உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு

உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு என்பது சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பான வரையறுக்கும் பண்புகளின் அடிப்படையில் நாடுகளை தொகுக்கும் முறையைக் குறிக்கும் சொற்கள் ஆகும். ஐக்கிய நாடுகள் வணிகம் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின்படி, உலகளாவிய தெற்கு என்பது ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், ஆசியா (இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா மற்றும் ஓசியானியா (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது.
உலகளாவிய தெற்கு நாடுகளில் பெரும்பாலானவை பொதுவாக வாழ்க்கைத் தரத்தில் குறைபாடுள்ளவையாக அடையாளம் காணப்படுகிறது, இந்த பகுப்பில் குறைந்த வருமானம், அதிக வறுமை, அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள், போதுமான வீட்டுவசதி இன்மை, வரையறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகள் மற்றும் குறைபாடுள்ள சுகாதார அமைப்புகள் போன்ற பிற சிக்கல்கள் அடங்கும்.[2]
கூடுதலாக உலகாளவிய தெற்கு நாடுகளின் நகரங்கள் அவற்றின் மோசமான உள்கட்டமைப்பால் வகைப்படுத்தப்படுகிறது. உலகளாவிய தெற்கிற்கு எதிரே உலகளாவிய வடக்கு உள்ளது, இது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் வணிகம் மற்றும் வளர்ச்சி நிறுவனம் விளக்குகிறது. இதனால் இரண்டு குழுக்களான வடக்கு அரைக்கோளம், தெற்கு அரைக்கோளத்துடன் ஒத்துப்போகவில்லை, ஏனெனில் உலகளாவிய தெற்கு நாடுகளில் பல புவியியல் ரீதியாக உலகாளாவிய வடக்குடன் நேர்மாறாக அமைந்துள்ளது.
குறிப்பாக, உலகளாவிய வடக்கு உலகின் வளர்ந்த நாடுகளைக் கொண்டுள்ளது, அதேசமயம் உலகளாவிய தெற்கு உலகின் வளரும் நாடுகள் மற்றும் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளைக் கொண்டுள்ளது.[3] The Global South classification, as used by governmental and developmental organizations, was first introduced as a more open and value-free alternative to Third World,[4] அரசுகள் மற்றும் மேம்பாட்டு அமைப்புகளால் பயன்படுத்தப்படும் உலகளாவிய தெற்கு வகைப்பாடு, முதலில் மூன்றாம் உலக நாடுகளுக்கு மிகவும் திறந்த மற்றும் மதிப்பு இல்லாத மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் வளர்ந்த மற்றும் வளரும் போன்ற "மதிப்பிடும்" சொற்கள். உலகளாவிய தெற்கு நாடுகள் புதிதாக தொழில்மயமாக்கப்பட்டவை அல்லது தொழில்மயமாக்கல் செயல்பாட்டில் உள்ளவை என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய தெற்கு நாடுகளில் பல காலனித்துவத்தின் முன்னாள் குடிமக்கள் ஆவார்.[5]
உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு ஆகியவை பெரும்பாலும் அவற்றின் மாறுபட்ட செல்வ நிலைகள், பொருளாதார வளர்ச்சி, வருமான சமத்துவமின்மை மற்றும் ஜனநாயகத்தின் வலிமை, அத்துடன் பல்வேறு சுதந்திர குறியீடுகளால் வரையறுக்கப்படும் அவர்களின் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. உலகளாவிய வடக்கு நாடுகள் செல்வந்தர்களாகவும், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறன் கொண்டவையாகவும் உள்ளன. இதற்கு நேர்மாறாக, உலகளாவிய தெற்கு நாடுகள் ஏழ்மையானவையாகவும், பெரும்பாலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை பெரிதும் சார்ந்து இருப்பதாகவும் உள்ளது. உலகமயமாக்கலின் விளைவுகள் காரணமாக உலகளாவிய வடக்குக்கும் உலகளாவிய தெற்குக்கும் இடையிலான சமத்துவமின்மை இடைவெளி குறைந்து வருவதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.[6] மற்ற அறிஞர்கள் இந்த நிலைப்பாட்டை மறுத்து, அதே காலகட்டத்தில் உலகளாவிய வடக்குடன் ஒப்பிடும்போது உலகளாவிய தெற்கு ஏழைகளாக மாறியுள்ளது என்று கூறுகின்றனர்[7] மற்ற அறிஞர்கள் இந்த நிலைப்பாட்டை மறுத்து, அதே காலகட்டத்தில் உலகளாவிய வடக்குடன் ஒப்பிடும்போது உலகளாவிய தெற்கு ஏழைகளாக மாறியுள்ளது என்று கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, "வடக்கின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கு உலகளாவிய தெற்கு நாடுகளில் "தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு" (SSC)[8] என்ற நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.[7] உலகளாவிய வடக்கிலிருந்து உலகளாவிய தெற்கிற்கு உற்பத்தி மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளின் புவியியல் இடம்பெயர்வின் மூலம் பிரபலமாகியுள்ளது, உலகளாவிய தெற்கின் சீனா போன்ற சக்திவாய்ந்த நாடுகளின் இராஜதந்திரக் கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, இந்த சமகால பொருளாதார போக்குகள், "காலனித்துவ காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தவும், போருக்குப் பிந்தைய அரசியல் மற்றும் பொருளாதார புவியியலின் எல்லைகளை மீறவும்" தெற்கு-தெற்கு கூட்டுறவால் புதுப்பிக்கப்பட்ட இலக்கு முயற்சிகளுக்கு மத்தியில், "உலகளாவிய தெற்கில் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்மயமாக்கலின் விளைவாக திறனை மேம்படுத்தியுள்ளது".
