உள்ளடக்கத்துக்குச் செல்

உலக தேனீ நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுலோவீனியாவின் ப்ரெஸ்னிகாவில் 2018 உலக தேனீ தின கொண்டாட்டம்

உலக தேனீ நாள் அல்லது உலக அளி நாள் (World Bee Day) ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்டன் ஜானியா 1734இல் பிறந்தார். அளிகள் என்பவை பல்வேறு வகையான வண்டுகள். அவற்றில் ஒரு இனம் தான் தேனீ ஆகும்.

இந்தப் பன்னாட்டு நாளின் நோக்கமாகச் சுற்றுச்சூழலுக்குத் தேனீக்களின் பங்களிப்பினைப் பாராட்டுவதோடு மகரந்தச் சேர்க்கையில் பங்கை தேனீக்களின், மற்ற அளி இனங்களின் பங்களிப்பினை அங்கீகரிப்பதாகும்.[1] தேனீக்கள் மட்டுமல்லாமல், உலகில் உள்ள நூற்றுக்கணக்கான ஞிமிறு, வண்டு, போன்றவற்றைக் கொண்டாட உலக அளி நாள் தொடங்கப்பட்டுள்ளது.

மே 20 ஐ உலக தேனீ நாளாக 2017 திசம்பரில் சுலோவீனியாவில் வெளியிடப்பட்ட அறிவிப்பிற்கு ஐக்கிய நாடுகள் அவையினைச் சார்ந்த உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Bee Day". www.un.org.
  2. "On Slovenia's initiative, the UN proclaims May 20 as World Bee Day". RTVSLO.si.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தேனீ_நாள்&oldid=3434205" இலிருந்து மீள்விக்கப்பட்டது