உறைவிட விக்கிப்பீடியர்

உறைவிடவிக்கிப்பீடியர் (Wikipedian in residence) என்பர் விக்கிமீடியத்திட்டங்களில் பங்களிக்கும் ஒருவர், விக்கிமீடியத் திட்டங்கள் குறித்த புரிந்துணர்வை, விக்கிமீடியத் திட்டங்களைப் அறியாதவர்களுக்கு தெரிவித்து விக்கி குறித்து ஆர்வத்தினை ஏற்படுத்தும் நோக்கமுடையவர் ஆவார். இந்நோக்கத்திற்கு அந்த உறைவிட விக்கிப்பீடியர் கல்வி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகம், ஆவணக்காப்பகங்கள், கலை மாடங்கள் (காட்சிக்கூடங்கள்) போன்ற தரவு செறிந்த இடங்களுக்குச் செல்வார். அவ்விடங்களில் உள்ள தரவுகளைக் பொது உரிமத்தில் பெற முயல்வார். அதற்கு அதைப் பற்றிய பரப்புரை வகுப்புகளை, பயிலரங்குகளை நடத்துவதில் துணை நிற்பர். மிக முக்கியமான நோக்கம் யாதெனில், அவ்விடங்களில் சென்று, விக்கிமீடியத் திட்டங்களுக்கு பங்களிப்பதை விட, அவர்களை திட்டப்பணிகளில் செயல்பட வைத்தலும், அதனால் வரும் புதிய இடர்களையும், விக்கிமீடியத் திட்டபணியாளர்களுக்குத் தெரிவித்தலுமே ஆகும். 2010ஆம் ஆண்டு ஆத்திரேலியா நாட்டவரான லியம் வியாட் (Liam Wyatt) என்பவரே முதல் உறைவிட விக்கிப்பீடியராகத் திகழ்கிறார். இதற்கு இவர் பிரித்தானிய நூலகத்தில் 5 வாரங்கள் செயற்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cohen, Noam (5 June 2010). "Venerable British Museum Enlists in the Wikipedia Revolution". த நியூயார்க் டைம்ஸ். Retrieved 27 January 2013.
- ↑ Cohen, Noam (19 March 2014). "Warming Up to the Culture of Wikipedia". The New York Times. Retrieved 24 March 2014.
இந்திய உறைவிட விக்கிப்பீடியர் திட்டங்கள்
[தொகு]- முதல் இந்திய உறைவிட விக்கிப்பீடியர்
- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியர்
- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியருக்கு துணை நின்ற உடன்உறை விக்கிப்பீடியர்
- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தை முன்னெடுத்த சென்றவர்கள்
- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தை வித்திட்ட தமிழக அரசு அதிகாரிகள்
- முதல் தமிழ் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தின் விளைவுகளும், பலன்களும்
இதனையும் காணவும்
[தொகு]- முதல் தமிழ் உறைவிட விக்கப்பீடியர் தேர்ந்தெடுப்பு
- முதல் உறைவிட விக்கிப்பீடியத் திட்டத்தின் போது, பொதுவகத்தில் பதிவேற்றிய ஆவணங்கள்