உருகுவையின் இறப்பில்லா ஆட்டம்
உருகுவையின் இறப்பில்லா ஆட்டம் (Uruguayan Immortal) என்று கருதப்படுவது 1943 ஆம் ஆண்டு உருகுவை சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியில் பி. மோலினாரிக்கும் லூயிசு ரௌக்சு கேப்ரல் இருவருக்கும் இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியாகும். கேப்ரல் விளையாடிய அற்புதமான இணைப்பு நகர்வுகள் காலத்தால் அழியாத புகழ்பெற்ற இந்த ஆட்டத்தின் சிறப்பாகும். கேப்ரல் 1948 மற்றும் 1970 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உருகுவையின் சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.
கேப்ரலின் 33 ஆவது நகர்வுக்குப் பின்னர் அவர் இரண்டு யானைகளையும் இழந்திருந்தார். மற்றும் இவருடைய மற்ற மூன்று காய்களும் ஆபத்தில் சிக்கியிருந்தன. இருப்பினும் மோலினாரியால் அவருடைய ராசாவை காப்பாற்ற இயலாமல் போகிறது. பிரெட்டு ரீன்பெல்டு 1944 ஆம் ஆண்டு மே- சூன் மாத சதுரங்க செய்தி இதழில் பக்கங்கள் 11-12 இல் “இந்த ஆட்டம் இறப்பில்லா ஆட்டம் என்பதற்காக விதிக்கப்பட்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ளார் [1]
ஆட்டம்
[தொகு]a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
வெள்ளை:மோலினாரி
கருப்பு:கேப்ரால்
திறப்பு: செமி-சிலேவ் தற்காப்பு
கலைக்களஞ்சியக் குறியீடு இ.சி.ஓ டி 48
1. d4 Nf6 2. Nf3 d5 3. c4 c6 4. Nc3 Nbd7 5. e3 e6 6. Bd3 dxc4 7. Bxc4 b5 8. Bd3 a6 9. 0-0 c5 10. b3 Bb7 11. Qe2 Qb6 12. Rd1 Be7 13. a4 b4 14. Nb1 Rc8 15. Nbd2 cxd4 16. Nc4 Qa7 17. Nxd4 0-0 18. Bd2 a5 19. Nb5 Qa8 20. Nbd6 Bxg2 21. Nxc8 Rxc8 22. Re1 Bf3 23. Qf1 Qd5 24. e4 Rxc4 25. bxc4 Qh5 26. Bf4 Ng4 27. Be2 Nde5 28. h3 Bc5 29. Bg3 Nxf2 30. Bxf2 (படம்) 30... Qg5+ 31. Kh2 Qf4+ 32. Bg3 Bg1+ 33. Qxg1 Ng4+ 0-1.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Winter, Edward. "Chess Notes by Edward Winter: 5529. Uruguayan brilliancy". ChessHistory.com. பார்க்கப்பட்ட நாள் 28 August 2011.