உள்ளடக்கத்துக்குச் செல்

உலகப் பெற்றோர் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகப் பெற்றோர் நாள்
கடைபிடிப்போர்தென்கொரியா
வகைதேசிய அளவில்
நாள்மே 8
தொடர்புடையனஅன்னையர் மற்றும் தந்தையர்

உலகப் பெற்றோர் நாள் (Parents' Day) என்பது ஐக்கிய நாடுகள் சபையால் சூன் 1 ஆம் நாள் அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.[1] இது முதலில் அன்னையர் நாளாக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. பின்னர் இது தந்தையர் நாளாக தனியாகக் கொண்டாடப்படுவது மற்றும் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு பெற்றோர் இருவரையும் சேர்த்து கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில்

[தொகு]

உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி சூன் 1 ஆம் நாளை உலகப் பெற்றோர் நாள் என ஐக்கிய நாடுகள் சபையினர் அறிவித்தனர்.[2] இதுவும் பன்னாட்டுக் குழந்தைகள் நாளும் ஒரே நாளில் கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில்

[தொகு]

அமெரிக்காவில் பெற்றோர் நாள் சூலை மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இது குழந்தைகள் வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை அங்கீகரிப்பதற்காக 1994 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் பில் கிளிண்டன் அவர்களால் கொண்டுவரப்பட்டது. [3] இது அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்படுகிறது.[4]

தென் கொரியாவில்

[தொகு]

தென் கொரியாவில் பெற்றோர் நாள் மே 8 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.[5] பெற்றோர் தினத்தை கொரிய அரசும் பொதுமக்களும் கொண்டாடுகின்றனர். பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வாக இது அமைகிறது.இரட்டடுக்கான இதழ்களையுடைய மஷ்ர்ச் செடிவகைகளை தங்களது பெற்றோருக்கு வழங்குவர். மேற்கத்தியக் கலாச்சாரம் மற்றும் கன்பூசியசின் ஆதரவாளர்கள் இணைந்து கொண்டாடும் இந்நாள் விடுமுறை ஆகும்.[6] பொது நிகழ்வுகளை தென்கொரியாவின் உடல்நம மற்றும் பராமரிப்புத்துறை விருதுகள் வழங்கி கொண்டாடுகிறது.[7]

சான்றுகள்

[தொகு]
  1. "Proclamation No. 213, s. 1937". gov.ph Official Gazette. Archived from the original on 2016-12-29. பார்க்கப்பட்ட நாள் 2017-05-24.
  2. "Global Day of Parents". United Nations. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
  3. Eloise Anderson (July 22, 2018). "Helping parents work, so children can succeed". Dunn County News (Wisconsin). https://chippewa.com/dunnconnect/opinion/eloise-anderson-helping-parents-work-so-children-can-succeed/article_c8c77e34-12de-587e-b36d-9c488332a251.html. 
  4. "National Parents Day -- Celebrating Parent Power". HuffPost (in ஆங்கிலம்). 2013-07-25. பார்க்கப்பட்ட நாள் 2023-04-18.
  5. "Parents' day by Korean Nation Culture Encyclopedia". Korean Nation Culture Encyclopedia(http://encykorea.aks.ac.kr).
  6. "어버이날". terms.naver.com (in கொரியன்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-24.
  7. 어버이날 [Parents' Day]. 한국세시풍속사전 (in கொரியன்). National Folk Museum of Korea. பார்க்கப்பட்ட நாள் May 5, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_பெற்றோர்_நாள்&oldid=3697076" இலிருந்து மீள்விக்கப்பட்டது