உரோசாவின் விதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓர்டோவிசியக் கால டிரைலோபைட், திண்டிமீன் டிடிமோகிராப்டி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மார்பக கண்டங்களைக் கொண்டுள்ளன.

உரோசாவின் விதி (Rosa's rule) என்பது பரிமாணத்தின் முற்போக்கின் போது மாறுபாடு குறைப்பு உரோசா விதி என்றும் அழைக்கப்படுகிறது.[1] இது உயிரியல் விதிகளுள் ஒன்றாகும். வகைபிரித்தல் குழுவின் மிகவும் பழமையான பிரதிநிதிகள் அல்லது கிளைகளில் உள்ள குணாதிசய மாறுபாட்டிலிருந்து மிகவும் மேம்பட்ட உறுப்பினர்களில் நிலையான தன்மை நிலைக்குச் செல்லும் போக்கை இது கவனிக்கிறது. உரோசாவின் விதிக்கு எடுத்துக்காட்டாக முதிர்வடைந்த (அல்லது ஹோலாஸ்பிட்கள்) கேம்ப்ரியக்கால டிரைலோபைட் சிற்றினங்களில் மார்பு கண்ட எண்ணிக்கையில் மாறுபாடு உள்ளது. ஓர்டோவிசியக் கால பேரினங்கள், குடும்பங்கள் மற்றும் துணைப்பிரிவுகளில் மார்பக கண்ட எண்ணிக்கை மாறாமல் உள்ளன.[2] இவ்வாறு, பரிணாம வளர்ச்சியின் போது வகைப்பாட்டுக் குழுக்கள் தனி இனங்களிடையே கண்டங்களின் எண்ணிக்கை குறைவதைக் காணலாம். இந்த விதி இத்தாலியப் பழங்கால ஆராய்ச்சியாளர் டேனியல் உரோசாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Phylogenetic Systematics, by Willi Hennig (translated from German by D. Dwight Davis and Rainer Zangerl); originally published in German in 1966; published in 1979 by University of Illinois Press (via Google Books)
  2. Hughes, Nigel C. (1994). "Ontogeny, Intraspecific Variation, and Systematics of the Late Cambrian Trilobite Dikelocephalus". Smithsonian Contributions to Paleobiology 79 (79): 89. doi:10.5479/si.00810266.79.1. http://www.sil.si.edu/smithsoniancontributions/Paleobiology/pdf_hi/SCtP-0079.pdf. பார்த்த நாள்: 2014-03-07. 
  3. Life's Splendid Drama: Evolutionary Biology and the Reconstruction of Life's Ancestry, 1860-1940, by Peter J. Bowler; published 1995 by University of Chicago Press (via Google Books)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோசாவின்_விதி&oldid=3428633" இலிருந்து மீள்விக்கப்பட்டது