உற்பத்திச் சக்திகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உற்பத்திச் சக்திகள் என்பது மார்க்சியத்தின் மையக்கருத்துகளில் ஒன்று. கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்சு ஆகியோரால் இச்சிந்தனை உருவாக்கப்பட்டது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிதான் உற்பத்தி உறவுகளின் மாற்றத்திற்கான அடிப்படை என்பதை உற்பத்திச் சக்திகள் கோட்பாடு (Theory of Productive Forces) என்று அழைக்கிறோம்.[1] உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது, வரலாற்று மாறுதல்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு பெறுகிறது[2]. அறிவியலும் உயர்தொழில் நுட்பமும் கொண்ட உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டைத் தீவிரமாக ஆதரித்தவர்கள் சீன நாட்டிலிருந்த டெங் குழுவினர். இந்த உற்பத்திச் சக்திகள் கோட்பாட்டை மிகவும் பிற்போக்கான கோட்பாடென்று சொல்லி மா சே துங் எதிர்த்தார்.[3]


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பத்திச்_சக்திகள்&oldid=3117108" இருந்து மீள்விக்கப்பட்டது