உலகளாவிய நிலையான எஃகு மற்றும் அலுமினியம் ஒழுங்கமைப்பு

உலகளாவிய நிலையான எஃகு மற்றும் அலுமினியம் ஒழுங்கமைப்பு (Global Arrangement on Sustainable Steel and Aluminum) என்பது சந்தைப் பொருளாதாரம் அல்லாத நாடுகள் எனக் கருதப்படும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் மற்றும் எஃகுக்கு இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கிடையிலான ஒரு முன்மொழியப்பட்ட கூட்டு வரி மண்டலம் ஆகும். பசுமை எஃகு மன்றம் என்ற பெயராலும், வெவ்வேறு சுருக்கப்பட்ட பெயர்களாலும் இவ்வமைப்பு அழைக்கப்படுகிறது.[1][2][3][4][5] இந்த உலகளாவிய ஏற்பாடு நடைமுறைக்கு வந்தால், எஃகு மற்றும் அலுமினியத்தின் மீது டிரம்ப் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான வாய்ப்பு நீக்கப்படும்.
நீண்ட கால வர்த்தக ஒப்பந்தத்தை நோக்கிச் செயல்பட்ட அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட குறிப்பிட்ட அளவிலான அலுமினியம் மற்றும் எஃகு மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகளை நீக்க 2021-ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.[6] பனிப்போர் காலத்து வர்த்தக விரிவாக்கச் சட்டத்தின் பிரிவு 232-இன் கீழ் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2018-ஆம் ஆண்டில் விதித்த இந்த வரிகள், தேசியப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்ட தொழில்துறைகளை இலக்காகக் கொண்டவையாகும். இதன்படி எஃகு மீது 25 சதவீதமும், அலுமினியம் மீது 10 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது.[7] உலக வர்த்தக அமைப்பு இந்த வரிகளுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. இதற்குப் பதிலடியாக, ஆர்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போர்பன் மதுபானம் போன்ற அமெரிக்கப் பொருட்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் வரிகளை விதித்தது.[5][8]
இந்த உலகளாவிய ஏற்பாடு உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக அமையக்கூடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The EU–US global arrangement on sustainable steel and aluminium". E3G (in ஆங்கிலம்). 2023-07-27. Retrieved 2023-10-12.
- ↑ "Global Arrangement on Sustainable Aluminium: Together for climate-neutrality & market-based trade. Position paper" (PDF). European Aluminium. 2022-08-31. Archived (PDF) from the original on 2023-10-14. Retrieved 2023-10-12.
- ↑ Mulholland, Ryan; Sutton, Trevor; Meyer, Timothy (2024-05-20). "Designing a New Paradigm in Global Trade" (Report). Center for American Progress. Archived from the original on 2024-12-20.
- ↑ Allenbach-Ammann, János (2023-08-28). "EU, US green steel showdown: How to decarbonise trade". www.euractiv.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2023-10-14. Retrieved 2023-10-12.
- 1 2 Harris, Lee (2023-10-11). "U.S. and EU Struggle to Form Green Steel Club". The American Prospect (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-10-12.
- ↑ "Press corner". European Commission - European Commission (in ஆங்கிலம்). Archived from the original on 2019-06-21. Retrieved 2023-10-12.
- ↑ Lawder, David; Blenkinsop, Philip (2023-09-07). "Exclusive: EU, US 'green steel' plan to box out China stalls ahead of October deadline" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 2023-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231011051154/https://www.reuters.com/markets/commodities/eu-us-green-steel-plan-box-out-china-stalls-ahead-october-deadline-2023-09-07/.
- ↑ "POLITICO Pro: EU, U.S. push back deadline for green steel deal, diplomats say". subscriber.politicopro.com (in ஆங்கிலம்). Archived from the original on 2023-10-14. Retrieved 2023-10-12.