
2025 ஏப்ரல் நிலவரப்படி, பன்னாட்டுப் பதிவேட்டில் 570 ஆவண பாரம்பரியப் பொருட்கள் பொறிக்கப்பட்டுள்ளன. [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Edmondson, Ray (2020). "Memory of the World: An Introduction". In Edmondson, Ray; Jordan, Lothar; Prodan, Anca Claudia (eds.). The UNESCO Memory of the World Programme: Key Aspects and Recent Developments. Cham: Springer. pp. 21–22. ISBN 978-3-030-18441-4.
- ↑ "Official website". UNESCO Memory of the World Programme. Retrieved 2025-06-17.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Twenty-three new inscriptions on Memory of the World Register of Documentary Collections". UNESCO Press. 2003-09-01. Retrieved 2009-09-06.
- ↑ UNESCO. "MoW Committees". UNESCO. Retrieved 2025-06-23.
- ↑ "Original Declaration of the Rights of Man and of the Citizen (1789–1791)". UNESCO Memory of the World Programme. Retrieved 2025-03-03.
- ↑ "Third Meeting of the International Advisory Committee of the Memory of the World Programme, Tashkent, 29 September-1st October 1997: final report". UNESCO Memory of the World Programme. October 1997. Retrieved 2025-06-17.
- ↑ "Memory of the World". UNESCO Memory of the World Programme. Retrieved 2025-04-24.
