உருசிய பாரசீக போர் (1804–1813)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உருசிய பாரசீக போர் (1804-1813) என்பது பாரசீக பேரரசு மற்றும் ஏகாதிபத்திய உருசியா ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற பல போர்களில் ஒன்றாகும். இந்த இரண்டு அரசுகளுக்கு இடையே நடைபெற்ற எல்லாப் போர்களையும் போலவே இப்போரும் ஒரு எல்லை பிரச்சினையில் இருந்து உருவானது. புதிய பாரசீக மன்னரான பத் அலி ஷா கஜர் தனது ராச்சியத்தின் வடக்கு கோடியில் இருந்த நவீன கால ஜார்ஜியா மீதான தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்பினார். ஜார்ஜியாவானது 1796 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு உருசிய பாரசீக போருக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு உருசிய ஜார் மன்னரான முதலாம் பாலால் இணைத்து கொள்ளப்பட்டிருந்தது. பாரசீக மன்னரைப் போலவே ஜார்ஜ் மன்னர் முதலாம் அலெக்சாண்டரும் அரியணைக்கு புதிதாக வந்திருந்தார். பிரச்சினைக்குரிய பகுதிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதில் பாரசீக மன்னருக்கு இணையான உறுதியுடன் இருந்தார்.

இந்த போரானது 1813 ஆம் ஆண்டு குலிஸ்தான் ஒப்பந்தத்திற்குப் பிறகு முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி பிரச்சனைக்குரிய பகுதியான ஜார்ஜியாவானது ஏகாதிபத்திய உருசியாவிற்கு கொடுக்கப்பட்டது. மேலும் ஈரானிய பகுதியான தகேஸ்தானும் உருசியாவிற்கு கொடுக்கப்பட்டது. தகேஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தற்போதைய அசர்பைஜானிலும் சில பகுதிகள் ஆர்மீனியாவிலும் உள்ளன.[1]

உசாத்துணை[தொகு]

  1. Daniel, Elton L. "Golestān Treaty". Encyclopædia Iranica.