உள்ளடக்கத்துக்குச் செல்

உரோகிணி பாலகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோகிணி பாலகிருட்டிணன்
Rohini Balakrishnan
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
துறைவிலங்கு தொடர்பு, உயிர் ஒலியியல்
பணியிடங்கள்இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்
கல்வி கற்ற இடங்கள்டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
ஆய்வு நெறியாளர்வெரோனிகா ரோத்ரிகசு
தாக்கம் 
செலுத்தியோர்
ஒபைது சித்திக்கி
இணையதளம்
http://ces.iisc.ernet.in/rohini/

உரோகிணி பாலகிருட்டிணன் (Rohini Balakrishnan) இந்திய உயிர் ஒலியியல் நிபுணர் ஆவார். பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் மூத்த பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். இவருடைய ஆராய்ச்சி விலங்குகளின் தொடர்பு மற்றும் உயிர் ஒலியியல் மூலம் விலங்குகளின் நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.[1]

கல்வி மற்றும் தொழில்

[தொகு]

உரோகிணி பாலகிருட்டிணன் உயிரியலில் இளநிலைப் பட்டமும் விலங்கியல் துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார். இந்தியாவின் மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் 1991 ஆம் ஆண்டு நடத்தை மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார். இந்திய மரபியல் அறிஞரான வெரோனிகா ரோட்ரிக்சின் முதல் முனைவர் பட்ட உரோகிணி ஆவார். [2] [3] பின்னர் இவர் நடத்தை சூழலியல் துறையில் நுழைந்தார். விலங்குகளில் ஒலி தகவல்தொடர்புகளைப் படித்தார் 1993 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியை மேற்கொண்டார், அதைத் தொடர்ந்து செருமனி நாட்டின் எர்லாங்கன் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுநிலை (1996-1998) பட்டம் பெற்றார். [1] 1998 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவர் தற்போது சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். [1]

ஆராய்ச்சி

[தொகு]

உரோகிணி பாலகிருஷ்ணனின் தற்போதைய ஆராய்ச்சி, ஒலி தொடர்புகளைப் பயன்படுத்தி விலங்குகளின் நடத்தையின் காரணங்களையும் விளைவுகளையும் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவரது ஆய்வகம் நடத்தை மற்றும் தென்னிந்தியாவின் வெப்பமண்டல காடுகளில் அமைந்துள்ள பல கள தளங்களில் நடத்தையை வடிவமைக்கும் சுற்றுச்சூழல் அழுத்தங்களை ஆய்வு செய்கிறது. [4] இந்த ஆராய்ச்சி முதன்மையாக வெட்டுக்கிளி மற்றும் வெளவால்களில் கவனம் கொள்கிறது இதற்காக குத்ரேமுக் தேசிய பூங்கா, [5] யானைகள் முதுமலை வனவிலங்கு சரணாலயம் [6] மற்றும் பில்லிகிரி ரங்கசாமி கோயில் சரணாலயத்தில் உள்ள பாடும்பறவைகள் ஆகியவை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. [7] இவரது ஆய்வகம் முதன்முதலில் [[துடுப்பு வால் கரிச்சான்|ஆசியப் பறவையான துடுப்பு வால் கரிச்சான் குரல் தொடர்பை ஆராய்ச்சி செய்தது. [8] ஒலி தொடர்பு மற்றும் நடத்தையைப் பயன்படுத்தி, இவரது ஆராய்ச்சி பல கருப்பொருள்களை ஆராய்கிறது: சமிக்ஞை இயக்கவியல் மற்றும் ஒலி உருவாக்கும் வெட்டுக்கிளி பூச்சி உடலியல் மற்றும் பெறும் பூச்சியின் செவிவழி நடத்தை இதற்கு எட்டுத்துக்காட்டாகும். உலாவல் உத்திகள் மற்றும் வேட்டையாடும்-இரை தொடர்புகள் மற்றும் இனப்பெருக்கத் தேர்வுகள் மற்றும் துணையின் தேர்வு ஆகியவற்றையும் இவரது ஆராய்ச்சிப் பார்வை பார்க்கிறது. [9] ஆராய்ச்சியைத் தவிர, அடையாளம் காண வசதியாக பல்வேறு உயிரினங்களின் ஒலி சமிக்ஞைகளின் தரவுத்தளங்களை உருவாக்கி சரிபார்க்கவும் இவர் ஆர்வம் காட்டுகிறார். இது ஆக்கிரமிப்பு இல்லாத மாதிரியை அனுமதிக்கும் சூழலில் நிறுவப்பட்ட தானியங்கி பதிவுசெய்யும் கருவியைப் பயன்படுத்தி அவ்வப்போது பல்லுயிர் கண்காணிப்பை செயல்படுத்துகிறது. இவரது குழு 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட யானை அழைப்புகளின் நூலகங்களை உருவாக்கியும், 90 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பறவைகளின் குரல்களையும் பதிவு செய்துள்ளது. [6] [7]

