உறிஞ்சும் உறுப்பு
உறிஞ்சும் உறுப்பு (Haustorium) என்பது தாவரவியல் மற்றும் பூஞ்சையியலில் காணப்படக்கூடிய ஒரு அமைப்பு ஆகும். இது பிற உயிர்களின் மேற்புறமாகவோ அல்லது உட்புறமாகவோ வளரக்கூடியது. நீர் மற்றும் உணவுபொருட்களை உறிஞ்சுவதே இதன் பணி ஆகும். தாவரவியலில் இது வித்திலை என அழைக்கப்படுகிறது,[1] . பரவுணித் தாவரத்தில் (அதாவது குடைமிளகாய் குடும்பம் அல்லது புல்லுருவி போன்றவை) வேரைக்குறிக்கிறது, அது பற்றியுள்ள தாவரத்தை உறிஞ்சுகுழல்கள் மூலம் துளைத்து அதனுள் இருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுகிறது. பூஞ்சையியலில் இது ஒட்டுண்ணி வாழ்வில் உறிஞ்சுகுழல்கள் (ஹைபா முனை) பகுதியை குறிக்கிறது. விருந்தோம்பியின் கலச்சுவரைத் துளைத்து, கலச்சுவருக்கும் உயிரணு மென்சவ்வுக்கும் இடையே ஒரு குழாய் போன்ற அமைப்பை ஏற்படுத்தி உணவுப்பொருளை உறிஞ்சுகிறது.[2]
பெரும்பாலான பூஞ்சை இனங்கள் உறிஞ்சுகுழல்களை கொண்டுள்ளன. உறிஞ்சுகுழல்கள் பல அமைப்புகளில் காணப்படுகின்றன. இவை பூசனவலை அமைப்ப்பிலும், வேர் அமைப்பிலும் உள்ளன.
உறிஞ்சுகுழல்கள் செல் சுவரை கரைக்கும் நொதிகளை சுரந்து, விருந்தோம்பியை துளைக்கின்றன. அதன் பின்னர் பிளாஸ்மா சவ்வுடன் தனது தொடர்புபரப்பினை அதிகப்படுத்துகின்றன. இதன் மூலம் விருந்தோம்பியிலிருந்து அதிக அளவு உணவுப்பொருட்களை உறிஞ்ச முடிகிறது.
விருந்தோம்பிகள் பூஞ்சைக்கு கரிமக்கரி உணவைத்தருகின்றன. இந்த சமயத்தில் உறிஞ்சுகுழல் அமைப்பில் வளர் சிதை மாற்றம் வேகமாக நடைபெறுகிறது. கரிமக்கரி உணவு பூஞ்சையின் மற்ற உடல பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது.[3]