உரூத் முரே கிளே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரூத் முரே கிளே கால்டெக்கில் 2015 இல் எக்சோகால் (ExSoCal) கூட்டத்தில் கட்டுரை படித்தல்.

உரூத் முரே கிளே (Ruth Murray-Clay) சாந்தா குரூசில் உள்ள கரோலினா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆவார். இவர் கோள் அமைப்புகளின் உருவாக்கம் குறித்து ஆய்வு செய்கிறார்.[1]

வாழ்க்கைப் பணி[தொகு]

முரே கிளே 2001 இல் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் தக்வுறு கலை இளவல் பட்டம் பெற்றார்; பிறகு, பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பலகலைக்கழகத்தில் சேர்ந்து 2004 இல் கலை முதுவர் பட்டமும் 2008 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[2] இவர் 2010 வரை ஆர்வார்டு பல்கலைக்கழக் கோட்பாடு, கணிப்பியல் நிறுவனத்தில் ஆய்வுறுப்பினராக இருந்தார். அப்பொது இவர் அப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாலரும் ஆனார். இவர் 2014 இல் சாந்தா பார்பாராவில் உள்ல கலிபோர்னியா பல்களைக்கழகத்தில் சேர்ந்து இயற்பியலில் உதவிப் பேராசிரியர் ஆனார்.[2]

விருதுகள்[தொகு]

இவர் 2008 இல் மேரி எலிசபெத் உகி பரிசைப் பெற்றார்[3] இப்பரிசு இவருக்கு பெர்க்கேலி, கலிபோர்னியா பலகலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வுரைக்காக வழங்கப்பட்டது. இவர் 2012 இல் அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தில் காவ்லி ஆய்வுறுப்பினர் ஆனார்.[4] இவருக்கு 2015 இல் அமெரிக்க வானியல் கழகத்தின் வானியலுக்கான எலன் பி. வார்னர் பரிசு வழங்கப்பட்டது.[5]

பொது வாழ்க்கை[தொகு]

முரே கிளே 2015 இல் புசுபீடு பெண்வன்கோடுமையைப் பற்றிய செய்தியை வெளியிட்டதும் பொதுவாழ்வில் ஈடுபட நேர்ந்தது.[6] இச்செய்தி வானியலாளர் ஜியோப்ரி மார்சி பெண்களுக்கு இழைத்த பாலியல் வன்முறை பற்றியமைந்த்து. இவரது செயலுக்கு பல்கலைக்கழகமும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. கடைசியில் தான் மார்சி பதவியை விட்டு விலகினார்..[7][8] இந்த பாலியல் வன்கொடுமை நடந்தபோது முரே கிளே பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தார். இந்த வன்கொடுமைக்கு முடிவுகட்டவும் பல்கலைக்கழக முடக்கநிலையை எதிர்த்தும் பல முயற்சிகளை மேற்கொண்டார்.[6][9] வானியலில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கிளே முன்னெடுத்த முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட்டன.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ruth Murray-Clay | Department of Physics - UC Santa Barbara". www.physics.ucsb.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  2. 2.0 2.1 Murray-Clay, Ruth. "CV of Ruth Murray-Clay" (PDF). Archived from the original (PDF) on 2016-01-09.
  3. "Student Prizes & Awards". astro.berkeley.edu. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  4. "Ruth Murray-Clay". www.nasonline.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  5. "Helen B. Warner Prize for Astronomy | American Astronomical Society". aas.org. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  6. 6.0 6.1 "Famous Berkeley Astronomer Violated Sexual Harassment Policies Over Many Years". BuzzFeed. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
  7. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  8. Witze, Alexandra. "Berkeley sexual harassment case sparks outrage". Nature. doi:10.1038/nature.2015.18554. http://www.nature.com/news/berkeley-sexual-harassment-case-sparks-outrage-1.18554. 
  9. Wilson, Robin (2015-10-14). "How Astronomers Sought to Intervene With Geoff Marcy — and What’s at Stake for Women in the Field". The Chronicle of Higher Education. http://chronicle.com/article/How-Astronomers-Sought-to/233743. 
  10. "Geoff Marcy, Exoplanet Leader in Sexual Harassment Case, Resigns - Sky & Telescope". Sky & Telescope (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-10-13. பார்க்கப்பட்ட நாள் 2016-06-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூத்_முரே_கிளே&oldid=3545206" இலிருந்து மீள்விக்கப்பட்டது