உலக உருது நாள்
| உலக உருது நாள் | |
|---|---|
| அதிகாரப்பூர்வ பெயர் | உலக உருது நாள் |
| கடைப்பிடிப்போர் | பலநாடுகள், பாக்கித்தான், இந்தியா |
| வகை | பன்னாட்டு நாள் |
| நாள் | 9 நவம்பர் |
| நிகழ்வு | ஆண்டுக்கொரு முறை |
| தொடர்புடையன | இக்பால் நாள் |
உலக உருது நாள் (World Urdu Day) பிரபல உருது கவிஞர் டாக்டர் அல்லாமா முகம்மது இக்பால் பிறந்த நாளான நவம்பர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.[1]
இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் உருது மொழியின் பிரபலத்தை எடுத்துரைப்பதும் அதன் முக்கியத்துவத்தைப் பாராட்டுவதும் ஆகும். உருது இந்திய துணைக்கண்டத்தில் பேசப்படும் மொழிகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இது பாக்கித்தான் நாட்டின் தேசிய மொழியும் ஆகும்.
அல்லாமா முகம்மது இக்பால்
[தொகு]அல்லாமா முகம்மது இக்பாலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. [2]
அல்லாமா இக்பால் ஒரு சிறந்த உருது கவிஞரும் சிந்தனையாளரும் ஆவார். அவர் தனது சுயக்கருத்தின் மூலம் துணைக்கண்டத்தின் இளைஞர்களுக்கு புதிய உயிர் கொடுத்தார். இக்பால் முசுலீம் உம்மாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவுபடுத்தினார் மற்றும் மீண்டும் ஒன்றிணைவதற்கு கற்றுக் கொடுத்தார்.
கொண்டாட்டங்கள்
[தொகு]இந்த நாளில், உருதுவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், இக்பாலுக்கு மரியாதை செலுத்தவும் , பாக்கித்தான் மற்றும் இந்தியாவின் அனைத்து முக்கிய நிறுவனங்களிலும் மதிப்புமிக்க விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ World Urdu Day, Urdu Day. "World Urdu Day". Archived from the original on 2023-04-12. Retrieved 2021-11-12.
- ↑ Urdu, allama Iqbal. "Iqbal and Urdu". https://timesofindia.indiatimes.com/city/mumbai/patriotic-poets-birthday-to-be-celebrated-as-world-urdu-day/articleshow/61564930.cms.
