உறைப்பூச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2008 06 04 - Russett - Concord Park inner wall 1.JPG

உறைப்பூச்சு (Cladding) ஒரு பொருளின் மேலாக வேற்று பொருள் பூச்சு போன்ற அடுக்காக ஒட்டப்படுவதைக் குறிப்பதாகும்.

கட்டிடங்கள் கட்டுமானம் பணி முடிவுறும் தறுவாயில் தளம் மற்றும் சுவர்களில் மேலாக மெல்லிய ஓடுகள் பூச்சு போன்ற அடுக்கு ஒட்டப்படுகின்றது.

கட்டிடங்களில் கண்ணாடி சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான உட்புகும் சூரிய ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதைக் கட்டுப்படுத்த கண்ணாடியின் மேலாக பூச்சு போன்ற அடுக்கு ஒட்டப்படுகின்றது.

அன்றாடம் உதவும் தளபாட பொருட்களான மர மேசை, கட்டில் மற்றும் அலங்காரத்துக்குரிய சாதனங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக வைக்க நெகிழி (பிளாஸ்டிக்) போன்ற மூலப்பொருட்களால் மெல்லிய அடுக்கு ஒட்டப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறைப்பூச்சு&oldid=2222077" இருந்து மீள்விக்கப்பட்டது