உருக்சனா சுல்தானா
உருக்சனா சுல்தானா Rukhsana Sultana | |
|---|---|
| பிறப்பு | மீனு பிம்பெட் சனவரி 13, 1934 சலந்தர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
| பணி | அரசியல் செயற்பாட்டாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1970–1976 |
| வாழ்க்கைத் துணை | சிவிந்தர் சிங் விர்க்கு (விவாகரத்தானவர்) |
| பிள்ளைகள் | அம்ரிதா சிங் |
| உறவினர்கள் | கான்-பானு குடும்பம் |
உருக்சனா சுல்தானா (Rukhsana Sultana) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார். மீனு பிம்பெட்டு என்ற இயற்பெயரால் அறியப்படுகிறார். 1975 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் அவசரநிலை நிலை அறிவிக்கப்பட்டபோது சஞ்சய் காந்தியின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவராக அறியப்பட்டார்.[1] இந்தக் காலகட்டத்தில் பழைய தில்லியின் முசுலீம் பகுதிகளில் சஞ்சய் காந்தியின் கருத்தடை பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கியதற்காகவும் இவர் அறியப்பட்டார்.[2][3][4][5]
அவசரநிலையின் தலைமை கவர்ச்சிப் பெண்ணான உருக்சனா சுல்தானா, தில்லியின் ஜமா மசூதி முசுலிம் குடியிருப்பில் தனது பாரிய குடும்பக் கட்டுப்பாடு இயக்கங்களுக்காக கணிசமான அரசியல் சக்தியாக அங்கீகரிக்கப்பட்டார். சமூக ஆர்வலரும், கடை உரிமையாளருமான உருக்சனா, தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டார். மக்களை கருத்தடை செய்வதற்கான இவரது அதிகப்படியான முயற்சிகள், மீள்குடியேற்றத் திட்டத்துடன் சேர்ந்து, காவல்துறையினருடன் பல இரத்தக்களரி மோதல்களில் கிளர்ச்சி செய்ய குடியிருப்பாளர்களை விரோதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இயரினா அக்கு மற்றும் மதன் மோகன் பிம்பெட்டு ஆகியோருக்கு மீனு பிம்பெட்டு என்ற பெயரில் ருக்சனா பிறந்தார்.[6] பிம்பெட்டு ஓர் இந்து மற்றும் இந்திய விமானப்படையின் அதிகாரி ஆவார். இவரது மனைவி இயரீனா ஒரு முசுலீம் பெண்ணாவார். இவருடைய தந்தை மியான் எகசான்-உல்-அக்கு, ஒரு காலத்தில் பிகானேர் சமத்தானத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். சலந்தரில் இருந்து வந்த எகசான்-உல்-அக்கு ஒரு நில உரிமையாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். உருக்சானாவின் தந்தை இவரது தாயை விவாகரத்து செய்த பிறகு, அவர் ஆசா பிம்பத்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரிடமிருந்தும் மதுசூதன் மற்றும் தகிரா பிம்பட்டு என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். இந்தியத் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்களில் நன்கு அறியப்பட்ட பல நபர்களுடன் பிறப்பு மற்றும் திருமணம் மூலம் உருக்சனா இணைக்கப்பட்டார். அவரது தாய்வழி அத்தை பேகம் பாரா (அவரது தாயின் சகோதரி) திலீப் குமாரின் தம்பி நசீர் கானை மணந்து கொண்டார்.
உருக்சனா இந்திய ராணுவத்தில் அதிகாரியாகவும், குசுவந்த் சிங் மருமகனாகவும் இருந்த சவிந்தர் சிங்கை மணந்தார். பின்னர் இந்த இணை விவாகரத்து பெற்றது. இவர்களுக்கு அம்ரிதா சிங் என்ற ஒரு மகள் இருந்தார், அவர் 1980 ஆம் ஆண்டுகளில் முன்னணி பாலிவுட் நடிகையாக இருந்தார். சைஃப் அலி கானுடன் அமிர்தாவின் திருமணத்திலிருந்து பிறந்த சாரா அலி கான் மற்றும் இப்ராகிம் அலி கான் ஆகியோருக்கு ருக்சானா பாட்டியாவார்.[7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rukhsana Sultana: The chief glamour girl of the Emergency". 14 August 2014.
- ↑ "Tragedy at Turkman Gate: Witnesses recount horror of Emergency". Hindustan Times. 28 June 2015.
- ↑ Tarlo, Emma (2000). Das, Veena; et al. (eds.). Violence and subjectivity. Berkeley: University of California Press. p. 266. ISBN 9780520216082.
- ↑ Tarlo, Emma (2001). Unsettling memories : narratives of the emergency in Delhi. Berkeley: University of California Press. pp. 38–39, 143. ISBN 9780520231221. Retrieved 13 February 2017.
- ↑ French, Patrick (2011). India : a portrait (1st U.S. ed.). New York: Alfred A. Knopf. p. 43. ISBN 978-0307272430. Retrieved 13 February 2017.
rukhsana sultana .
- ↑ Mathur, Abhimanyu (April 24, 2024). "Meet 'glamour girl of Emergency', niece of one superstar, mother of another; was most hated, feared person in Delhi in." DNA India. Retrieved October 13, 2024.
- ↑ Varma, Anuradha (14 June 2009). "In Bollywood, everyone's related!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 21 April 2016.
- ↑ "Film Actress Amrita Singh - Bollywood Star Amrita Singh - Amrita Singh Biography - Amrita Singh Profile". Iloveindia.com. Retrieved 2016-09-13.