உர்சுலா பி. மார்வின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உர்சுலா பி. மார்வின்
Ursula B. Marvin
மார்வின், 1978
பிறப்புஆகத்து 20, 1921 (1921-08-20) (அகவை 102)
வெர்மாண்ட்
துறைகோள்சார் புவியியல்
பணியிடங்கள்சுமித்சோனிய வானியற்பியல் காணகம்
கல்வி கற்ற இடங்கள்டஃப்ட்சு பலகலைக்கழகம்,
ஆர்வார்டு பல்கலைக்கழகம்-இராடுகிளிப்
அறியப்படுவதுகண்டத்திட்டுப் பெயர்ச்சி: குருத்துப்படிமத்தின் படிமலர்ச்சி
விருதுகள்அறிவியல், பொறியியலில் பெண்களுக்கான வாழ்நாள் சாதனை விருது
துணைவர்தாமசு குரோக்கெட் மார்வின்

உர்சுலா பைலி மார்வின் (Ursula Bailey Marvin) (பிறப்பு: ஆகத்து 20, 1921)[1] ஓர் அமெரிக்க கோள் அறிவியலாளரும்ம் எழுத்தாளரும் ஆவார். இவர் சுமித்சோனிய வானியற்பியல் காணகத்தில் பணிபுரிந்தார்.[2]

இவர்1997 இல் அறிவியல், பொறியியலில் பெண்களுக்கான வாழ்நாள் சாதனை விருதை வென்றார்.[3] இவருக்கு 1986 இல் அமெரிக்கப் புவியிய்ல் கழகம் புவியியல் வரலாற்று விருதை வழங்கியது. இவர் 2005 ஆம் ஆண்டின் சுயி டய்ல்ர் பிரீடுமன் பதக்கத்தைப் பெற்றார்.[4] அண்டார்ட்டிகாவின் மார்வின் நுனாதாக் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது. இவருக்கு 2012 இல் வானிலையியல் கழகம் தன் சேவை விருதை வழங்கியது.[5][6] இது இவரது விண்கல் ஆய்வாளர்களின் விண்கற்களின் வாய்மொழி வரலாற்றுக்காக வழங்கப்பட்டது.[7][8] சிறுகோள் (4309) மார்வின் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.

வாழ்க்கைப் பணி[தொகு]

அண்டார்ட்டிகாவில் உர்சுலா பி. மார்வின்

மார்வின் வெர்மாண்டில் பிறந்தார். இவர் தன் இளவல் பட்டத்தை வரலாற்றில் 1943 இல் டஃப்ட்சு பல்கலைக்கழகத்தில் பெற்றார். இவர் 1946 இல் ஆர்வார்டு பல்கலைக்கழக இராடுகிளிப் கல்லூரியில் தன் முதுவர் பட்டத்தை புவியியலில் பெற்றார். இவர் 1952 இல் புவியியலாளர் தாமசு குரோக்கெட் மார்வினை(ஜூன் 28, 1916 – ஜூலை 1, 2012) மணந்தார். இவர் சுமித்சோனிய வானியற்பியல் கணகதில் நிலையான ஆராய்ச்சியாளர் பதவியை 1961 இல் பெற்றார். இவர் தன் முனைவர் பட்டத்தைப் புவியியலில் ஆர்வார்டில் இருந்து 1969 இல் பெற்றார்.[7]

இவர் 1973 இல் கண்டத்திட்டுப் பெயர்ச்சி: கருத்துப்படிமத்தின் படிமலர்ச்சி (Continental Drift: Evolution of a Concept) எனும் நூலை எழுதி வெளியிட்டார்.[9] இவரது கோள் அறிவியலுக்கான பங்களிப்புகள் விண்கற்கள், நிலாப் பதக்கூறுகளின் ஆய்வாகும். இவர் இசுபுட்னிக் 4 இன் பதக்கூறுகளை இரும்பு விண்கற்கள் தொடர்பான ஆய்வுப் பயன்பாடுகளுக்காக காலப்போக்கில் உயிரகவேற்ற வினைபொருள்கள் அடையும் மாற்றங்களின் பகுப்பாய்வைச் செய்து பல கட்டுரைகளை வெளியிட்டார்.[10] இவர் அப்பொல்லோ 12,[11] அப்பொல்லோ 15,[12] அப்பொல்லோ 16[13][14] திட்டங்களில் கொண்டுவரப்பட்ட பதக்கூறுகளை ஆய்வு செய்துள்ளார். கூடுதலாக இவர் உருசிய நிலாப்பயணங்களில் கொணரப்பட்ட நிலாப் பதக்கூறுகளை உலூனா16,[15] உலூனா 20 ஆகிய பயணங்களுக்காக பகுப்பாய்வு செய்துள்ளார்.[16]

மூன்று தொடக்கநிலை ANSMET அளக்கைகளுக்காக இவர் அண்டார்ட்டிகா சென்றுவந்துள்ளார்[17] இவர் முதல் நிலா விண்கல்லான ஆலன் கில்சு A81005 இன் கூறுகளையும் பகுப்பாய்வு செய்துள்ளார்.[18]

