உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்

ஆள்கூறுகள்: 45°30′03″N 73°33′43″W / 45.500933°N 73.561846°W / 45.500933; -73.561846
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக ஊக்க மருந்து தடுப்பு ஆணையம்
உருவாக்கம்10 நவம்பர் 1999
வகைஇலாப நோக்கற்றது
நோக்கம்விளையாட்டில் ஊக்கமருந்து தடுப்பு
தலைமையகம்மான்ட்ரியல், கனடா
தலைமையகம்
ஆள்கூறுகள்45°30′03″N 73°33′43″W / 45.500933°N 73.561846°W / 45.500933; -73.561846
சேவை பகுதி
பன்னாட்டு
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரெஞ்சு
சார்புகள்பன்னாட்டு ஒலிம்பிக் குழு
வலைத்தளம்www.wada-ama.org/en/

உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் (World Anti-Doping Agency) ஊக்க மருந்து இல்லாத விளையாட்டு உலகை உருவாக்க வேண்டியதை கடமையாக கொண்டு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் தலைமையில் செயல்பட்டு வருகின்றது. இவ்வமைப்பு 1999 நவம்பர் 10 இல் சுவிட்சர்லாந்து, லோசான் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.[1] 2002 முதல் இவ்வமைப்பின் தலைமையகம் கனடாவின் மொண்ட்ரியால் நகரத்தில் இயங்கி வருகின்றது. லோசான் அலுவலகம் ஐரோப்பாவின் பிராந்திய அலுவலகமாக இயங்கி வருகிறது. இவற்றை விட ஆசியா/ஓசியானியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளிலும் பிராந்திய அலுவலகங்கள் உள்ளன.[2]

2016 சனவரி 1-ம் தேதி மெல்டோனியத்தை தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் சேர்த்தது. உருசிய டென்னிஸ் வீராங்கனை மரியா சரப்போவா விதிமுறைகளுக்கு எதிரான அளவுக்கு அதிகமாக மெல்டோனியத்தை எடுத்துக் கொண்டது சோதனையில் உறுதியானதையடுத்து தற்காலிகமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]