உருமாற்ற வளர்காரணி-பீட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருமாற்ற வளர்காரணி-பீட்டா ஒன்று (TGF-β1) புரத வடிவ கட்டமைப்பு
உருமாற்ற வளர்காரணி-பீட்டா இரண்டு (TGF-β2) புரத வடிவ கட்டமைப்பு
உருமாற்ற வளர்காரணி-பீட்டா மூன்று (TGF-β3) புரத வடிவ கட்டமைப்பு

உருமாற்ற வளர்காரணி-பீட்டா (Transforming growth factor beta; TGF-β) என்னும் புரதம், உயிரணு பெருக்கம், உயிரணு மாற்றம் மற்றும் பெரும்பான்மையான உயிரணுக்களின் பிற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. இது, நோயெதிர்ப்பு, புற்று நோய், இதய நோய், சர்க்கரை நோய், மார்ஃபான் நோய் அறிகுறிகளின் தொகுப்பு மற்றும் லோயெஸ்-டையட்ஸ் நோய் அறிகுறிகளின் தொகுப்பு ஆகிய உடல்நல பணிகள்/சீர்கேடுகளில் செயலாற்றுகிறது.

உருமாற்ற வளர்காரணி-பீட்டா புரதம் குறைந்தபட்சம் மூன்று ஓரின வடிவங்களில் (TGF-β1, TGF-β2 மற்றும் TGF-β3) சுரக்கப்படுகின்றது. இக்குடும்ப புரதங்களின் நிறுவன உறுப்பினரான TGF-β1, உருமாற்ற வளர்காரணி-பீட்டா (TGF-β) என்னும் இயற்பெயராலேயே அழைக்கப்படுகிறது. உருமாற்ற வளர்காரணி-பீட்டா குடும்பம், பல வளரூக்கிகளைக் கொண்ட உருமாற்ற வளர்காரணி-பீட்டா உயர் குடும்பத்தைச் சார்ந்தவையாகும்.

உருமாற்ற வளர்காரணி-பீட்டா, இயல்பான புறத்தோல் உயிரணுக்களிலும், இளங்கட்ட புற்றுதோற்றத்திலும் சுருக்கக் காரணியாகச் செயலாற்றுகின்றது[1].

உருமாற்ற வளர்காரணி-பீட்டாவைச் சுரக்கும் சில உயிரணுக்கள் அதற்கான ஏற்பிகளையும் கொண்டுள்ளன. இவ்விதம் காரணிகளைச் சுரக்கும் உயிரணுக்களின் மீதே செயலாற்றுதல் தன்சுரப்பு சமிக்ஞை எனப்படும். புற்று உயிரணுக்களால் அதிகமாகச் சுரக்கப்படுகின்ற உருமாற்ற வளர்காரணி-பீட்டா அண்மையில் உள்ள உயிரணுக்களின் மீதும் செயல்புரிகின்றது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]