சிறப்பு

[தொகு]

மெக்சிகோவிலும் கேரளாவிலும் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வகையான வெட்டுக்கிளிகள் இவரது நினைவாக ஓகாந்தசு ரோகிணியா மற்றும் டெலியோகிரில்லசு ரோகிணி என்று பெயரிடப்பட்டுள்ளன. [10] [11] பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவன வளாகத்தில் புரோசுவெனெல்லா பெங்களூரான்சிசு உட்பட பல புதிய வகை வெட்டுக்கிளிகளையும் உரோகிணி பாலகிருட்டிணன் கண்டுபிடித்துள்ளார். [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Chasing the Music in Nature: In Conversation with Bioacoustician Dr Rohini Balakrishnan". The Weather Channel (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-30."Chasing the Music in Nature: In Conversation with Bioacoustician Dr Rohini Balakrishnan". The Weather Channel. Retrieved 30 September 2020.
  2. "Obaid Siddiqi and Veronica Rodrigues". Ces.iisc.ernet.in. பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
  3. "4 Academic generations". ces.iisc.ernet.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-30.
  4. "Ecology of acoustic signaling and the problem of masking interference in insects". Journal of Comparative Physiology A. 
  5. Balakrishnan, ROHINI; Pollack, GERALD S. (1996-02-01). "Recognition of courtship song in the field cricket,Teleogryllus oceanicus" (in en). Animal Behaviour 51 (2): 353–366. doi:10.1006/anbe.1996.0034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-3472. http://www.sciencedirect.com/science/article/pii/S0003347296900342. 
  6. 6.0 6.1 Nair, S.; Balakrishnan, R.; Seelamantula, C. S.; Sukumar, R. (2009). "Vocalizations of wild Asian elephants (Elephas maximus): structural classification and social context". The Journal of the Acoustical Society of America 126 (5): 2768–2778. doi:10.1121/1.3224717. பப்மெட்:19894852. https://pubmed.ncbi.nlm.nih.gov/19894852/. 
  7. 7.0 7.1 "Decoding Birdsong". 
  8. Agnihotri, Samira; Sundeep, P. V. D. S.; Seelamantula, Chandra Sekhar; Balakrishnan, Rohini (6 March 2014). "Quantifying Vocal Mimicry in the Greater Racket-Tailed Drongo: A Comparison of Automated Methods and Human Assessment". PLOS ONE 9 (3): e89540. doi:10.1371/journal.pone.0089540. பப்மெட்:24603717. 
  9. Bhattacharya, M.; Isvaran, K.; Balakrishnan, R. (2017). "A statistical approach to understanding reproductive isolation in two sympatric species of tree crickets". Journal of Experimental Biology 220 (Pt 7): 1222–1232. doi:10.1242/jeb.146852. பப்மெட்:28096428. 
  10. "Oecanthus rohiniae sp. nov. (Gryllidae: Oecanthinae): A new chirping tree cricket of the rileyi species group from Mexico". Journal of Orthoptera Research. 18 Feb 2021. 
  11. 11.0 11.1 "Rohini Balakrishnan, IISc scientist who 'shares' name with cricket species in Kerala & Mexico". The Print. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோகிணி_பாலகிருட்டிணன்&oldid=3284650" இலிருந்து மீள்விக்கப்பட்டது