உள்ளடக்கத்துக்குச் செல்

உர்பத்து பீல்

ஆள்கூறுகள்: 26°05′26.2″N 90°35′19.9″E / 26.090611°N 90.588861°E / 26.090611; 90.588861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உர்பத்து பீல்
Urpad Beel
கோல்பாராவில் உர்பத்து ஏரியின் அழகிய காட்சி
உர்பத்து பீல் Urpad Beel is located in அசாம்
உர்பத்து பீல் Urpad Beel
உர்பத்து பீல்
Urpad Beel
உர்பத்து பீல் Urpad Beel is located in இந்தியா
உர்பத்து பீல் Urpad Beel
உர்பத்து பீல்
Urpad Beel
அமைவிடம்அகியா கிராமம், கோல்பாரா மாவட்டம், அசாம், இந்தியா
ஆள்கூறுகள்26°05′26.2″N 90°35′19.9″E / 26.090611°N 90.588861°E / 26.090611; 90.588861

உர்பத்து பீல் (Urpad Beel) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்தில் இருக்கும் அகியா கிராமத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். இயற்கை ஏரியான இது கோல்பரா மாவட்டத்தின் மாவட்ட தலைமையகமான கோல்பராவிலிருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. உர்பத்து பீல் கீழ் அசாமின் மிகப்பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும்.[1]

நீர்வாழ் உயிரினங்கள்

[தொகு]

உர்பத்து ஏரி பல வகையான மீன்கள் மற்றும் பறவைகளுக்கு இயற்கையான வாழ்விடமாகும். பெருநாரை, சிறிய சீழ்க்கைச்சிரவி மற்றும் மீன்கொத்திகள் போன்ற பறவைகளின் முக்கியமான வாழ்விடமாகும். இங்கு நீர் அல்லி மற்றும் பொதுவான நீர் பதுமராகம் போன்ற நீர்வாழ் தாவரங்களும் உள்ளன.[1]

பாதுகாப்பு

[தொகு]

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று அசாம் மண் பாதுகாப்பு மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, உர்பத் ஏரியை அழகுபடுத்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Assam Govt sanctions Rs. 1 crore for Protection of Historic Urpad Beel in Goalpara". Guwahati Plus (in ஆங்கிலம்). Retrieved 17 November 2020.
  2. "Schemes launched to beautify Urpad Beel in Goalpara district". The Sentinel (in ஆங்கிலம்). Retrieved 17 November 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்பத்து_பீல்&oldid=4335934" இலிருந்து மீள்விக்கப்பட்டது