உர்ட்சு-பிட்டிக் வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உர்ட்சு-பிட்டிக் வினை
பெயர் மூலம் சார்லசு-அடால்ப் உர்ட்சு
வில்கெம் ருடால்ப் பிட்டிக்
வினையின் வகை இணைப்பு வினை
இனங்காட்டிகள்
கரிமவேதியியல் வலைவாசல் வினை.shtm உர்ட்சு-பிட்டிக் வினை

உர்ட்சு-பிட்டிக் வினையானது  (Wurtz–Fittig reaction) அரைல் ஆலைடுகள், அல்கைல் ஆலைடுகள் சோடியம் உலோகத்துடன் உலர் ஈதர் முன்னிலையில் வினைபுரிந்து பதிலியிடப்பட்ட அரோமேட்டிக் சேர்மங்களைத் தரும் வேதி வினையாகும்.[1][2] இரண்டு அல்கைல் ஆலைடுகள் தங்களுக்குள் வினைபுரியும் வினையை (உர்ட்சு வினை) 1855 ஆம் ஆண்டில் கண்டறிந்த  சார்லசு அடோல்ப் உர்ட்சு மற்றும் அரைல் ஆலைடுகளும் இத்தகைய வினையில் ஈடுபடும் என்று கண்டறிந்த ரூடோல்ப் பிட்டிக் ஆகியோரின் பெயரால் அழைக்கப்படுகிறது.

ஆலைடு வினைபொருட்கள் தங்களின் வேதி வினைத்திறன்கள் ஒப்பிடப்படும் போது தங்களுக்குள் சிறிதளவு வேறுபாட்டைக் கொண்டிருந்தால், இந்த வினையானது சீர்மையற்ற விளைபொருட்களை உருவாக்குவதில் சிறப்பான விளைவைத் தரும்.  இந்த வினையை சிறப்பாக முழுமையடையச் செய்ய வெவ்வேறு தொடர்களில் உள்ள ஆலஜன்களைக் கொண்ட வினைபொருட்கள் உருவாக்கப்பட வேண்டும். அல்கைல் ஆலைடு அரைல் ஆலைடை விட வினைத்திறன் கொண்டதாக இருக்கும் காரணத்தால், அல்கைல் ஆலைடைக் கொண்டிருக்கும் வாய்ப்பை அதிகமாக்குவது ஆர்கனோ சோடியம் பிணைப்பை உருவாக்கும். இந்த ஆர்கனோ சோடியம் பிணைப்பானது அரைல் ஆலைடை நோக்கி கருக்கவர் பொருளாக மிகவும் திறனுடன் செயல்படும்.[3] இந்த வினையானது குறிப்பாக அரைல் ஆலைடுகளின் அல்கைலேற்றத்திற்கு பயன்படுகிறது. இருந்த போதிலும், மீயொலிகளின் பயன்பாடு இந்த வினையின் பயன்பாட்டினால் பைபினைல் சேர்மங்களின் தயாரிப்பிற்கும் பயன்படுத்த முடிகிறது.[4]

மேலும் காண்க[தொகு]

  • உர்ட்சு வினை

குறிப்புகள்[தொகு]

  1. Bernhard Tollens, Rudolph Fittig (1864). "Ueber die Synthese der Kohlenwasserstoffe der Benzolreihe". Annalen der Chemie und Pharmacie 131 (3): 303–23. doi:10.1002/jlac.18641310307. 
  2. Rudolph Fittig; Joseph König (1867). "Ueber das Aethyl- und Diäthylbenzol (p)". Annalen der Chemie und Pharmacie 144 (3): 277–94. doi:10.1002/jlac.18671440308. 
  3. Desai, K.R. (2008). Organic Name Reactions. Jaipur I India: Oxford Book Company. பக். 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788189473327. http://www.amazon.com/Organic-Name-Reactions-K-R-Desai/dp/8189473328. 
  4. Laue, Thomas & Plagens, Andreas (2005). Named Organic Reactions 2nd Ed.. Wolfsburg, Germany: John Wiely & Sons, Ltd.. பக். 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780470010402.