உலகமுதற்காப்பியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்பியங்கள் உலகின் பலமொழிகளில் உள்ளதொரு இலக்கிய வகைமையாகும். இந்த இலக்கியவடிவம் தமிழமொழியில் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. தமிழின் முதற்காப்பியமாகக் கருதப்படுவது இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் ஆகும். இதைப்போன்று பிற உலகமொழிகளில் உள்ள காப்பியங்கள் பற்றி இங்குக் காணலாம்.

உலக முதற்காப்பியங்களின் பட்டியல்[தொகு]

1.மொழி:பாபிலோனியம்/ சுமேரியம்[தொகு]

காப்பியத்தின் பெயர்:கில்கமேசம்
ஆசிரியன் பெயர்: தெரியவில்லை.
காலம்/நூற்றாண்டு: கி மு 24 ஆம் நூற்றாண்டு.
தலைவன்: ;கில்கமேசன்
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: அரசன்
காப்பிய மையக்கருத்து: போர்வீரம்

2.மொழி: கிரேக்கம்[தொகு]

காப்பியத்தின் பெயர்: இலியதம்
ஆசிரியன் பெயர்: ஓமர்
காலம்: கி மு 8 ஆம் நூற்றாண்டு.
தலைவன்: அக்கிலிசு
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: அரசன்
காப்பிய மையக்கருத்து: போர்வீரம்

3.மொழி: வடமொழி (சமக்கிருதம்)[தொகு]

காப்பியத்தின் பெயர்: இராமாயணம்
ஆசிரியன் பெயர்: வால்மீகி
காலம்: கி மு 5 ஆம் நூற்றாண்டு
தலைவன்: இராமன்
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: அரசன்
காப்பிய மையக்கருத்து: அறம்தழுவிய போர்வீரம்

4.மொழி: இலத்தீன்[தொகு]

காப்பியத்தின் பெயர்: ஈனிட்
ஆசிரியன் பெயர்: வெர்சில்
காலம்: கி மு 1 ஆம் நூற்றாண்டு
தலைவன்: ஈனியசு
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: அரசன்
காப்பிய மையக்கருத்து: போர்வீரம்/ ஒழுக்கம்

5.மொழி: தமிழ்[தொகு]

காப்பியத்தின் பெயர்: சிலப்பதிகாரம்
ஆசிரியர் பெயர்: இளங்கோவடிகள்
காலம்: கி பி 2 ஆம் நூற்றாண்டு
தலைமை: கண்ணகி
ஆணா/பெண்ணா: பெண்
குடிமரபு: வணிகர்
காப்பிய மையக்கருத்து: ஒழுக்கவீரம்/கற்பு.

6.மொழி: பாரசீகம்[தொகு]

காப்பியத்தின் பெயர்: சாநாமா
ஆசிரியன் பெயர்: பிர்தௌசி
காலம்: கிபி. 11 ஆம் நூற்றாண்டு
தலைமை: சா இன்சா
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: அரசன்
காப்பிய மையக்கருத்து: போர்வீரம்

7.மொழி: செருமானியம்[தொகு]

காப்பியத்தின் பெயர்: நிபலிங்கன்லைடு
ஆசிரியன்பெயர்: தெரியவில்லை
காலம்: கி பி.12 ஆம் நூற்றாண்டு
தலைமை: சீசுபிரிட்
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: அரசன்
காப்பிய மையக்கருத்து: போர்வீரம்

8.மொழி:இத்தாலியம்[தொகு]

காப்பியத்தின் பெயர்: செருசலத்தின் மீட்சி
ஆசிரியன் பெயர்: ;டேசோ
காலம்: கிபி.16 ஆம் நூற்றாண்டு
தலைமை: காட்பிரி முதலானோர்.
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: சிற்றரசர்கள்
காப்பிய மையக்கருத்து: ஒழுக்கம்/ ஆன்மீகவீரம்

9.மொழி:போர்த்துகீசியம்[தொகு]

காப்பியத்தின் பெயர்: ஆசு லுசியதசு
ஆசிரியன் பெயர்: கேமோயன்சு
காலம்: கி பி.16 ஆம் நூற்றாண்டு
தலைமை: வாசுகோடகாமா
ஆணா/பெண்ணா: ஆண்
குடிமரபு: குடிமகன்
காப்பிய மையக்கருத்து: ஒழுக்கம்/ ஆன்மீகவீரம்

10. மொழி: ஆங்கிலம்[தொகு]

காப்பியத்தின் பெயர்: வனதேவ ராணி
ஆசிரியன் பெயர்: எட்மண்ட் பென்சர்
காலம்: கி பி. 16 ஆம் நூற்றாண்டு
தலைமை: தானை மறவர்கள்
ஆணா/பெண்ணா: ஆண், பெண்
குடிமரபு: சிற்றரசர்கள்
காப்பிய மையக்கருத்து: ஒழுக்கம்/ஆன்மீகவீரம்.

உசாத்துணைகள்[தொகு]

  • மணவாளன், அ.அ., இலக்கிய ஒப்பாய்வுக்களங்கள், 2005.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகமுதற்காப்பியங்கள்&oldid=1141184" இலிருந்து மீள்விக்கப்பட்டது