உலக தூக்க நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உலக தூக்க நாள் (World Sleep Day) ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு தூக்க மருத்துவத்துக்கான உலக அமைப்பினால் 2008 ஆம் ஆண்டு முதல் நினைவுகூரப்படுகிறது.[1] ஆரோக்கியமான, சிறந்த தூக்கத்தின் பயன்களைக் கொண்டாடுவதும், தூக்கப் பிரச்சினைகள், மற்றும் அதற்கான மருத்துவம், கல்வி, சமூக நோக்கு ஆகியவற்றை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதும், தூக்கக் கோளாறுகளின் தடுப்பு மற்றும் அவற்றின் மேலாண்மையை ஊக்குவிப்பதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.

ஆண்டு நிகழ்வுகள்[தொகு]

உலக தூக்க நாள் மார்ச் மாதத்தின் இரண்டாவது முழுமையான வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்று இடம்பெறுகிறது. (மார்ச் சம இரவு நாள்).[2] முதலாவது தூக்க நாள் 2008 மார்ச் 14 அன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுகளில், தூக்கம் தொடர்புடைய விவாதங்கள், மற்றும் கல்விக் கண்காட்சிகள் ஆகியன இடம்பெறுகின்றன.

ஆண்டு நாள் குறிக்கோள் வாசகம்
2008 14 மார்ச் 'நன்றாக தூங்க, விழித்து வாழ்'[3]
2009 20 மார்ச் 'எச்சரிக்கையுடன் வாகனங்களை ஓட்டி, பாதுகாப்பாக வந்து சேர்'[4]
2010 19 மார்ச் 'நன்றாக தூங்கு, ஆரோக்கியமாகத் தங்கு'[5]
2011 18 மார்ச் 'நன்றாகத் தூங்கு, ஆரோக்கியமாக வளர்'[3][6]
2012 16 மார்ச் 'எளிதான சுவாசம், நன்றாகத் தூங்கு'[7]
2013 15 மார்ச் 'நல்ல தூக்கம், ஆரோக்கியமான முதுமை'[7]
2014 14 மார்ச் 'அமைதியான தூக்கம், எளிதாக சுவாசம், ஆரோக்கியமான உடல்'[7]
2015 13 மார்ச் 'When sleep is sound, health and happiness abound'
2016 18 மார்ச் 'நல்ல தூக்கம் ஓர் அடையக்கூடிய கனவு'[7]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_தூக்க_நாள்&oldid=2039313" இருந்து மீள்விக்கப்பட்டது