உலக உயிராற்றல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக உயிராற்றல் சங்கம்
World Bioenergy Association
உருவாக்கம்2008 ஆம் ஆண்டு இசுடாக்கோம் நகரில்
வகைஇலாப நோக்கற்ற அமைப்பு அரசு சார்பற்ற அமைப்பு
தலைமையகம்
முக்கிய நபர்கள்
கிரித்தியன் இராகோசு,
தலைவர் (2020-)
பரத்வாச்சு கும்மமுரு,
செயல் இயக்குநர் (2017-)[1]
வலைத்தளம்www.worldbioenergy.org

உலக உயிராற்றல் சங்கம் (World Bioenergy Association) உலகளவில் உயிர் ஆற்றல் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இலாப நோக்கற்ற பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகும். உயிர்க்கூளம், உயிரி எரிபொருள்கள் மற்றும் உயிர்வாயுவை உள்ளடக்கிய நிலையான உயிர்சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இந்த அமைப்பு செயல்படுகிறது. உலக உயிராற்றல் சங்கத்தின் பணி அறிக்கையானது உலகளவில் நிலையான உயிர்சக்தியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும்'.[2]

உலக உயிராற்றல் சங்கத்தின் தலைமைச் செயலகம் சுவீடன் நாட்டில் உள்ள இசுட்டாக்கோமில் உள்ளது.

வரலாறு[தொகு]

அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் உட்பட உயிராற்றல் துறையில் பலதரப்பட்ட செயல்பாட்டாளர்களுக்கும் ஆதரவளிக்கும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாக உலக உயிராற்றல் சங்கம் 2008 ஆம் ஆண்டில் சுவீடனில் உள்ள இசுடாக்கோம் நகரில் நிறுவப்பட்டது.[3]

பங்குதாரர்கள்[தொகு]

2009 ஆம் ஆண்டு முதல் உலக உயிராற்றல் சங்கமானது காற்று, சூரியன், புவிவெப்பம், நீர் மற்றும் உயிர் ஆற்றல் தொழில்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 பன்னாட்டு அமைப்புகளால் உருவாக்கப்பட்ட பன்னாட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கூட்டணியில் உறுப்பினராக உள்ளது.[4] 21 ஆம் நூற்றாண்டிற்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்கை வலைப்பின்னல் வழிநடத்தல் குழுவிலும் உலக உயிராற்றல் சங்கம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது.[5]

தலைவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "WBA Secretariat".
  2. "WBA Action Plan". Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2022-06-18.
  3. Renewable Energy World Article 2008 - New World Bioenergy Association Formed
  4. REN Alliance Homepage
  5. REN 21 Steering Committee
  6. Minnesrummet
  7. Presidential election in WBA: Dr. Heinz Kopetz has been elected as the new president of the World Bioenergy Association (WBA)
  8. World Bioenergy Association elects Remigijus Lapinskas as president
  9. Dr Christian Rakos elected President of the World Bioenergy Association

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_உயிராற்றல்_சங்கம்&oldid=3593700" இலிருந்து மீள்விக்கப்பட்டது