உரூலா கனி
உரூலா கனி | |
|---|---|
| رولا غنى | |
| தாய்மொழியில் பெயர் | رولا غنى |
| பிறப்பு | உரூலா எஃப். சாடே 1948 (அகவை 77–78) லெபனான் |
| குடியுரிமை | லெபனான் ஆப்கானித்தான் அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
| படித்த கல்வி நிறுவனங்கள் | பாரிஸ் அரசியல் ஆய்வுகள் நிறுவனம் பெய்ரூத் அமெரிக்கப் பல்கலைக்கழகம் கொலம்பியா பல்கலைக்கழகம் |
| முன்னிருந்தவர் | சீனத் கர்சாய் |
| வாழ்க்கைத் துணை | அசரஃப் கனி அகமத்சய் (தி. 1975) |
| பிள்ளைகள் | மரியம் கனி உட்பட 2 பேர் |
உரூலா எஃப். சாடே கனி (Rula F. Saadah Ghani, ஆப்கானியப் பெயர்: பீபி குல், பிறப்பு: 1948) ஆப்கானிஸ்தானின் முன்னாள் முதல் பெண்மணியும் ஆப்கானிய முன்னாள் குடியரசுத் தலைவரான அசரஃப் கனி அகமத்சயின் மனைவியும் ஆவார்.[1][2]
2015-ஆம் ஆண்டில், டைம் இதழ் வெளியிட்ட உலகில் மிகவும் தாக்கமேற்படுத்திய டைம் 100 நபர்கள் பட்டியலில் உரூலா கனி இடம்பெற்றுள்ளார்.[3]
சொந்த வாழ்க்கை
[தொகு]
உரூலா கனி, உரூலா சாடே அல்லது இரௌலா சாடே என்ற பெயரில் லெபனானில் உள்ள ஒரு லெபனானிய மரோனைட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார்.[4] 1969-ஆம் ஆண்டு, பிரான்சின் பாரிஸ் அரசியல் ஆய்வுகள் நிறுவனத்திலிருந்து சான்றிதழ் பட்டம் பெற்றார்.[5][6][7] 1974-ஆம் ஆண்டு, பெய்ரூத்தின் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் அரசியல் ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் அங்குதான் இவரது வருங்கால கணவர் அசரப் கனியை சந்தித்தார்.[8]
இந்த இணை 1975-இல் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளைப் பெற்றது. இவர்களின் மகள் மரியம் கனி புரூக்ளினில் காட்சிக் கலைஞராக இருக்கிறார். தாரிக் என்ற மகனும் உள்ளார்.[9] 1983-ஆம் ஆண்டு, நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இதழியலில் மற்றொரு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், 2003-இல் ஆப்கானிஸ்தானுக்கு திரும்பினார்.[10]
உரூலா கனி ஆப்கானிஸ்தான், லெபனான், அமெரிக்கா ஆகிய நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளார்.[11][12] அரபு, ஆங்கிலம், பிரெஞ்சு, பஷ்தூ, தாரி உள்ளிட்ட மொழிகளில் புலமை பெற்றவர் என்று கூறப்படுகிறது.[13]
2014 முதல்
[தொகு]2014-ஆம் ஆண்டில் தான் குடியரசுத் தலைவராகப் பதவியேற்கும் விழாவில் கனி தனது மனைவிக்கு அனைவர் முன்பும் நன்றி தெரிவித்தார். அவரை ஆப்கானிஸ்தான் பெயரான பீபி குல் என்று அழைத்தார்.[8] "எனக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் ஆதரவளித்த எனது கூட்டாளி பீபி குல்லுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கனி கூறினார். வரலாற்றாசிரியர் அலி ஏ ஒலோமி 2017-இல் ஆப்கானிஸ்தானின் ராணி சோராயாவின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, நாட்டில் பெண்களின் உரிமைகளில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவர உருலா கனி உதவ முடியும் என்று வாதிட்டார்.[14][15][16]
முதல் பெண்மணியாக, கனி பெண்கள் உரிமைகளுக்காக வாதாடுபவராக அறியப்பட்டார்.[17]
தாலிபான்கள் தலைநகர் காபுலைக் கைப்பற்றியபோது ஆகஸ்ட் 15, 2021 அன்று, உரூலா தனது கணவர், குழந்தைகள், இரண்டு நெருங்கிய உதவியாளர்களுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி ஓடினார். இவர்கள் வெளியேறிய சிலமணி நேரங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர் இல்லம் தலிபான்களால் கைப்பற்றப்பட்டது.[18][19] ஆகஸ்ட் 18, 2021 அன்று, ஐக்கிய அரபு அமீரகம் கனி குடும்பம் தங்கள் நாட்டில் இருப்பதாகக் கூறியது.[20]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AUB Couples". 150.aub.edu.lb. Retrieved 26 November 2017.
