உள்ளடக்கத்துக்குச் செல்

உருப்சா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரூப்சா ஆற்றில் கப்பல்

உருப்சா ஆறு (Rupsa River) வங்காள தேசத்தின் தெற்கு வங்காள தேச மாநிலத்தில் பாயும் ஓர் ஆறாகும். கங்கையின் கிளை நதியான உருப்சா ஆறு வங்காளதேசத்தின் மிகவும் பிரபலமான ஆறுகளில் ஒன்றாகும்.

பைரப்பு மற்றும் மதுமதி நதிகளின் சங்கமத்தை உருவாக்கி, பசூர் ஆற்றில் பாய்கிறது.[1] ஆற்றின் முழு நீளமும் அலைகளால் பாதிக்கப்படுகிறது.[1]

உரூப்சா ஆறு, குல்னா

உரூப்சா ஆறு குல்னா நகரம் வழியாகப் பாய்ந்து, மோங்லா கால்வாயில் போசூர் நதி வழியாக வங்காள விரிகுடாவில் இணைகிறது. சல்னா அருகேவும், இது அதன் பெயரை பசூர் நதி என்று மாற்றி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

உரூப்சா ஆற்றின் கரையில் கணிசமான எண்ணிக்கையிலான மீன்பிடித் தொழில்கள், கப்பல் கட்டும் தளங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. கணிசமான மக்கள் தொகை இந்த நதியில் மீன் பிடிப்பதையே சார்ந்துள்ளது. கான் சகான் அலி பாலம் என்று பெயரிடப்பட்ட ஆற்றின் குறுக்கே உள்ள ஒரு பாலம், குல்னா மற்றும் பேகர்காட்டு மாவட்டங்களை இணைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Chowdhury, Masud Hasan (2012). "Rupsa-Pasur River". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருப்சா_ஆறு&oldid=4275685" இலிருந்து மீள்விக்கப்பட்டது