உரும்மானா உசேன்
உரும்மானா அபிபுல்லா உசேன் | |
|---|---|
| பிறப்பு | 1952 |
| இறப்பு | 1999 |
| பணி | கருத்தியல் கலைஞர் |
| வாழ்க்கைத் துணை | இசாத் உசேன் |
| பிள்ளைகள் | 1 |
உரும்மானா உசேன் (Rummana Hussain) ஒரு கலைஞராகவும், இந்தியாவில் கருத்தியல் கலை, நிறுவல் மற்றும் அரசியல் ஈடுபாடு கொண்ட கலையின் முன்னோடிகளில் ஒருவராகவும் இருந்தார்.[1]
தொழில்
[தொகு]உரும்மானா உசேன், இந்தியாவின் பெங்களூரில் ஓர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தார். இவர், 1983 முதல் டாட்டா குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வரும்[2] இசாத் உசேனின் மனைவி ஆவார். தனது கலை வாழ்க்கையின் பெரும்பகுதியில், உரும்மானா எண்ணெய் ஓவியம் மற்றும் நீர் வண்ணங்களில் பணியாற்றினார். பெரும்பாலும் உருவக உருவ ஓவியங்களை உருவாக்கினார்.[3][4] இருப்பினும், 1992 ஆம் ஆண்டு இந்தியாவின் அயோத்தியில் நடந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் [5] ஏற்பட்ட இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான மோதல் நிகழ்வுகளுக்குப் பிறகு இவரது கலை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உட்பட்டது- நிகழ்வுகளின் வகுப்புவாத வன்முறைக்கும், ஒரு முஸ்லிமாக கருத்தியல் தாக்குதலுக்கு இவர் திடீரென ஆளானதற்கும் பதிலளிக்கும் விதமாக, இவரது கலை மிகவும் வெளிப்படையாக அரசியல் மற்றும் தனிப்பட்டதாக மாறியது மட்டுமல்லாமல், பாரம்பரிய ஊடகங்களிலிருந்து நிறுவல், நிகழ்படம், புகைப்படம் எடுத்தல் மற்றும் கலப்பு ஊடகப் பணிகளை நோக்கி நகர்ந்தது.[6] 1990கள் முழுவதும், சஹ்மத், சப்தார் ஹாஷ்மி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்த கண்காட்சிகள் மற்றும் நிகழ்வுகளில் உரும்மானா உசைன் பங்கேற்றார். மேலும் அரசியல் உணர்வுள்ள பிற கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து பங்கேற்றார்.[7] 1998 ஆம் ஆண்டில், நியூயார்க்கு நகரில் இலாப நோக்கற்ற சமகால கலை கண்காட்சிக்கு இவர் அழைக்கப்பட்டார்.
இலண்டனிலுள்ள டேட் மாடர்ன் கலை அருங்காட்சியகம், மும்பையிலுள்ள தேசிய நவீன கலைக்கூடம், சிகாகோவிலுள்ள நவீன அருங்காட்சியகம், ஆத்திரேலியாவின் பிரிஸ்பேனிலுள்ள தல்வார் கலைக்கூடம் உள்ளிட்ட உலகளாவிய கண்காட்சிகள் மற்றும் கலை கண்காட்சிகளில் இவரது படைப்புகள் காணப்படுகின்றன.[8] இவரது படைப்புகள் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள குயின்ஸ்லாந்து கலைக்கூடத்தின் நிரந்தர சேகரிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
சொந்த வாழ்க்கை
[தொகு]உரும்மானா, இந்தியத் தொழிலதிபரும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் முன்னாள் இடைக்காலத் தலைவருமான [[இசாத் உசேன் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஷாஸ்மீன் என்ற மகள் உள்ளார்.
இறப்பு
[தொகு]புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் தனது 47 வயதில், புற்றுநோயால் இறந்தார்.[9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ . 12 October 2010.
- ↑ http://www.firstpost.com/business/ishaat-hussain-who-did-not-vote-for-cyrus-mistrys-exit-is-tcs-chairman-a-short-profile-3098046.html
- ↑ Cotter, Holland (18 July 1999). "Rummana Hussain, 47, Indian Conceptual Artist". த நியூயார்க் டைம்ஸ்.
- ↑ Mehta, Anupa (30 March 1994). "An Inward Journey". The Independent.
- ↑ "Ten memorable exhibitions from last year". ArtAsiaPacific. January 2013.
- ↑ Hoskote, Ranjit (17 April 1994). "The Metaphor Survives". The Times of India.
- ↑ Kapoor, Kamala (1997). "Home Nation". Art Asia Pacific.
- ↑ "Rummana Hussain". Talwar Gallery. Retrieved 31 July 2014.
- ↑ Cotter, Holland (16 October 1998). "Rummana Hussain: In Order to Join". The New York Times.
- ↑ Sharma, Sanjukta (2015-03-21). "The heady art of Rummana Hussain". www.livemint.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-12.
வெளி இணைப்புகள்
[தொகு]- Art India, "Look Back in Anger," August 2019
- Artforum, January 2016.
- Flash Art, "In Order to Join CSMVS and Goethe-Institute / Mumbai", April 2015
- Rummana Hussain in the permanent collection of the Queensland Art Gallery.
- Art India, The Courage of Being Rummana, January–April 1999.
- The New York Times, Rummana Hussain, 47, Indian Conceptual Artist, 18 July 1999.
- The New York Times, Rummana Hussain, 23 October 1998.
- The New York Times, Rummana Hussain: In Order to Join, 16 October 1998.