உள்ளடக்கத்துக்குச் செல்

உரோஜர் ஜான் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேரா.உரோஜர் ஜான் டெய்லர் (Roger John Tayler) [1] (25 அக்தோபர் 1929 – 23 ஜனவரி 1997) ஒரு பிரித்தானிய வானியலாளரும் அரசு கழக ஆய்வுறுப்பினரும் பிரித்தானியப் பேரரசாணையைப் பெற்றவரும் ஆவார். இவர் உடுக்கணக் கட்டமைப்பும் படிமலர்ச்சியும், மின்னணுப் பாய்ம நிலைப்பு, அணுக்கரு வினைவழித் தனிமவாக்கம், அண்டவியல் ஆகிய புலங்களில் முதன்மையான கொடைகளை வழங்கியுள்ளார். இவர் பல பாடநூல்களை இயற்றியுள்ளார். இவர் அண்ட இய்ற்பியலில் எல்லியவாக்கச் சிக்கல்களைப் பற்றி பிரெட் அயிலுடனும் சுட்டீவன் ஆக்கிங்குடனும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்க்ழகத்தில் கூட்டாய்வு செய்துள்ளார்.[2]

கல்வி

[தொகு]

இவர் 1940 இலிருந்து 1947 வரை சொலிகல் பள்ளியில் கல்வி பயின்றார். இவர் முதலில் ஆர்வெல்லிலும் குகாமிலும் இருந்த அணுவாராய்ச்சி நிறுவனத்திலும் பின்னர் கேம்பிரிட்ஜ் பல்க்லைக்கழகத்திலும் பணியாற்றினார். இங்கு இவர் கணிதவியல் விரிவுரையாளராகவும் கிறித்தி கல்லூரியில் பாட்த் திட்ட ஆய்வுறுப்பினராகவும் இருந்தார். பின்னர், இவர் 1966 இல் சுசெக்சு பல்கலைக்கழகத்துக்கு சென்றார். இவர் 1969 இல் வானியல் பேராசிரியராக இலண்டன் கிரெழ்சாம் கல்லூரியில் பணியமர்த்தப்பட்டார்.

வாழ்க்கைப்பணி

[தொகு]

இவர் அரசு வானியல் கழகத்தில் 1971 இலிருந்து 1979 வரை செயலாளராகவும் 1979 இலிருந்து 1987 வரை பொருளாளராகவும் இறுதியாக1989 இலிருந்து 1990 வரை தலவராகவும் இருந்துள்ளார். இவர் 1995 இல் அரசு கழக ஆய்வுறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவரது பேராளுமைச் சான்று பின்வர்மாறு கூறுகிறது. " உரோஜர் டெய்லரின் பன்முக வானியல் பணி விண்மீன்கண படிமலர்ச்சி முன்னோடி ஆய்வுகளோடும் பகுதி வெப்பச்சுழல்வு நிகழ்வின் கண்டுபிடிப்போடும் தொடங்கியது. இவரது ஆர்வெல் மின்னணுப் பாய்ம நிலைப்பு குறித்த ஆய்வு, நிலைப்புற்ற சிட்டிகை விவாதமும் தடைமையால் உருவாகும் நிலைப்பின்மைகளின் முன்கணிப்பும் உள்ளடக்கியதாகும். பின்னர், இவர் இந்தப் புலமையினைக் காந்தப்புலங்களின் ஆய்வுக்கும் வெப்பச்சுழலூடாக சுழற்சிக்கும் காந்தப்புலங்களுக்கும் இடையிலான ஊடாட்ட நிலைப்பு பற்றிய ஆய்வுக்கும் பயன்படுத்தினார். அண்டவியலில், இவர் ஆயிலுடன் இணைந்து, அண்ட எல்லியச் செறிவைக் கண்க்கிட்டுள்ளார். இதில் நொதுமி(neutron) அரைவாணாள் குறித்தும் நொதுமன்(neutrino ) வகைகளின் எண்ணிக்கையின் முதன்மை குறித்தும் வற்புறுத்தியுள்ளார். இவர் அணுக்கருத் தொகுப்பில் உயர் வெப்பநிலைகளில்செறிவாக இரும்பு உச்சத் தனிமங்கள் உருவாதலைக் கணித்துள்ளார். அண்மையில் இவர் பால்வெளிகளின் வேதியியல் படிமலர்ச்சி ஆழமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார். இவர் கணிசமான ஆழமும் பொருளும் மிக்க மீளாய்வுக் கட்டுரைகளும் பாடநூல்களும் எழுதியுள்ளார். இவை உலக முழுவதும் பின்பற்றப்படுகின்றன. மேலும், இவர் அரசு வானியல் கழகத்தின் ஊடாக தன்னிகரற்ற பொதுமக்கள்நலத்துக்காகப் பாடுபட்டுள்ளார்." [3]

இவர் 1990 புத்தாண்டு தகைமை வழங்கல் நிகழ்வில் பிரித்தானியப் பேரரசாணை வழங்கப்பட்டார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Mestel, L.; Pagel, B. E. J. (1998). "Roger John Tayler, O. B. E.. 25 October 1929-23 January 1997". Biographical Memoirs of Fellows of the Royal Society 44: 405. doi:10.1098/rsbm.1998.0026. 
  2. Douglas Gough (September 1997). "Obituary: Roger John Tayler". Physics Today 50 (9): 98–100. doi:10.1063/1.881896. Bibcode: 1997PhT....50i..98G. http://www.physicstoday.org/resource/1/phtoad/v50/i9/p98_s2?bypassSSO=1. 
  3. "Library and Archive Catalogue". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 31 December 2010.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோஜர்_ஜான்_டெய்லர்&oldid=3955115" இலிருந்து மீள்விக்கப்பட்டது