உருமானா உசேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருமானா உசேன்
தேசியம்பாக்கித்தானியர்
கல்விவரைபட வடிவமைப்பாளர்
படித்த கல்வி நிறுவனங்கள்மத்திய கலை மற்றும் கைவினைப் பொருட்கள் நிறுவனம்
பணிகலைஞர், எழுத்தாளர், கல்வியாளர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கராச்சி வாலா - ஒரு நகரத்திற்குள் ஒரு துணைக்கண்டம் (Karachiwala - A subcontinent within a city)

உருமானா உசேன் (Rumana Husain) பாக்கித்தானின் கராச்சியைச் சேர்ந்த ஒரு கலைஞரும், கல்வியாளரும்ர், குழந்தைகள் எழுத்தாளரும் ஆவார்.[1] [2] இவர் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் புத்தகங்களையும், "காப்பி-மேசை புத்தகம்", "கராச்சி வாலா - ஒரு நகரத்திற்குள் ஒரு துணைக்கண்டம்" ஆகிய புத்தகங்களை எழுதியவர்.[3] [4]

கல்வி[தொகு]

உருமானா உசேன் தனது உயர்நிலைப் பள்ளியை 1962இல் மாதிரி மேல்நிலை பெண்கள் பள்ளியில் முடித்தார். 1972 இல் மத்திய கலை மற்றும் கைவினை நிறுவனத்தில் வரைபட வடிவமைப்பில் நான்கு வருட சான்றிதழ் படிப்பை முடித்தார்.[5]

தொழில்[தொகு]

தனது முதல் குழந்தை பிறந்தபோது ஒரு கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது குழந்தைக்கு விளையாட பஞ்சடைடைத்த பொம்மைகளைச் செய்து தந்தார். விரைவில் இவர் பொம்மைகளுக்கான கண்காட்சியை நடத்தினார். இவர் தனது கலைப்படைப்புகளின் சுவரோவியங்களையும், கண்காட்சிகளையும் உருவாக்கினார். இவரது பணி இருபத்தைந்து ஆண்டுகளாக ஆகாகான் குழந்தைகள மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேலும் சுவிட்சர்லாந்தில் உள்ள இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைமையகத்திலும் அதன் கராச்சி அலுவலகத்திலும் கூட இவரது சுவரோவியங்கள் நிறுவப்பட்டுள்ளன.[6]

உருமானா உசேன் பின்னர் கற்பித்தலை நோக்கி தனது கவனத்தைத் திருப்பினார். பள்ளி குழந்தைகளுக்கு கலைகளைக் கற்பித்தார். மொழி கற்பிப்பதற்கான புதுமையான அணுகுமுறைகளில் பாக்கித்தான் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு இவர் பயிற்சி அளித்தார். இவர் சிஏஎஸ் பள்ளியுடன் அதன் துணை முதல்வராக இணைந்தார். 1996இல் பள்ளியை விட்டு வெளியேறினார். இவர் இளையோர் பிரிவின் தொடக்கத்தில் பள்ளியில் 10 ஆண்டுகள் பணியாற்றினார். மேலும், 1990இல் பள்ளியின் மழலையர் பள்ளிப் பிரிவை நிறுவினார்.[7] இவர் அதன் தலைமையாசிரியராகவும் இருந்தார்.

1988ஆம் ஆண்டில், உசேன், புத்தகக் குழுமம் என்ற வெளியீட்டு நிறுவனத்தை நிறுவினார். அங்கு இவர் 8 ஆண்டுகள் தன்னார்வலராக குழந்தைகளுக்காக உருது புத்தகங்களை எழுதி அவற்றைத் திருத்தி வெளியிட்டார். புத்தகக் குழுமத்தில் பணியாற்றிய காலத்தில், இவர் கராச்சியிலும், பாக்கித்தானின் சில பகுதிகளிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார். இவர் ஆசிரியர்களுக்கான கையேடுகளையும், ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தையும் உருவாக்கி 6 ஆண்டுகள் பணியாற்றினார். 1997 முதல் 2001 வரை 4 ஆண்டுகள் புத்தகக் குழுமத்தில் இயக்குநராகப் பணியாற்றினார்.[8] [9]

2001ஆம் ஆண்டில், அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான குழந்தைகள் அருங்காட்சியகத்தில் சேர்ந்தார். அங்கு இவர் 6 ஆண்டுகள் செயல்பாட்டு மற்றும் வெளியீட்டின் தலைவராக இருந்தார்.

