உறைகுழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடலினுள் உள்ள அரத்தம் போன்ற நீர்மம் செல்லும் குழாய்களின் சுவர்களில் படிவுகள் ஏற்பட்டு தடை ஏற்பட்டாலோ அல்லது தடுப்பு ஏற்பட்டாலோ அதனைச் சரிசெய்து மீண்டும் நீர்மம் செல்லும்படி பொருத்தப்படும்உறைகுழாய் அல்லது குடலை எனப்படும் இசுடெண்டு (stent) எனப்படும் ஒரு உருப்படி

உறைகுழாய் (stent) என்பது உடலின் குழாய் ஒன்றினுள்ளே பொருத்தப்படும் குழாய். உடலில் அரத்தம் போன்ற நீர்மப்பொருள் ஓடும் குழாயில் ஏதேனும் காரணம்பற்றி குழாயின் உள் குறுக்களவு குறைந்தோ அல்லது அடைப்புற்றோ போனால் அங்கே சரியாக நீர்மம் தொடர்ந்து ஓடும்படி திறப்பு ஏற்படுத்தி அக்குழாய்க்குள் பொருத்தப்படும் மாழை (உலோகம்) அல்லது நெகிழிப்பொருளால் ஆன, சில நேரம் மருந்துபீசப்பட்ட, விரியக்கூடிய குழாயே உறைகுழாய் அல்லது குடலை எனப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, இது மாரடைப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படும்பொழுது, மருத்துவத்தில் அரத்தக்குழாய்க்குள் பொருத்தப்படும் ஒன்று.

8 மி.மீ குறுக்களவுள்ள உறைகுழாய் அல்லது குடலை
உடலின் குழாயின் சுவரில் படிவுகள் ஏற்பட்டு, நீர்மம் செல்ல தடை ஏற்படும்பொழுது, உறைகுழாய் பொருத்தப்பெற்று, சரியான நீர்மம் ஓடும் படிச்செய்யும் முறையக் காட்டுகின்றது

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stents
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறைகுழாய்&oldid=3292065" இலிருந்து மீள்விக்கப்பட்டது