உள்ளடக்கத்துக்குச் செல்

உருக்குமணி பயா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருக்குமணி பயா நாயர்
துறைமொழியியல்
அறிவாற்றல்
இலக்கியக் கோட்பாடு
பணியிடங்கள்இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
வாஷிங்டன் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
இணையதளம்
sites.google.com/site/rukminibhayanairshomepage/

உருக்குமணி பயா நாயர் (Rukmini Bhaya Nair) இந்தியாவின் மொழியியலாளரும், கவிஞரும், எழுத்தாளரும் மற்றும் விமர்சகரும் ஆவார். பிரித்தானிய அமைப்புடன் இணைந்து 1990 ஆம் ஆண்டில் கவிதைகளின் சங்கம் ஏற்பாடு செய்த "அகில இந்தியக் கவிதைப் போட்டியில்" தனது கவிதைக்காக முதல் பரிசை வென்றார்.[1] இவர் தற்போது புது தில்லியின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் பேராசிரியராக உள்ளார்.[2] உருக்குமணி நாயர் இந்தியாவில் இந்துத்துவ சித்தாந்தம் மற்றும் சமய மற்றும் சாதி பாகுபாட்டை விமர்சித்ததற்காக அறியப்படுகிறார்.

1982 ஆம் ஆண்டில் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இருக்மிணி பயா நாயர், மொழியியல், அறிவாற்றல் மற்றும் இலக்கியக் கோட்பாடு ஆகிய துறைகளில் தனது பணிக்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டில், பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது கௌரவ முனைவர் பட்டம் பெற்றார்.

உருக்குமணி நாயர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழத்தின் ஆங்கிலத் துறையில் வருகை பேராசிரியராக இருந்தார். மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் சியாட்டிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கற்பித்துள்ளார். சிம்லாவிலுள்ள இந்திய உயர்கல்வி நிறுவனத்திலும், பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலும் முழுமையான உரைகளையும், விரிவுரைகளையும் வழங்கியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Second National Poetry Competition – Prize winning poems".
  2. "Faculty - r-b-nair | Humanities & Social Sciences". hss.iitd.ac.in. Retrieved 2020-09-15.

நூல் ஆதாரங்கள்

[தொகு]

இணைய ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருக்குமணி_பயா_நாயர்&oldid=4379574" இலிருந்து மீள்விக்கப்பட்டது