இவர் 1975 முதல் 1985 வரை டஃப்ட்சு பல்கலைக்கழகத்தின் தகைமை அறக்கட்டளையாளராக இருந்துள்ளார்.[19]

மேற்கோள்கள்[தொகு]

 1. R.R. Bowker Co (2009). American Men & Women of Science. Thomson/Gale ISBN 9781414433059
 2. ABC-CLIO American Women of Science Since 1900 ISBN 9781598841589
 3. Staff report (July 1997). Ursula Marving honoers by 'WISE' award for lifetime achievement in science. The CfA Almanac
 4. Geological Society of London. "Award winners since 1931: Sue Tyler Friedman Medal". பார்க்கப்பட்ட நாள் 2013-11-24.
 5. "Awards of The Meteoritical Society". The Meteoritical Society. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
 6. "Awardees of the Meteoritical Society". The Meteoritical Society. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
 7. 7.0 7.1 Sears, Derek (13 July 2012). "2012 Service Award of the Meteoritical Society for Ursula Marvin". Meteoritics & Planetary Science 47 (7): 1238–1240. doi:10.1111/j.1945-5100.2012.01389.x. Bibcode: 2012M&PS...47.1238S. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1945-5100.2012.01389.x/abstract. பார்த்த நாள்: 27 March 2015. 
 8. Marvin, Ursula (13 July 2012). "Response to Presentation of the Service Award of the Meteoritical Society". Meteoritics and Planetary Science 47 (7): 1241–1242. doi:10.1111/j.1945-5100.2012.01388.x. Bibcode: 2012M&PS...47.1241M. 
 9. Marvin, Ursula B. (1974). Continental drift : the evolution of a concept (2. print., with corrections ). Washington, DC: Smithsonian Inst. Press. 
 10. Marvin, Ursula (1 Sep 1963). "Mineralogy of the oxidation products of the Sputnik 4 fragment and of iron meteorites". Journal of Geophysical Research 68 (17): 5059–5068. doi:10.1029/JZ068i017p05059. Bibcode: 1963JGR....68.5059M. 
 11. Marvin, Ursula (Feb 18, 1985). "A transient heating event in the history of a highlands troctolite from Apollo 12 soil 12033". Journal of Geophysical Research 90 (S2): C420-C430. doi:10.1029/JB090iS02p0C421. Bibcode: 1985JGR....90..421M. 
 12. Marvin, Ursula (Feb 1989). "Cordierite-Spinel Troctolite, a New Magnesium-Rich Lithology from the Lunar Highlands". Science 243 (4893): 925–928. doi:10.1126/science.243.4893.925. பப்மெட்:17783768. Bibcode: 1989Sci...243..925M. 
 13. Marvin, Ursula B.; Lindstrom, Marilyn M.; Bernatowicz, T. J.; Podosek, Frank A.; Sugiura, Naoji (1987). "The composition and history of breccia 67015 from North Ray Crater". Journal of Geophysical Research 92 (B4): E471. doi:10.1029/JB092iB04p0E471. Bibcode: 1987JGR....92E.471M. 
 14. Marvin, Ursula B.; Lindstrom, Marilyn M. (1983). "Rock 67015: A feldspathic fragmental breccia with KREEP-rich melt clasts". Journal of Geophysical Research 88 (S02): A659. doi:10.1029/JB088iS02p0A659. Bibcode: 1983JGR....88..659M. 
 15. Reid, John B.; Taylor, G. Jeffrey; Marvin, Ursula B.; Wood, John A. (January 1972). "Luna 16: Relative proportions and petrologic significance of particles in the soil from Mare Fecunditatis". Earth and Planetary Science Letters 13 (2): 286–298. doi:10.1016/0012-821X(72)90104-5. Bibcode: 1972E&PSL..13..286R. 
 16. Taylor, G.Jeffrey; Drake, Michael J; Wood, John A; Marvin, Ursula B (April 1973). "The Luna 20 lithic fragments, and the composition and origin of the lunar highlands". Geochimica et Cosmochimica Acta 37 (4): 1087–1106. doi:10.1016/0016-7037(73)90203-2. Bibcode: 1973GeCoA..37.1087T. 
 17. Marvin, Ursula (Dec 1979). "Meteorites on Ice: Preliminary Report on the 1978-1979 Antarctic Field Season". Meteoritics 14: 486–487. Bibcode: 1979Metic..14..486M. 
 18. Marvin, Ursula B. (September 1983). "The discovery and initial characterization of Allan Hills 81005: The first lunar meteorite". Geophysical Research Letters 10 (9): 775–778. doi:10.1029/GL010i009p00775. Bibcode: 1983GeoRL..10..775M. 
 19. "Trustees Emeriti at Tufts". Trustees Emeriti. Tufts University. பார்க்கப்பட்ட நாள் 27 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்சுலா_பி._மார்வின்&oldid=2749701" இலிருந்து மீள்விக்கப்பட்டது