உருள் (விண்மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடப விண்மீன்குழுவில் உள்ள விண்மீன்களில் உரோகிணி (aldebaran) மிகவும் முக்கியமானதாகும். உருள் என்று அழைக்கப்படும் இது சிவப்பு நிறமுடையதாகும். அடிவானத்தில் கார்த்திகை விண்மீன் தோன்றிய சிறிது நேரத்தில் இது தோன்றும். எனவே, பின்பற்றுபவர் என்ற பொருள்படும் அரேபியச் சொல்லிருந்து இதன் பெயர் தோன்றியதாக்க கூறப்படுகின்றது. இந்த விண்மீனின் தோற்றப் பொலிவுப் பரிமாணம் (apparent magnitude) 0.86 ஆகும். இதன் விட்டம் தோராயமாகச் சூரியனின் விட்டத்தைப் போல் ஐம்பது மடங்கு ஆகும். இது K-5 அலைமாலை வகையைச் சார்ந்தது. புவியிலிருந்து தோராயமாக ஐம்பது ஒளியாண்டு தொலைவிலுள்ள இதன் புறப்பரப்பு வெப்பநிலை 4000 °C ஆகும்.

உசாத்துணை[தொகு]

  • அறிவியல் களஞ்சியம் தொகுதி 5 - I பக்கம் - 630 - 2007 - பேரா. கே. கே. அருணாசலம்.

"திருநெல்வேலி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன கல்வியாளர் தொகுப்புக் கட்டுரை

பகுப்பு:அறிவியல்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருள்_(விண்மீன்)&oldid=2723356" இருந்து மீள்விக்கப்பட்டது