உறவுமுறைப் பெயரிடல் வகைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உலகம் முழுவதிலும் பரந்து வாழும் சமுதாயங்கள் உறவுமுறைகளுக்குப் பெயரிடுவதில் எவ்வித நியமங்களும் கிடையாது. உண்மையில் நீண்டகாலமாக நிலவிவரும் உறவுமுறைப் பெயரிடும் முறைமைகள் கட்டுப்பாடற்ற முறையில் உருவாகியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் மானிடவியலாளரின் ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் காணப்படும் ஆயிரக்கணக்கான உறவுமுறைப் பெயரிடல் முறைமைகள் ஆறு வகைகளுக்குள் அடங்கி விடக் கூடியன என அறிந்தார்கள். இந்த ஆறு வகைகளும் இவ்வகைகளுக்குள் அடங்கும் முதலில் ஆய்வு செய்யப்பட்ட சமுதாயங்களின் பெயர்களினால் வழங்கப்படுகின்றன.

  1. சூடானிய முறை (Sudanese System)
  2. ஹவாய் முறை (Hawaiian System)
  3. எஸ்கிமோ முறை (Eskimo System)
  4. இரோகுவாயிஸ் முறை (Iroquois System)
  5. ஒமாஹா முறை (Omaha System)
  6. குரோ முறை (Crow System)