உள்ளடக்கத்துக்குச் செல்

உலகநாயகி பழனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகநாயகி பழனி
தேசியம்இந்தியன்
கல்விதமிழில் முனைவர் பட்டம்
பணிபேராசிரியர்
அறியப்படுவதுபேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர்
விருதுகள்அம்மா இலக்கிய விருது

உலகநாயகி பழனி என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும் பேச்சாளருமாவார்.

தமிழ்ப்பணி

[தொகு]

இவர் தமிழ்த்துறைத் தலைவராக ஸ்டெல்லா மேரிக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் 2018 ஆம் ஆண்டிற்கான அம்மா இலக்கிய விருது பெற்றுள்ளார்.[1] தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் நூலகக் குழு உறுப்பினராகவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச்செயலராகவும் உள்ளார்.[2][3]

எழுதிய நூல்கள்

[தொகு]
  • வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்
  • பாரதி 100
  • எட்டையபுரத்து எரிமலை
  • குலோத்துங்கன் கவிதைப் பரிமாணங்கள்
  • கலைஞரின் படைப்புலகில் பெண்ணியம்
  • வாழ்வியல் வள்ளுவம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "அம்மா இலக்கிய விருது பெற்றோர்". தமிழ் வளர்ச்சித் துறை. Retrieved 16 April 2025.
  2. "நிர்வாகக் குழு". தமிழ் வளர்ச்சிக் கழகம். Retrieved 16 April 2025.
  3. "நூலகக் குழு உறுப்பினர்". த.இ.க. Retrieved 16 April 2025.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகநாயகி_பழனி&oldid=4379620" இலிருந்து மீள்விக்கப்பட்டது