உரூபின்சிடென் பொறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black rook
g8 black king
b7 black pawn
d7 black knight
e7 black bishop
g7 black pawn
h7 black pawn
a6 black pawn
c6 black pawn
d5 black pawn
f5 black pawn
d4 white pawn
e4 black knight
f4 white bishop
c3 white knight
d3 white bishop
e3 white pawn
f3 white knight
a2 white pawn
b2 white pawn
c2 white queen
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
c1 white rook
f1 white rook
g1 white king
8
77
66
55
44
33
22
11
abcdefgh
13.Nxd5. என்ற நகர்த்தலால் வெள்ளைக்கு சிப்பாய் பரிசாகக் கிடைக்கிறது

சதுரங்க விளையாட்டில் உரூபின்சிடென் பொறி (Rubinstein Trap) என்பது பிரபலமான திறப்பு ஆட்டமான இராணியின் பலியாட்டம் நிராகரிப்பு, பாரம்பரிய ஆட்டம் வகையில் தொடக்க நிலையில் விரிக்கப்படும் வலையாகும். கருப்பு ஆட்டக்காரர் தன் பின்வரிசையில் சிக்கிக்கொள்ளும் இராணியைக் காப்பாற்ற ஒரு சிப்பாயை இழக்க வேண்டிய நிலை வெள்ளை ஆட்டக்காரரால் உருவாக்கப்படுகிறது. கருப்புச் சிப்பாயின் பாதுகாப்பில் நிற்கும் சிப்பாயை வெள்ளை ஆட்டக்காரர் Nxd5 என்று ஆடி குதிரையை பலி கொடுக்கிறார். கருப்பு ..cxd5 என்று விளையாடி பலியை ஏற்றுக்கொண்டால் வெள்ளை ஆட்டக்காரர் Bc7 என்று விளையாடி, கருப்பு இராணியின் கதையை முடித்து விடுவார். எனவே பலியாக வந்த குதிரையைக் கைப்பற்றாமல் கருப்பு தன் சிப்பாயை இழக்கிறார்.

வரலாறு[தொகு]

அகிபா உரூபின்சிடென் என்ற சதுரங்க வீரரின் பெயரால் அழைக்கப்படும் இப்பொறியில் அவர் இரண்டு முறை விழுந்து எழுந்திருக்கிறார். 1928 ஆம் ஆண்டில் பேடு கிச்சின்சனில் நடைபெற்ற மேக்சு இயூவிக்கு எதிரான ஆட்டத்திலும் 1930 ஆம் ஆண்டு சான் ரெமோவில் நடைபெற்ற அலெக்சாண்டர் அலெக்கினுக்கு எதிரான ஆட்டத்திலும் உரூபின்சிடென் இந்தப் பேரிடரில் சிக்கியிருக்கிறார். ஆனாலும் இப்பேரிடரில் சிக்கிய முதல் வீரர் உரூபின்சிடென் அல்ல என்பது சற்று ஆறுதலான செய்தியாகும். 1905 ஆம் ஆண்டில் ஓச்டெண்டுவில் நடைபெற்ற ஆமோச் பர்ன் மற்றும் எயின்ரிச் வுல்பு இடையிலான ஆட்டந்தான் உரூபின்சிடென் பொறி ஆட்டமென்று முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்ட ஆட்டமாக உள்ளது.

அலெக்கின் - உருபின்சிடென், சான் ரெமோ, 1930[1]

1. d4 d5 2. Nf3 Nf6 3. c4 e6
இராணியின் பலியாட்டம் நிராகரிப்பு, பாரம்பரிய தற்காப்பு ஆட்ட வரிசைமுறை.
4. Bg5 Nbd7 5. e3 Be7 6. Nc3 0-0 7. Rc1 Re8 8. Qc2 a6 9. cxd5 exd5 10. Bd3 c6 11. 0-0 Ne4 12. Bf4 f5? (படம் பார்க்க)
கருப்பு பொறியில் சிக்கிவிட்டார்.
13. Nxd5
13 வெள்ளை ஆட்டக்காரருக்கு சிப்பாய் கிடைக்கிறது...cxd5?? என்று ஆடினால் 14.Bc7,என்று நகர்த்தி கருப்பு இராணியை கைப்பற்றி விடுவார்.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூபின்சிடென்_பொறி&oldid=1770989" இருந்து மீள்விக்கப்பட்டது