உள்ளடக்கத்துக்குச் செல்

உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை
WCT
உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை
உறுப்பு நாடுகள் (26 செப்டெம்பர் 2022)[1]

     பின்னேற்பு வழங்கி நடைமுறையில்      ஐரோப்பிய ஒன்றியம் பின்னேற்பு      பின்னேற்பு வழங்கப்பட்டு, நடைமுறை படுத்த இல்லை      கையொப்பம் இட்டு, பின்னேற்பு வழங்கவுமில்லை

     கையொப்பம் இடவும் பின்னேற்பு வழங்கவுமில்லை
கையெழுத்திட்டது20 திசம்பர் 1996
இடம்ஜெனீவா, சுவிச்சர்லாந்து[2]
நடைமுறைக்கு வந்தது6 மார்ச் 2002[2]
நிலை30 பின்னேற்பு[2]
தரப்புகள்110[3]
வைப்பகம்தலைமை இயக்குநர்-உலக அறிவுசார் சொத்து நிறுவனம்[2]
மொழிகள்ஆங்கிலம், அரபி, சீனம், பிரஞ்சு, உருசியம் & எசுபானியம்[2]
முழு உரை
உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை விக்கிமூலத்தில் முழு உரை

உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை (WIPO Copyright Treaty) பன்னாட்டு பதிப்புரிமை உடன்படிக்கை ஆகும். இது 1996ஆம் ஆண்டில் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்புரிமைச் சட்டம் குறித்த சர்வதேச ஒப்பந்தமாகும். இதற்கு முன்னர் முந்தைய பதிப்புரிமை ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டதிலிருந்து தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களை உள்ளடக்கும் வகையில் பதிப்புரிமைக்கு கூடுதல் பாதுகாப்புகளை வழங்குகிறது.[4] ஆகத்து 2023 நிலவரப்படி, இந்த ஒப்பந்தத்தில் 115 நாடுகள் கையெழுத்து இட்டுள்ளன.[5] உக அறிவுசார் சொத்துரிமை நிறுவன பதிப்புரிமை மற்றும் அசொபாநி செயல்திறன் மற்றும் ஒலி வரைவு ஒப்பந்தம் ஆகியவை ஒன்றாக உலக அறிவுசார் சொத்து நிறுவன "இணைய ஒப்பந்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன.[6]

வரலாறு

[தொகு]

1971 ஸ்டாக்ஹோம் மாநாட்டிலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. இது பெர்ன் மாநாட்டின் நெறிமுறையாக பார்க்கப்பட்டது. இருப்பினும், பெர்ன் உடன்படிக்கையின் எந்தவொரு திருத்தத்திற்கும் அனைத்து தரப்பினரின் ஒருமித்த ஒப்புதல் தேவைப்படுவதால், உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை பெர்ன் உடன்படிக்கைக்கு துணைபுரியும் ஒரு கூடுதல் ஒப்பந்தமாக கருதப்பட்டது. 1980களில் பெர்ன் கூட்டமைப்பில்[7] விரிவாக்கம் குறித்த சாதகமான சூழல் இல்லாததைத் தொடர்ந்து கட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் காரணமாக அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது.[8][9] இதனால் எண்ணிம தொழில்நுட்பங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் கட்டுபடுத்தியது.

ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட பாதுகாப்பு

[தொகு]

படைப்பு முயற்சிகளுக்கு அதன் முக்கியத்துவத்தைக் கூறி, பதிப்புரிமை பாதுகாப்பின் ஊக்குவிப்பு தன்மையை உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை உடன்படிக்கை வலியுறுத்துகிறது.[1] கணினி நிரல்கள் இலக்கியப் படைப்புகளாகப் பாதுகாக்கப்படுவதை இது உறுதி செய்கிறது (சரத்து 4). தரவுத்தளங்களில் உள்ள பொருட்களின் ஏற்பாடு மற்றும் தேர்வு பாதுகாக்கப்படுகிறது (சரத்து 5). இது படைப்பாளிகளுக்கு 6 முதல் 8 வரையிலான சரத்துகளில் அவர்களின் வாடகை மற்றும் விநியோகம் மீதான கட்டுப்பாட்டை வழங்குகிறது. இவை பெர்ன் உடன்படிக்கையில் மட்டுமில்லாமல் படைப்புகளைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளை மீறுவதையும் தடைசெய்கிறது (சரத்து 11). படைப்புகளில் உள்ள உரிமைகள் மேலாண்மை தகவல்களை அங்கீகரிக்கப்படாத முறையில் மாற்றியமைத்தலையும் பாதுகாக்கிறது (சரத்து 12).

