உள்ளடக்கத்துக்குச் செல்

உருளைக்கிழங்கு மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருளைக்கிழங்கு மரம்
உருளைக்கிழங்கு மரத்தின் மலர்

உருளைக்கிழங்கு மரம் (Solanum macranthum) என்பது பிரேசில் நாட்டில் காணப்படும் உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான (நாற்பது அடி (பன்னிரண்டு மீட்டர்) வெப்பமண்டல மரமாகும். மேலும் இது இரண்டு விஷயங்களுக்கு குறிப்பிடத்தக்கது. முதலில் அதன் பூக்கள் திறந்த பிறகும் பெரிதாக வளர்ந்து, அளவு இரட்டிப்பாகி, இறுதியில் இரண்டு அங்குலங்கள் (5 சென்டிமீட்டர்) அகலமாக மாறும். இது எந்த முழு அளவிலான மரத்தைவிட மிகக் குறுகிய ஆயுட்காலம் கொண்டது. இது நான்கு வயதில் முழு வளர்ச்சியடைந்து, அதன் ஐந்தாவது வயதில் இறந்துவிடும்.[1][2] மகரந்தச் சேர்க்கை செய்தால், பூக்கள் இரண்டு அங்குலங்கள் (ஐந்து சென்டிமீட்டர்) விட்டம் கொண்ட ஒரு வட்டமான, ஆரஞ்சு பழத்தை உருவாக்கும். இதனுடைய பூக்கள் 5-லிருந்து 7-மடல்களுடன் சுமார் 15 அங்குலங்கள் (39 செமீ) நீளமும் மற்றும் பாதி அகலமும் கொண்டதாக இருக்கும். பூ வெடிக்கும்போது வெள்ளையாக இருக்கும். பிறகு இது ஊதா சிவப்பு நிறமாக மாறிவிடும்.

வகைப்பாடு

[தொகு]

தாவரவியல் பெயர் : சோலானம் மேக்ரந்தம் (Solanum macrantham)

குடும்பம்  : 'சோலனேசியீ(Solanaaceae)

இதரப் பெயர் : பெரிய நட்சத்திர உருளைக்கிழங்கு மரம் (Giant star potato tree)

மரத்தின் அமைவு

[தொகு]

இக்குடும்பத்தில் மரமாக வளரக் கூடியது. இது ஒன்றே. இது 33 அடிக்கும் (10மீ) மேல் வளரக்கூடியது. விரிந்து பரந்து வளரும். இதனுடைய இலைகள் பெரியதாகவும் பலப்பிரிவுகளாக பிரிந்த பார்ப்பதற்கு மிக அழகாகவும் இருக்கும். இம்மரத்தில் உள்ள பூக்கள் உருளைக்கிழங்கு செடிகளில் உள்ள பூக்கள்போலவே இருக்கும் மேலும் இதனுடைய பூக்கள் 7 முதல் 12 கொத்தாக இருக்கும்.

இவை வேகமாக வளரக்கூடியவை. இவற்றின் விதைகள் தட்டையாக அழுந்தித் தகடு (அ) பொட்டு போல இருக்கும். விதைகள் மூலம் பயிரிடப்படுகிறது. இவற்றை அழகு மரமாக வளர்க்கிறார்கள். இக்குடும்பத்தில் 72 சாதிகளும் 1750 இனங்களும் உள்ளன. இவற்றில் இது ஒன்றே மரமாக வளரக்கூடியது.

மேற்கோள்

[தொகு]
  • சிறியதும் - பெரியதும் அறிவியல் வெளியீடு, ஜூன் 2001[3]
  1. Pertchik, Bernard and Harriet (illustrations); Knapp, Paul (text) (1951). Flowering Trees of the Caribbean. New York: Reinhard and Co. Inc. p. 21.
  2. Morton, Julia F. (1971). Exotic Plants. New York: Golden Press. p. 131.
  3. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருளைக்கிழங்கு_மரம்&oldid=3932684" இலிருந்து மீள்விக்கப்பட்டது