வரையறை
[தொகு]
|
0.800–1.000 (மிக அதிகம்)
0.700–0.799 (அதிகம்)
0.550–0.699 (நடுத்தரம்)
|
குறைந்த வளர்ச்சி நாடுகள்
தரவு கிடைக்கவில்லை
|

{{legend|#ff562f|மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் (ஐ நா சபை)}}
[9][10] (இறுதியாக தரவு மேம்படுத்திய ஆண்டு, ஏப்ரல் 2023)
உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு என்ற சொற்கள் கண்டிப்பாக புவியியல் சார்ந்தவை அல்ல. மேலும் அவை "நிலநடுக்கோட்டால் வகுக்கப்பட்ட உலகின் ஒரு பிம்பம் ஆகும். இக்கோடு பணக்கார நாடுகளை அவற்றின் ஏழை சகாக்களிடமிருந்து பிரிக்கிறது" அல்ல. [4] மாறாக, புவியியலை "உலகமயமாக்கல் அல்லது உலகளாவிய முதலாளித்துவத்தின் பரந்த சூழலில்" பொருளாதார மற்றும் இடம்பெயர்வு என்று எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக உலகளாவிய வடக்கு மற்றும் உலகளாவிய தெற்கு ஆகியவற்றுக்கான வரையறைகள் புவியியல் வடக்கு அல்லது புவியியல் தெற்கைக் குறிக்கவில்லை ஐக்கிய நாடுகள் வணிகம் மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின்படி, உலகளாவிய வடக்கு என்பது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை உள்ளடக்கியது. உலகளாவிய தெற்கு என்பது ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியாவைத் தவிர்த்து ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தைத் தவிர்த்து ஓசியானியாவை உள்ளடக்கியது.
உலகளாவிய வடக்கு என்ற சொல் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுடன் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, அதேசமயம் உலகளாவிய தெற்கு என்ற சொல் வளரும் நாடுகளுடன் பயன்படுத்தப்படுகிறது. சிறப்பியல்பு ரீதியாக, உலகளாவிய தெற்கில் உள்ள பெரும்பாலான நாடுகள் பொதுவாக வாழ்க்கைத் தரத்தில் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளளது. குறைந்த வருமானம், அதிக வறுமை நிலை, அதிக மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள், வரையறுக்கப்பட்ட கல்வி வாய்ப்புகள், குறைபாடுள்ள சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள், அரசியல் ஸ்திரத் தன்மை இன்மை மற்றும் பல பிரச்சினைகள். மேலும் உலகாளாவிய தெற்கில் உள்ள நகரங்கள் அவற்றின் மோசமான உள்கட்டமைப்பிற்காக அடையாளம் காணப்படுகிறது. உலகாளவிய வடக்கின் பொருளாதாரம் பன்முகத்தன்மை கொண்டவை. அதே நேரத்தில் உலகளாவிய தெற்கில் விவசாயத் துறையில் மட்டும் முக்கியப் பங்களிப்பாளராக உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- வளர்ந்துவரும் நாடுகள்
- வளர்ந்த நாடுகள்
- வடக்கு அரைக்கோளம்
- தெற்கு அரைக்கோளம்
- கிழக்கு அரைக்கோளம்
- மேற்கு அரைக்கோளம்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ "Classifications – UNCTAD Handbook of Statistics 2023". unctad.org.
- ↑ Nora, Mareï; Michel, Savy (January 2021). "Global South countries: The dark side of city logistics. Dualisation vs Bipolarisation.". Transport Policy 100: 150–160. doi:10.1016/j.tranpol.2020.11.001. "This article aims to appraise the unevenness of logistics development throughout the world, by comparing city logistics (notion that we define) between developing countries (or Global South countries) (where 'modern' and 'traditional' models often coexist) and developed countries (or Global North countries)".
- ↑ Nora, Mareï; Michel, Savy (January 2021). "Global South countries: The dark side of city logistics. Dualisation vs Bipolarisation.". Transport Policy 100: 150–160. doi:10.1016/j.tranpol.2020.11.001. "This article aims to appraise the unevenness of logistics development throughout the world, by comparing city logistics (notion that we define) between developing countries (or Global South countries) (where 'modern' and 'traditional' models often coexist) and developed countries (or Global North countries)".
- ↑ Mitlin, Diana; Satterthwaite, David (2013). Urban Poverty in the Global South: Scale and Nature. Routledge. p. 13. ISBN 978-0-415-62466-4 – via Google Books.
- ↑ Mimiko, Nahzeem Oluwafemi (2012). Globalization: The Politics of Global Economic Relations and International Business. Carolina Academic Press. p. 47. ISBN 978-1-61163-129-6.
- ↑ Therien, Jean-Philippe (August 1999). "Beyond the North–South divide: The two tales of world poverty". Third World Quarterly 20 (4): 723–742. doi:10.1080/01436599913523.
- ↑ 7.0 7.1 Acharya, Amitav (3 July 2016). "Studying the Bandung conference from a Global IR perspective". Australian Journal of International Affairs 70 (4): 342–357. doi:10.1080/10357718.2016.1168359.
- ↑ About South-South and Triangular Cooperation
- ↑ "World Economic and Financial Surveys World Economic Outlook Database—WEO Groups and Aggregates Information". International Monetary Fund. Archived from the original on 3 March 2023. Retrieved 2 June 2022.
- ↑ Least Developed Countries (பரணிடப்பட்டது 17 மே 2011 at the வந்தவழி இயந்திரம்) (2018 list[usurped!]; )