இந்த ஒப்பந்தம் மிகவும் பரந்த அளவில் இருந்ததற்காக விமர்சிக்கப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டாக, தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறுவதைத் தடை செய்வதில், சட்டபூர்வமான மற்றும் நியாயமான பயன்பாட்டு உரிமைகளைப் பின்தொடர்வதில் மீறல்) மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அறிவுத் தொழில்துறையின் பரவலாக மாறுபட்ட நிலைகள் இருந்தபோதிலும், அனைத்து கையொப்பமிட்ட நாடுகளுக்கும் "அனைவருக்கும் பொருந்தும் ஒரே அளவில்" தரத்தைப் பயன்படுத்தியதற்காகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைப்படுத்தல்

[தொகு]

உலக அறிவுசார் சொத்து நிறுவன பதிப்புரிமை ஒப்பந்தம் எண்ணிம மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்தின் மூலம் அமெரிக்க சட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. 2000 மார்ச் 16ஆம் தேதி செயலாக்க குழுவின் முடிவு 2000/278 மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு, ஐரோப்பிய சமூகத்தின் சார்பாக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் ஒப்பந்தத்தின் பொருளை உள்ளடக்கியது. இது: மென்பொருளுக்கான பதிப்புரிமை பாதுகாப்பை உருவாக்குதல், வழிகாட்டு எண்ணிம உரிமைகள் மேலாண்மை போன்ற "தொழில்நுட்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை" தவிர்ப்பதற்கான சாதனங்களை தடைசெய்கிறது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "WIPO Lex". wipolex.wipo.int.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Contracting Parties > WIPO Copyright Treaty- contracting parties". உலக அறிவுசார் சொத்து நிறுவனம். Archived from the original on 24 சூன் 2006. Retrieved 4 June 2024.
  3. "Contracting Parties > WIPO Copyright Treaty". உலக அறிவுசார் சொத்து நிறுவனம். Retrieved 1 September 2021.
  4. Julie S Sheinblatt, 'The WIPO Copyright Treaty' (1998) 13 (1) Berkeley Technology Law Journal 535 <https://dx.doi.org/https://doi.org/10.15779/Z383X1Q>
  5. "Contracting Parties. WIPO Copyright Treaty". www.wipo.int. Retrieved 2023-11-20.
  6. Ficsor, Mihály (1997). "Copyright for the Digital Era: the WIPO Internet Treaties". Columbia Journal of Law & the Arts 21: 197–223. https://heinonline.org/HOL/LandingPage?handle=hein.journals/cjla21&div=16&id=&page=. 
  7. 'The New WIPO Copyright and Phonograms Treaties: Steps Toward Harmonized Protection for the Digital Age | Publications and Presentations' (Arnold & Porter, 1 October 1996) https://www.arnoldporter.com/en/perspectives/publications/1996/10/the-new-wipo-copyright-and-phonograms-treaties-s__?keyword= Retrieved 17 May 2018.
  8. Sapp HA, 'North American Anti-Circumvention: Implementation of the WIPO Internet Treaties in the United States, Mexico and Canada.' (2005) 10(1) Computer L Rev & Tech J 1, at 7
  9. Peter Drahos, John Braithwaite, Information Feudalism: Who owns the knowledge economy 112 (Earthscan Publications: 2002)

வெளியிணைப்புகள்

[தொகு]