- ↑ "Al Arabiya: Afghan first lady in shadow of 1920s queen?". Archived from the original on 6 October 2014. Retrieved 26 November 2017.
- ↑ Hosseini, Khaled (16 April 2015). "Time 100 Leaders: Rula Ghani". Time. Retrieved 26 April 2015.
- ↑ "Alumna Rula Ghani, Afghanistan's First lady | Sciences Po Students". www.sciencespo.fr (in ஆங்கிலம்). 2017-10-23. Retrieved 2021-12-02.
- ↑ Rasmussen, Sune Engel (6 November 2014). "Rula Ghani, the woman making waves as Afghanistan's new first lady". The Guardian. https://www.theguardian.com/world/2014/nov/06/rula-ghani-afghan-first-lady.
- ↑ Burger, John (13 January 2016). "Meet Rula Ghani, Afghanistan's Christian First Lady". Aleteia. Retrieved 26 January 2020.
- ↑ "Afghanistan First Lady Rula Ghani Moves into the Limelight". பிபிசி. 15 October 2014. Retrieved 26 January 2020.
- ↑ 8.0 8.1 Alexander, Harriet (29 September 2014). "Ashraf Ghani inaugurated: Is Afghanistan ready for a high-profile first lady?". Retrieved 26 November 2017 – via www.telegraph.co.uk.
- ↑ Walsh, Declan; Nordland, Rod (14 October 2014). "Jolting Some, Afghan Leader Brings Wife Into the Picture". The New York Times. https://www.nytimes.com/2014/10/15/world/asia/as-afghan-first-lady-rula-ghani-steps-into-public-role-celebration-and-criticism.html.
- ↑ O'Donnell, Lynne (27 May 2015). "AP Interview: Afghanistan's first lady breaks taboos but insists she 'doesn't do politics'". U.S. News & World Report. https://www.usnews.com/news/world/articles/2015/05/27/ap-interview-afghanistans-first-lady-breaks-taboos.
- ↑ "Rula Ghani, the woman making waves as Afghanistan's new first lady". The Guardian. 7 November 2014. https://www.theguardian.com/world/2014/nov/06/rula-ghani-afghan-first-lady.
- ↑ "Afghanistan's next first lady, a Christian Lebanese-American?". english.alarabiya.net. 5 April 2014. Retrieved 26 November 2017.
- ↑ "A Conversation with Afghanistan First Lady Rula Ghani". www.csis.org (in ஆங்கிலம்). Retrieved 24 December 2020.
- ↑ "WSJ". 29 September 2014. https://online.wsj.com/articles/ghani-sworn-in-as-afghan-president-1411974821.
- ↑ "Foreign Policy: The real first ladies of Afghanistan". Archived from the original on 16 November 2014. Retrieved 26 November 2017.
- ↑ "Afghanistan's New President Thinks His Wife Can Play a Decisive Role in the Country's Future Despite Her Gender. Why He's Right". historynewsnetwork.org. Retrieved 26 November 2017.
- ↑ Magazine, BRIGHT (20 August 2018). "Rula Ghani, A New Kind Of First Lady, Believes Afghanistan Deserves New Stories". Medium.
- ↑ "President Ashraf Ghani flees Afghanistan as Taliban enters Kabul" (in en). South China Morning Post. Reuters. 15 August 2021. https://www.scmp.com/news/world/russia-central-asia/article/3145084/joe-biden-approves-additional-us-forces-help-remove.
- ↑ "Afghan government collapses as Ghani flees the country" (in en). Seattle Times. New York Times. 15 August 2021. https://www.seattletimes.com/nation-world/afghan-government-collapses-as-ghani-flees-the-country/.
- ↑ "Taliban violently disperse rare protest, killing 1 person". அசோசியேட்டட் பிரெசு. 18 August 2021. https://apnews.com/article/afghanistan-taliban-protest-kabul-jalalabad-61e4bfcc8027e3952ee85c448773299b.