உருகுதன்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பொருளின் உருகுதன்மை[1] என்பது வெப்பப்படுத்தும் போது உருகுதலுக்கு உள்ளாதலின் இலகுத்தன்மை அல்லது அப்பொருள் உருகுவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு எனலாம். பற்றாசு போன்ற பற்றவைப்பில் பயன்படும் பொருள்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறைந்த வெப்பநிலையில் உருகும் தன்மை பெற்றவையாக இருப்பதால் இவை இரண்டு உலோகத்தன்மையுள்ள பொருள்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பற்றாசு போன்ற பொருள்கள் அது எந்த உலோகங்களை இணைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறதோ அவற்றை விட முன்னதாக உருகி விடுகிறது. மறுபுறத்தில், ஊது உலைகளின் உட்புறத்தில் உலை உள்பூச்சாகப் பயன்படுத்தப்படும் தீக்காப்பு செங்கற்கள் மிக அதிக வெப்பநிலையில் மட்டுமே உருகும் தன்மை உடையனவாக இருக்க வேண்டும். எனவே குறைந்த உருகுதன்மையைக் கொண்டிருக்கும். மிக அதிக வெப்பநிலையில் மட்டுமே உருகும் பொருட்கள் அனல் எதிர்ப்புப் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அறிவியல் முறைகள்[தொகு]

சில கலவைகள் / பொருட்களின் உருகுந்தன்மையைக் கண்டறிய, 2 முறைகள் உள்ளன:

வெப்ப சோதனை[தொகு]

உருகு தன்மையைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான சோதனை, மாறக்கூடிய வெப்ப மூலத்தைப் பயன்படுத்துவதும், தொடர்புடைய அளவுகளுடன் அதிகரிப்பதும் ஆகும்.

சாம்பல் உருகுதன்மை சோதனை[தொகு]

நிலக்கரி பகுப்பாய்வின் பின்னணியில், நிலக்கரியின் எஞ்சிய நிலக்கரி சாம்பலின் உருகுதன்மை யைமதிப்புகள் பெரும்பாலும் குறிப்பிடப்படுகின்றன. ஒரு கூம்பு சாம்பல் மாதிரியின் வடிவியல் மாற்றங்களின் அடிப்படையில் அனுபவ முறையைப் பயன்படுத்தி மதிப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. சாம்பலின் இணக்கத்தன்மையைக் கண்டிறிவது ஆர்வத்தைத தூண்டுவதாக உள்ளது, ஏனெனில் இது எரியும் போது உற்பத்தி செய்யப்படும் சாம்பற்கட்டி பொருளின் பண்புகளைத் தோராயமாக குறிக்கிறது. [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருகுதன்மை&oldid=3937261" இலிருந்து மீள்விக்கப்பட்டது