உறங்கும் அகராதி (நாவல்)
உறங்கும் அகராதி (நாவல்) The Sleeping Dictionary (novel) என்பது அமெரிக்க எழுத்தாளர் சுஜாதா மாசி எழுதிய ஒரு நாவலாகும். இந்த நாவல் வங்காளத்தின் மகள் என்ற தொடரின் முதல் புத்தகம் ஆகும். இது 2013 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 20 தேதியன்று பேப்பர் பை என்ற பதிப்பாக வெளியிடப்பட்டது.[1] பிற்கால ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவில் உள்ள கொல்கத்தாவிற்குச் செல்லும் ஒரு இளம் விவசாயப் பெண்ணின் கதையைச் பற்றிய நாவலாகும். இவள் இங்கு கொந்தளிக்கும் சுதந்திர இயக்கத்திற்கும், தான் வாழும் ஆங்கில காலனித்துவ சமூகத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கும் கதையாகும்.
கதைச்சுருக்கம்
[தொகு]1925 ஆம் ஆண்டிற்க்கும் இரண்டாம் உலகப் போரின் முடிவுக்கும் இடையில் மேற்கு வங்கப் புயலின் போது தனது குடும்பத்தை இழந்த கமலா என்பவளின் கதையாகும். அனாதையாக, யாருக்கும் தெரியாத ஒரு குழந்தை வேலைக்காரியாக வளர்ந்து வருகின்றாள். அந்தநேரத்தில் இவள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளும்போது, கொல்கத்தாவில் ஒரு ரகசிய சுதந்திரப் போராட்ட வீராங்கனையாக மாறுகிறாள். "உறங்கும் அகராதி" என்ற சொல் முதலில் ஐரோப்பியர்களுடன் உறவு கொண்டு அவர்களுக்கு இந்தியாவின் வழிகளைக் கற்பித்த இளம் பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. கமலா காலனித்துவ அமைப்பிற்கு எதிராகத் தனது நிலையை மாற்றி, மொழிகளையும் ஆண்களையும் அறியும் தனது திறமைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பணியாற்றுகிறாள்.[2] இனம் மற்றும் சாதித் தடைகளை உடைத்து தனது விதியை மாற்றியமைக்கும் ஒரு இளம் பெண்ணின் குரலில் சொல்லப்பட்ட காலனித்துவ இந்தியாவின் ஒரு அசாதாரண சித்திரம் ஆகும்.
வரவேற்பு
[தொகு]இந்த புத்தகம் ரொமான்டிக் டைம்சில் சாதகமான விமர்சனத்தைப் பெற்றது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Sleeping Dictionary. August 20, 2013. ISBN 978-1-4767-0316-9.
{{cite book}}:|work=ignored (help) - ↑ "The Sleeping Dictionary by Sujata Massey". Peeking Between the Pages. Retrieved 11 September 2013.
- ↑ "RT Book Reviews: The Sleeping Dictionary". RT Book Reviews. Retrieved 11 September 2013.
Readers may think of a sleeping dictionary as a mistress who teaches her master the customs and language of the country, but such is not the case with Massey's heroine, who eloquently, slowly and sometimes painstakingly relates her journey from child to revolutionary and lover. There is sadness, tragedy, joy, love and triumph — everything saga readers enjoy.