உரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உரோன் (Ron) என்பது இந்தியாவின் கர்நாடகாவின் கதக் மாவட்டத்தில் ஒரு வட்ட தலைமையகம் ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரம் பண்டைய காலங்களில் துரோணாபூர் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ளக் கோவில்கள் பண்டைய கட்டிடக் கலைஞரும், போர்வீரரும், முனிவருமான துரோணாச்சாரியரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.[1]

உரோனில் உள்ள வரலாற்று நினைவுச்சின்னங்கள்[தொகு]

உரோன் நகரில் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் உள்ளன, அவற்றுள்:

  • சத்குரு சித்தருத சுவாமி கோயில்
  • அனந்தசயனன் கோயில்
  • அனந்தசயன கோயிலுக்கு அருகிலுள்ள ஈஸ்வரர் கோயில்
  • ஈஸ்வரர் கோயில்
  • கல்லக் குடி (கல் கோயில்) ஈஸ்வர் நகர்
  • உலோகநாதர் கோயில்
  • மல்லிகார்ஜுனர் கோயில்
  • பார்சவநாதர் சமண கோயில்
  • தொட்டிக்கு அருகிலுள்ள சோமலிங்கேசுவரர் கோயில்

சிறீ வீரபத்ரேசுவர் கோயில் உரோனின் பிரதான தெய்வமாகும். மேலும், வருடாந்திர தேர்த் திருவிழா மே மாதத்தில் கசேந்திரகர் சாலையில் உள்ள சிவானந்தா மடத்தில் நடைபெறுகிறது

உரோன் தாலுகாவில் சுற்றுலா[தொகு]

  • சித்தருத சுவாமி கோயில் - உரோனில் சித்தருத மாதா என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கோயிலாகும். இராம நவமிக்கு முன்னதாக சிறீ சித்தருத சுவாமியின் பிறந்த நாள் கோயிலின் புகழ்பெற்ற தேரினை இழுத்து கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆயிரக்கணக்கான் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது. இந்த புகழ்பெற்ற கோவிலில் ஏழு நாட்கள் சப்தம் எனப்படும் சடங்குகள் நடத்தப்படுகிறது.
கர்நாடகாவின் கசேந்திரகாட் அருகே இடகி பீமாம்பிகை கோயில்
  • இடகியில் இடகி பீமாம்பிகை என அழைக்கப்படும் புகழ்பெற்ற கோயில் ஒரு வரலாற்று சிவன் கோயிலான கசேந்திரகாட்டின் கலகேசுவரர் கோயிலிருந்து சுமார் 13 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு பெண் தெய்வத்திடம் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் இந்த இடத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தேங்காய்களைக் கட்டி, தங்கள் ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
  • சூடி இந்தியாவின் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரமாகும். ஒரு காலத்தில் இது கி.பி 1000 காலத்தில் மேலைச் சாளுக்கியர்களின் முக்கிய நகரமாக இருந்தது. இது இரட்டை கோபுர கோயில் போன்ற அரிய கல்லால் செதுக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் செதுக்கல்களால் கட்டப்பட்ட பெரிய கிணறு மற்றும் வேறு சில கட்டமைப்பு கோயில்களுக்கு பிரபலமானது. நீண்ட காலமாக இந்த அற்புதமான கட்டமைப்புகள் கைவிடப்பட்டன. ஆனால் சமீபத்தில் அவை இந்திய தொல்பொருள் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளன.
  • பெலவனகி 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் மராட்டிய மன்னர் சிவாஜி (பேரரசர்) மற்றும் பேஷ்வாக்கள் ஆகியோரால் ஆளப்பட்டு வந்தது. இந்த கிராமத்தின் பெயர் பழைய பெயரான 'பெலவாலா-நாடு 300' (தக்காணப் பீடபூமி) அல்லது பெல்வோலா -300 என்றால் 300 கிராமங்களை உள்ளடக்கியது. மேலும் வளமான நிலம் என்று பொருள்படும். பெலவனக்கியில் வீரபாத்ரனின்ன் சிலை கர்நாடகாவில் சிறந்த சிற்பமாக கருதப்படுகிறது. எனவே இது தார்வாடு மாவட்ட வர்த்தமானியில் (ஆங்கிலம்-எம் ஆர் பாலாண்டே .1959) குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னட-சூரியநாத் காமத் .1995). இது எஸ். ஆர். ஹிரேமத் என்ற சமூக ஆர்வலரும் சமாஜா பரிவர்த்தன சமுதாயத்தின் நிறுவனத் தலைவருமான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான தேசியக் குழு மற்றும் இந்தியா மேம்பாட்டு சேவையின் பிறப்பிடமாகும் .

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-01-13. பார்க்கப்பட்ட நாள் 2020-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோன்&oldid=3806280" இலிருந்து மீள்விக்கப்பட்டது