உசேன் 2005இல் "நுகாஆர்ட்" (NuktaArt) என்பதன் இணை நிறுவன மூத்த ஆசிரியராகவும், பங்குதாரரும் ஆனார்.[10] இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வெளியிடப்படும் கலை இதழாகும். இது இது பத்து வருடங்களாக வெளியிடப்பட்டது. இதில் இவர் மூத்த ஆசிரியராக இருந்தார்.[11] [12] [13]

இவர் குழந்தைகள் இலக்கிய விழாவில் இயக்குநர்கள் குழுவில் கௌரவ உறுப்பினராக உள்ளார். இவர் கராச்சி மாநாட்டு அறக்கட்டளையின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இது சம்பந்தப்பட்ட அறிஞர்கள், ஆர்வலர்கள் ,நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கராச்சி தொடர்பான பிரச்சினைகளில் சொற்பொழிவை உருவாக்குவதற்கும், ஆராய்ச்சியை வழங்குவதற்கும், பொது நிகழ்வுகளை நடத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்கும் ஒரு அமைப்பாகும்.[14]

டான், திரிப்யூன் போன்ற இதழ்களுக்கும், செய்தித்தாள்களுக்கும் உசேன் பங்களிக்கிறார்.[15] [16] டிவி ஒன் என்ற பாக்கித்தானியத் தொலைக்காட்சியில் கலை மற்றும் கட்டிடக்கலை பற்றிய முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் உருமானா வழங்கியுள்ளார்.[17]

சான்றுகள்[தொகு]

 1. Ebrahim, Zofeen T.; February 18; 2020. "World's tallest mural is an ode to Karachi's marine life and mangroves" (in en-US). https://www.thethirdpole.net/2020/02/18/worlds-tallest-mural-is-an-ode-to-karachis-marine-life-and-mangroves/. 
 2. Ebrahim, Zofeen T. (2020-09-08). "The Pakistani children's author focusing on the planet" (in en). https://images.dawn.com/news/1185750. 
 3. "News stories for Rumana Husain - DAWN.COM" (in en). https://www.dawn.com/authors/1253/rumana-husain. 
 4. "Rumana Husain:The News on Sunday (TNS) » Weekly Magazine - The News International" (in en). https://www.thenews.com.pk/. 
 5. "Rumana Husain – Karachi Art Directory" (in en-US). https://karachiartdirectory.com/art-critics-writers/rumana-husain/. 
 6. "Personal Spaces – Rumana Husain's" (in en). 2016-01-30. https://thekarachiwalla.com/2016/01/30/personal-spaces-rumana-hussains/. 
 7. Zubaida Mustafa official. "interview with Ruman Husain" இம் மூலத்தில் இருந்து 2020-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200925105027/http://www.zubeidamustafa.com/interview-with-childrens-books-author-rumana-husain. 
 8. Karavan. "Ruman Husain". http://karvan.org/rumana-husain/. 
 9. Thatsmag. "Interview with Rumana Husain". https://www.thatsmags.com/shanghai/post/3657/litfest-rumana-husain. 
 10. "Art With a View" (in en). https://newslinemagazine.com/magazine/art-with-a-view/. 
 11. nuktaartmag. "nuktaart" இம் மூலத்தில் இருந்து 2020-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924101724/http://www.nuktaartmag.com/. 
 12. "NuktaArt open call for submissions" (in en). 2011-01-30. http://tribune.com.pk/story/111230/nuktaart-open-call-for-submissions. 
 13. "Nukta Art – Karachi Art Directory" (in en-US). https://karachiartdirectory.com/art-publications/nukta-art/. 
 14. "Story-Telling Session by Rumana Husain" (in en-US). https://www.pakistanchowk.com/events-1/2018/11/16/story-telling-session-by-rumana-husain. 
 15. "Three decades later" (in en-GB). 2010-05-01. https://www.himalmag.com/three-decades-later/. 
 16. "Administrative overlaps, poor planning ail Karachi" (in en). 2019-03-02. http://tribune.com.pk/story/1921835/administrative-overlaps-poor-planning-ail-karachi. 
 17. "Rumana Husain – Karachi Literature Festival" (in en-US). https://www.karachiliteraturefestival.com/speakers/rumana-husain-2/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருமானா_உசேன்&oldid=3672862" இருந்து மீள்விக்கப்பட்டது