உருக்‌ஷானா அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருக்‌ஷானா அகமது
பிறப்பு1948
கராச்சி, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கராச்சி பல்கலைக்கழகம்
இரீடிங் பலகலைக்கழகம்
இலண்டன் கலைப் பல்கலைக்கழகம்
பணிபுதின எழுத்தாளர்
அறியப்படுவதுசிறுகதைகள், கவிதை, நாடகங்கள், மொழிபெயர்ப்பு
வலைத்தளம்
rukhsanaahmad.com

உருக்‌ஷானா அகமது (Rukhsana Ahmad)(பிறப்பு 1948) பாக்கித்தானைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் மேலும் சிறுகதைகள், கவிதை, நாடகங்கள், மொழிபெயர்ப்பு ஆகியவற்றிலும் பங்கேற்று வருகிறார். திருமணத்திற்குப் பிறகு மேலதிக படிப்புகளுக்காக இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து எழுத்துத் தொழிலைத் தொடர்ந்தவர். இவர் ஆசிய எழுத்தாளர்களுக்காக, குறிப்பாக பெண்களுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். [1] [2]

சுயசரிதை[தொகு]

உருக்‌ஷானா அகமது பாகிக்கித்தானின் கராச்சியில் 1948இல் பிறந்தார். பாக்கித்தானின் பல்வேறு நகரங்களில் உள்ள பல பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். தனது கல்லூரிக் கல்வியை பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் கராச்சியிலும் முடித்தார். பின்னர், கராச்சி பல்கலைக்கழகத்திலிருந்து ஆங்கில இலக்கியம், மொழியியலில் முதுகலைப் பட்டத்தை பெற்றார். பின்னர் இவர் கராச்சி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு திருமணம் செய்து கொள்ளும் வரை ஆங்கில இலக்கியம் கற்பித்தார். [3] திருமணத்திற்குப் பிறகு இவர் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். அங்கு இவர் ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் கலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் .

தொழில்[தொகு]

தனது குடும்பத்தினருடன் இலண்டனில் இவர் ஒரு நாடக ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வி சின்ஃபுல் உமன் (1991) என்ற தலைப்பில் பெண்கள் பாதுகாப்பு சார்ந்த பொருளில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். அல்தாஃப் பாத்திமா என்பவரின் உருது மொழி புதினமான தி ஒன் ஹூ டிட் நாட் ஆஸ்க் (1993) என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். இவரது முதல் புதினமான தி ஹோப் செஸ்ட் (1996), என்பது இரண்டு "வெவ்வேறு உலகங்களில்" வளர்க்கப்பட்ட ஒரு இளம் பெண்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறது. [2] 1991ஆம் ஆண்டில், கிளீவ்லாந்தில் வசிக்கும் எழுத்தாளராக, ட்ரீம்ஸ் இன் வேர்ட்ஸ் அண்ட் டாட்டர்ஸ் ஆப் த ஈஸ்ட் என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். [3]

நாடகங்கள்[தொகு]

ஒரு பிரபல நாடக ஆசிரியராக இவர் சாங் ஃபார் எ சான்க்சுவரி , மிஸ்டேக்கன் . . .அன்னி பெசன்ட் இன் இன்டியா (2007) போன்ற பல நாடகங்களை எழுதியுள்ளார். இது வானொலியிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் இடம் பெற்றது. மேலும், இவர் பிபிசி வானொலிக்காக ஜீன் ரைஸ் என்பவரின் வைட் சர்காசோ சீ, நவால் எல் சாதவியின் வுமன் அட் பாயிண்ட் ஜீரோ, சல்மான் ருஷ்டியின் மிட்நைட் சில்ட்ரன், நதீம் அஸ்லாம் எழுதிய மேப்ஸ் ஃபார் லாஸ்ட் லவ்வர்ஸ் உள்ளிட்ட நாடகங்களையும் இவர் தழுவி எழுதினார். 1991 ஜூன் மற்றும் அக்டோபரில், இவரது சாங் ஃபார் எ சான்க்சுவரி என்ற நாடகம் பிரிட்டனில் பல திரையரங்குகளில் நிகழ்த்தப்பட்டது. [3]

இவர், 1984இல் இலண்டனில் நடந்த ஆசிய பெண்கள் எழுத்தாளர்கள் கூட்டணியில் உறுப்பினரானார். ரீட்டா வூல்ப் என்பவருடன் இணைந்து, 1990இல் இவர் இலண்டனில் காளி நாடக நிறுவனத்தை நிறுவினார். இதற்கு எட்டு ஆண்டுகள் தலைமை தாங்கினார். தெற்காசியக் கலை மற்றும் இலக்கியத்தை ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர் காப்பகத்தில் சாலிடா (இப்போது சதா ) என்ற பெயரில் நிறுவினார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தின் குயின் மேரி கல்லூரியில் ராயல் இலக்கிய நிதியத்தின் ஆலோசகராக இருக்கிறார். [2]

விருதுகள்[தொகு]

இன சமத்துவ ஆணைய விருது, பிரிட்டன் எழுத்தாளர்களின் சங்க விருது, சோனி விருது, சூசன் ஸ்மித் பிளாக்பர்ன் பரிசு (2002) போன்ற பிரபலமான பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடகமான ரிவர் ஆன் ஃபயர் (2001) சூசன் ஸ்மித் பிளாக்பர்ன் நாடக விருதுகளில் இரண்டாவது இடத்தை வென்றது. வைட் சர்காசோ சீ என்ற இவரது நாடகத்திற்காக இவர் எழுத்தாளர்களின் பிரிட்டன் வானொலி சங்கத்தின் தழுவல் விருதைப் பெற்றார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rukhsana Ahmad". The Feminist Press. 5 April 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 "Rukhsana Ahmad". Diaspora Writers UK. 4 ஏப்ரல் 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 "2nd Advisory Committee of NPCP in Islamabad - National ..." (PDF). NPCP.net. 5 ஏப்ரல் 2016 அன்று மூலம் (pdf) பரணிடப்பட்டது. 21 March 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருக்‌ஷானா_அகமது&oldid=3545167" இருந்து மீள்விக்கப்பட்டது